top of page

வழி விட்ட தெய்வம்      

vazhivitta theivam

வழி விட்ட தெய்வம் யார் ?, அவர் ஏன் வழி விட வேண்டும், அவர் எங்கு செல்ல வழி விட்டார் ?, எப்படி வழி விட்டார் ?, எப்போது வழி விட்டார் ?.

                                                 -------------------------------------------------------

வழி விட்ட தெய்வம் எனக்கூறும் போது தெய்வம் தந்த உயிரைக்காப்பாற்ற தெய்வமே வழி விட்டதாகக்கூறப்படுகிறது.

 வழி விட்ட தெய்வத்தைச்சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் செந்தட்டி அய்யனார், மற்றும் கூடமுடைய அய்யனார் இரண்டையும் சேர்த்துப்பார்க்க வேண்டும்.

(தெய்வம் மனிதனுக்குக்கொடுத்த ( உயிரை ) ஆத்மாவைக்காப்பாற்ற மனிதனாகப்பிறந்து, இறந்து, உயிர்த்து, பரலோகம் சென்று, பரலோகத்தை திறந்து, வழி ஏற்படுத்தி, மனிதன் இறந்த பின்பு அந்த ஆத்துமாவுக்குப் பரலோகம் செல்ல வழி விட்டவர் என்பது சரியான அர்த்தம். )

செந்தட்டி அய்யனார் ( சிவப்பு கதவு அய்யனார் )

செந்தட்டி அய்யனார் என்ற கோயில் நமது நாட்டில் உள்ளது,                                          செந்தட்டி என்றால்  தெய்வம் இரத்தம் சிந்தித்திறக்கப்பட்ட கதவு என அர்த்தம் எடுக்க வேண்டும்,

( அய்யனார் = அய்யன் ( தகப்பன், தந்தை ) + யார் )

தட்டி என்றால் கதவு, செந் என்றால் இரத்தம் என எடுக்க வேண்டும், உதாரனமாகச்செந்தழல் என்றால் இரத்த சிவப்பு நிற நெருப்பு ஆகும்.                            செந்நீர் என்றால் இரத்தம் தண்ணீரைப் போலச்சிந்தப்படும்போது செந்நீர் என அழைக்கப்படுகிறது.

செந்நிறம் என்றால் இரத்த சிவப்பு நிறம் செங்கழுநீர் என்றால் கழுமரத்தில் (சிலுவை மரம், காவு தடி ) இருந்து சிந்தும் இரத்தம் ஆகும்.                                                            எனவே செந்தட்டி என்றால் தெய்வம் இரத்தம் சிந்தித்திறந்த கதவு என அர்த்தம்

கூடமுடைய அய்யனார்

கூடம் என்றால் வானம், அல்லது, மேலிடம், அகண்டதளம், பெரிய இடம், என அர்த்தம்  கூடமுடையவர் என்றால் வானம் சென்றவர் அல்லது பரலோகம் சென்றவர் என அர்த்தம்

விளக்கம்

பரிசுத்த வேதாகமத்தின் படியும் சைவ சித்தாந்தத்தின் சூத்திரமான மெய்கண்ட தேவர், எழுதிய சிவஞான போதம் மற்றும் உய்யவந்த தேவ நாயனார் என்ற  திருவுந்தியார் எழுதிய சைவ சித்தாந்தத்தின் நூல் - VI படியும் விளக்கம் என்ன எனப்பார்ப்போம்.

கடவுள் முதலாவது  வாணத்தையும், பூமியையும் படைத்தார் பின்பு ஆதாமையும், ஏவாளையும் படைத்தார். படைக்கப்பட்ட பின்பு மனிதன் கடவுள் இட்ட கட்டளையாகிய பழத்தை உண்ணாதே என்ற கட்டளையை மீறினான், அந்த மீறுதலால் பாவம் உண்டாயிற்று. அந்த பாவத்தினால் மனிதன் பரலோக ராஜ்யத்தை இழந்து போனான். அதற்குப்பின்பு மனிதனை அனேக பாவங்கள் சூழ்ந்து கொண்டது. இதன் விழைவாகப்பூமியில் மனிதனுடைய இரத்தம் சிந்தப்பட்டது, சாபங்கள் உண்டானது. பாவத்தையும் சாபத்தையும் விட்டு வெளியேற அனேக பரிகாரங்கள் செய்தும் அவனுக்கு மீட்பு இல்லை.

எனவே  மனிதனை மீட்கக்கடவுளே மனித அவதாரம் எடுத்து பூமியில் கன்னியின் வயிற்றில் பிறந்து, சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்து, பரலோகம் சென்று கடவுளின் வலது பக்கத்தில் அமர்ந்தார்.

 இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதலினால் தெய்வம் பரலோக வாழ்க்கையின் வாசலைத்திறந்தார் முன்பு பரலோகத்திற்கான வழி திறக்கப்படவில்லை, அவர் உயிர்த்தெழுந்து முதன் முதலில் பரலோகம் சென்று மற்ற மனிதனுக்கு பரலோக வழியை ஏற்படுத்திக்கொடுத்தார்,. நாம் பரலோகம் போக வழி விட்டவர் இயேசு.,

இதன் மூலமாக மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள பிரிவினையை நீக்கினார்.

கடவுளே இரத்தம் சிந்தி மரித்ததால் மனிதனின் பாவத்திற்கும், சாபத்திற்கும் பரிகாரியாக மாறினார்

மனிதன் ( ஆதாம் ) மூலமாக உண்டான பாவத்தினால் இழந்து போன மேலான பரலோக வாழ்க்கைக்கு வழி கிடைத்தது

தெய்வம் நமக்குச்செய்த பரிகாரத்தால் மனிதனுக்கு கிடைத்தது மேலான பரலோக வாழ்க்கை, அவருடைய இரத்தம் சிந்தப்பட்ட சிலுவை மரணத்தை நினைவு கூறும் போது நமக்கு பரலோக ராஜ்யம் செல்ல வழி கிடைக்கிறது.

1) படைப்பு

கடவுள்  முதலாவது  வாணத்தையும், பூமியையும் படைத்தார் பின்பு ஆதாமை, தனது சாயலில் படைத்து அவனை ஏதேன் தோட்டத்தில் வைத்தார். முதல் மனிதன் மண்ணிலிருந்து உண்டாக்கப்பட்டதால் அவனுக்கு மனுசன் (ஆதாம்) என் பெயரிட்டார்,. பின்பு கடவுள் அவனது விலா எலும்பிலிருந்து ஒரு பெண்ணைப் படைத்தார். எல்லா மனிதருக்கும் தாயானவள் என்று பொருள்படும்படி அவளுக்கு ஏவாள் எனப் பெயரிடப்பட்டது.

இந்த படைப்பு பற்றி பரிசுத்த வேதாகமத்தில் அதிகமாக சொல்லப்பட்டு இருக்கிறது

சைவ சித்தாந்தத்தின் சூத்திரமான மெய்கண்ட தேவர், எழுதிய சிவஞான போதம் முதல் சூத்திரம் பாடல் 1 அழகாக ஆண், பெண், உலகம் ஆகிய மூன்றின் படைப்பின் ரகசியத்தைப்பற்றிப்பேசுகிறது.

(சிவஞான போதம்  மொத்தம் - 12 சூத்திரங்கள்,      முதற் சூத்திரம்,    பாடல் எண் : 1)

அவன் அவள் அதுஎனும் அவைமூ வினைமையில்
தோற்றிய திதியே ஒடுங்கிமலத் துள தாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர்.

http://thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=13&Song_idField=1004&padhi=015+

அவன் = ஆதாம், அவள் = ஏவாள், அது = உலகம் என்ற மூன்று வினைகள் அதாவது மூன்று வகையான படைப்பின்  செயல்களால் படைக்கப்பட்டது

(உலகம் தெய்வத்தின் வார்த்தையிலிருந்து, ஆதாம் மண்ணிலிருந்து, ஏவாள் ஆதாமின் விலா எலும்பிலிருந்து, என்ற மூன்று செயல்கள் )

 

பரிசுத்த வேதாகமம்

ஆதி 1:1 ( அது )

ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.

ஆதி 2:7  ( அவன் )

தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.

ஆதி 2 21,22 ( அவள் )

அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார். தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார்.

2.) பாவத்தில் விழுதல்

பின் தேவன் ஆதாமை ஏதேன் தோட்டத்திலே வைத்து "நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம், ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்" என்று கட்டளையிட்டார். (ஆதி 2:16,17).                                                                  ஆதாமும் ஏவாளும் "நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்" என்ற தேவனுடையக் கட்டளையை  மீறி அந்த பழத்தைப்புசித்ததால் பாவம் உண்டானது. பாவம் உண்டானதினால் பரலோக வாழ்க்கையை ( சாவாமையை ) இழந்தார்கள்.

மனிதன் பாவத்தில் விழுந்ததை மெய்கண்டதேவர் எழுதிய  சிவஞான போதம் முதற் சூத்திரம்,    பாடல் எண் : 1  அழகாக எழுதியுள்ளார். அவர் பாவத்தை மலம் என்று குறிப்பிடுகிறார்.

 ஆதாம், ஏவாள், உலகம் என்ற மூன்று வினைகள் உருவாக்கப்பட்ட உடனே படைப்பின் மேன்மையில் இருந்து குறைவு பட்டு ( மலத்துலதாம் ) பாவத்துக்குள்ளானது என புலவர் கூறுகிறார்

பாடல் எண் : 1 

அவன் அவள் அதுஎனும் அவைமூ வினைமையில்
தோற்றிய திதியே ஒடுங்கிமலத் துள தாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர்.

மனிதன் பாவத்தில் விழுந்ததை திருவுந்தியார் அழகாக தனது பாடல் 41ல் எழுதியுள்ளார்.-- சைவ சித்தாந்த நூல்கள் - VI உய்யவந்த தேவ நாயனார் என்ற  திருவுந்தியார் பாவத்தை அத்தி என்று குறிப்பிடுகிறார்..

(அத்தி atti s. Killing, murder, கொலை. )

திருவுந்தியார்   பாடல் எண் : 41

 

முத்தி முதற்கொடி மோகக் கொடிபடர்ந்(து)
அத்தி பழுத்ததென் றுந்தீபற
அப்பழ முண்ணாதே யுந்தீபற .

 

https://shaivam.org/saiva-siddhanta/thiruvundiya-uyyavandadeva-nayanar

 

தெய்வத்தால் பாவமற்ற நிலையில் ( முத்தி அடைவதற்கு ) படைக்கப்பட்ட முதல் மனிதனுக்குப்பழத்தை உண்ண வேண்டும் என்ற இச்சை எனும் மோகக்கொடி படர்ந்தது அதன் விளைவாகப்பாவம் அவனைப்பற்றிக்கொண்டது, எனவே பாவமாகிய அந்த பழத்தை உண்ணக்கூடாது.

3.)கிறிஸ்துவின் பிறப்பு

பாவத்தில் இருந்து மனிதக்குலத்தை மீட்க கடவு;ள் தன் ஒரே பேரான குமாரனை இந்த உலகதிற்க்கு அனுப்பி அவரை பலியாக ஒப்புக்கொடுத்தார், அவரே மீட்கும் பொருள் ஆனார்.

ரோமர் 8:3 

......தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.

திருவுந்தியார் தனது முதல்பாடலில் மெய்ப்பொருளாகிய கடவுளை யாரும் அகளமாய் அறிவது அரிது அதாவது யாரும் கடவுளை அவ்வளவு சீக்கிரமாக அறிந்து கொள்ள முடியாது அவர் எல்லோருக்கும் எல்லாமுமாய் வானத்தை விட்டு இறங்கி வந்து மனிதனாகப்பிறந்து தன்னைத்தானே பலியாக ஒப்புக்கொடுத்தார். எனக்குறிப்பிடுகிறார்.

 

திருவுந்தியார்--பாடல் எண் : 1

அகளமாய் யாரும் அறிவரி தப்பொருள்
சகளமாய் வந்ததென் றுந்தீபற
தானாகத் தந்ததென் றுந்தீபற.

 

4 ) மீட்பு

மனிதனை மீட்கக்கடவுளே மனித அவதாரம் எடுத்து பூமியில் கன்னியின் வயிற்றில் பிறந்து, சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்து, பரலோகம் சென்று கடவுளின் வலது பக்கத்தில் அமர்ந்தார்.                                                                      

பரிசுத்த வேதாகமம்:

யோவான் 3:16:17

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.    உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.

திருவுந்தியார்.

திருவுந்தியார் தனது 3வது பாடலில் தெய்வம் தன் சாவைக்கொண்டு தனக்கு கொடுக்கப்பட்ட புனிதமான வேலையாகிய ஆத்தும மீட்பைச்செய்து முடித்தவர் எனக்குறிப்பிடுகிறார்.

 

பாடல் எண் : 3

கண்டத்தைக் கொண்டு கருமம் முடித்தவர்
பிண்டத்து வாராரென் றுந்தீபற
பிறப்பிறப் பில்லையென் றுந்தீபற .

 

கண்டம் = சாவு,  கர்மம் = வேலை

 

திருவள்ளுவர் தனது 268வது குறளில் இறைவனைப் பெற்ற ஆனையின் படி தன்னுயிர் தானாக முற்றும் சாகக்கொடுத்தவர் என குறிப்பிடுகிறார்

 

குறள் 268:

தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்

 

கடவுளின் ஆனைப்படி இந்த பூமிக்கு வந்து தனது உயிரை முழுமையாக மனிதக்குல மீட்புக்காக சாகக்கொடுத்தவரை ஏனைய மன்னுயிரெல்லாம் தொழும்.

 

5.)வழி ஏற்படுத்துதல்

இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதலினால் தெய்வம் பரலோக வாழ்க்கையின் வாசலைத்திறந்தார் முன்பு பரலோகத்திற்கான வழி திறக்கப்படவில்லை, அவர் உயிர்த்தெழுந்து முதன் முதலில் பரலோகம் சென்று மற்ற மனிதனுக்குப்பரலோக வழியை ஏற்படுத்திக்கொடுத்தார்,. நாம் பரலோகம் போக வழி விட்டவர் இயேசு.,

திருவுந்தியார் தனது 12வது பாடலில் மூலையிருந்தாரை அதாவது வாழ்க்கையில் சோர்ந்து போய் துன்பப்பட்டுச்செய்வது அறியாது மூலையில் அமர்ந்து இருப்பவரை முற்றம் அதாவது மோட்சம் சேர்த்தவர் எனக்குறிப்பிடுகிறார்

 

திருவுந்தியார் பாடல் 12

மூலையி ருந்தாரை முற்றத்தே விட்டவர்
சாலப் பெரியரென் றுந்தீபற
தவத்தில் தலைவரென் றுந்தீபற
.

                                                                                                       

பரிசுத்த வேதாகமம்                                                        

லூக்கா 24:50,51

பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார். அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.

1 கொரிந்தியர் 15:20,21

ஆனால் இப்போதோ, இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது. 

 ஒரு மனிதர் வழியாகச் சாவு வந்ததுபோல ஒரு மனிதர் வழியாகவே இறந்தோர் உயிர்த்தெழுகின்றனர். 

I கொரிந்தியர் 15:51,52

இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை;  ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்

.guru

bottom of page