உருவாய் அருவாய்
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய்,அருள்வாய் குகனே.
1 ) பாடல் அர்த்தம்
உருவாய் = உருவத்தில் இருப்பவராய்
அருவாய், = உருவம் இல்லாதவராய்
உளதாய் = சத்தியமாக ( Truth ) இருப்பவர்
இலதாய் = மரித்தவராய்
மருவாய் = இனைப்பவராய்
மலராய், = மலர் போல மலர்ந்தவராய் (உயிர்த்தவராய்)
மணியாய் = கோதுமை மணி போலப்பலன் கொடுத்தவராய்
ஒளியாய் = உலகிற்கு ஒளியாய் ( light )
கருவாய் = உலகின் கருப்பொருளாய் (பரம்பொருள்)
உயிராய் = நித்திய ஜீவனாக ( Everlasting Life )
கதியாய் = வைகுண்டம் / மோட்சம் செல்லும் வழியாய் ( Way )
விதியாய் = தெய்வ ஆனையின்படி (கட்டளை) பூமிக்கு வந்தவராய்
குருவாய் = பரலோகம் அழைத்துச்செல்லும் கிறிஸ்துவாய் (குரு)
வருவாய், = திரும்பவும் வருகிறவராய்
அருள்வாய் = அருள் (ஆவியின் வரம்) தருபவராய்
குகனே = ( கு-அவனே ) குமாரனே ( son of God ), குரு அவனே
இயேசு கிறிஸ்துவைப் பற்றி முழு பரிசுத்த வேதாகமத்தில் சொல்லப்பட்ட விசயங்களை இந்த பாடலின் ஆசிரியர் நான்கு வரிகளில் சொல்லி விட்டார். நாம் அதை ஆராய்ந்து பார்க்கவேண்டும்
Jesus said I am the light of the world: john 8:12
Jesus saith unto him, I am the way, the truth, and the life: John 14:6
2 ) விளக்கம்
உருவமே இல்லாதவர், தெய்வ ஆனையின் படி உலகிற்கு ஒளியாய், மனித உருவில் பூமிக்கு வந்து, பாவத்தில் இருந்த மனிதக்குலத்தைக் கடவுளோடு இணைக்க, கோதுமை மணி போல மரித்து, உயிர்த்து, கருப்பொருளாகி, இன்றும் நம் உள்ளத்தில் சத்தியமான தெய்வமாக வாழ்ந்து, மனிதர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கும் வழியாகி, குரு என்ற கிறிஸ்துவாகி, திரும்பவும் பூமிக்கு நியாயாதிபதியாய் வருபவரே, ஆவியின் அருள் (வரம்) தருவாய் குமாரனே(குருவே)
3 ) வேத ஆகமத்தின் அடிப்படையில் விளக்கம்
3.1 ) உருவாய் அருவாய்,
நாம் வாழும் பூமியில் மனிதன் படைக்கப்பட்ட நாள் முதல் கடவுள் மனிதனிடம் வார்த்தை அதாவது சத்தம், அசரீரி (வானத்தில் இருந்து ஒலிக்கும் சத்தம் ) மூலமாகத்தான் பேசினார். தெய்வம் மனிதர்களிடம் பேசும் போது மேகத்தில் இருந்து, வானத்தில் இருந்து, அக்கினியில் இருந்து பேசினார்.
அவருக்கு உருவம் கிடையாது. எனவே தான் அசரீரியாக ( வார்த்தையாக ) இருந்த தெய்வம் இந்த உலகத்தில் மனிதக்குலத்தை மீட்பதற்காக உருவத்தில் வானம் விட்டு இறங்கி வந்து மனித குமாரனாக பிறந்தார்
பரிசுத்த வேதாகமம்
உபாகமம் 4:12
அந்த அக்கினியின் நடுவிலிருந்து கர்த்தர் உங்களோடே பேசினார்; வார்த்தைகளின் சத்தத்தை நீங்கள் கேட்டீர்கள்; அந்தச் சத்தத்தை நீங்கள் கேட்டதேயன்றி, ஒரு ரூபத்தையும் காணவில்லை.
உபாகமம் 5:4
கர்த்தர் மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து முகமுகமாய் உங்களோடே பேசினார்.
3.1.1.) உருவாய்
ரேமர் 1:5
மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்
1யோவான் 4:3
மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கை பண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது
3.1.2.)அருவாய்
யோவான் 1 :1, 14
ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது (
ஆதியில் தெய்வம் வார்த்தை வடிவில் இருந்தார், இதன் விளக்கம் எண்குணத்தான் யார் ? என்ற பக்கத்தில் பார்க்கவும் )
https://www.narrowpathlight.com/eight-characters-of-god
3.2. ) உளதாய் இலதாய்
உளதாய் என்றால் சத்தியமானவர், உண்மையானவர் என் அர்த்தம்
அவரே சத்தியம், அவரே உண்மை, அந்த தெய்வம் மரித்து, உயிர்த்து பரலோகம் சென்று பரம்பொருளாக இருப்பவர்.
அவரை அறிவீர்கள் அவர் உங்களை விடுதலையாக்குவார் ( சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். )
3.2.1 ) உளதாய்
John 1:9
That was the true Light, which lighteth every man that cometh into the world.
எசாயா 11:5
நீதி அவருக்கு அரைக்கட்டும், சத்தியம் அவருக்கு இடைக்
கச்சையுமாயிருக்கும்
யோவான் 14:6
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்
3.2.2 ) இலதாய் (மரித்தவராய்)
வெளி 1:18
மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.
3.3 ) மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்
நம்முடன் இருப்பவராகிய தெய்வம், பாவத்தினால் பரலோகத்தில் உள்ள கடவுளை விட்டு தூரமாகச் சென்ற மனிதனைக்கடவுளுடன் ஒன்று சேர்க்க இரத்தம் சிந்தி மரித்து, கோதுமை மணியைப்போல (விதை) மண்ணில் விதைக்கப்பட்டு அதாவது அடக்கம் பண்ணப்பட்டு உயிர்த்து எழுந்து ஒளியாய் இப்போதும் இருந்து மனிதர்களை இரட்சிக்கிறவர்.
3.3.1 ) மருவாய் ( mediator, இணைப்பவர், ஒப்புரவாக்குகிறவர் )
கொலோசெயர் 1:20
அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று.
எபேசியர் 2:16
பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.
3.3.2 ) மலராய் ( blossom, மலர்ந்தவர், உயிர்த்தவர் )
யோவான் 11:25
இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;
ரோமர் 1:5
மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்.
வெளி 1:18
மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.
3.3.3 ) மணியாய்
யோவான் 12 : 23,24
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மகிமைப்படும்படியான வேளை வந்தது. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்.
3.3.4 )ஒளியாய்
யோவான் 1 : 4,5,9
அவருக்குள் ( இயேசு ) ஜீவன் ( ETERNAL LIFE ) இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை. உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி
ஏசாயா 9 :2
இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது.
John 9 : 5
As long as I am in the world, I am the light of the world.
3.4 ) கருவாய் உயிராய்
தெய்வம் மரித்து, உயிர்த்து பரலோகம் சென்று பரம்பொருளாக இருப்பவர்.
மனிதக்குலம் வாழக்கருப்பொருளாகி, எல்லா மனிதர்களையும் பரலோக வாழ்க்கை கொடுக்கும் உயிராகவும் வந்தவர் ( நித்திய ஜீவன் )
3.4.1 ) கருப்பொருள்
மத்தேயு 20:28
அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார் என்றார்,
1 தீமோத்தேயு 2 : 6
எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே;
3.4.2 ) உயிராய் - ஜீவன் - Everlasting Life
யோவான் 14:6
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். Jesus saith unto him, I am the way, the truth, and the life: no man cometh unto the Father, but by me.
.
3.5. ) கதியாய் விதியாய்
தெய்வ ஆனையின் ( விதி ) படி பூமியில் பிறந்து, மனிதர்களுக்குப் பரலோகம் செல்லும் ( கதி ) வழியாக இருக்கிறவர்
3.5.1 ) கதியாய் ( வழியாய் )
யோவான் 14:6
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
Jesus saith unto him, I am the way, the truth, and the life: no man cometh unto the Father, but by me.
3.5.2. ) விதியாய் ( தெய்வ ஆனை, தீர்மானம், by the Decree declared by GOD )
சங்கீதம் 2:7
தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்;கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்;
I will declare the decree: the LORD hath said unto me, Thou art my Son; this day have I begotten thee.
.
3.6 ) குருவாய் வருவாய்,
இருளில் இருந்து வெளிச்சத்துக்கு அழைத்துச்செல்லும் கிறிஸ்துவாக, உண்மையற்றவைகளில் இருந்து உண்மைக்கு அழைத்துச்செல்லும் குருவாக, வாழ்வு இல்லாததில் இருந்து வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் இயேசுவாக இருப்பவரே திரும்பவும் பூமிக்கு வந்து உமது பரலோக ராஜ்யத்திற்கு அழைத்துச் செல்லும்
3.6.1 ) குருவாய்
மத்தேயு 23:10
நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்.
( குரு யார் என்ற விளக்கத்தைக் கீழ் கண்ட பக்கத்தில் காணலாம் )
https://www.narrowpathlight.com/matha-pitha-guru-deivam
3.6.2 ) வருவாய்
வெளி 1:8
இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம் பற்றுகிறார்
Ii தெசலோனிக்கேயர் 2:1
அன்றியும், சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்திலே சேர்க்கப்படுவதையுங்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால்,.
3.7 )அருள்வாய் குகனே ( குரு அவனே )
உம்முடைய அருளை (பரிசுத்த ஆவியை) கொடுப்பாய் குருவே, கிறிஸ்துவே, அழகானவரே, குமாரனே,
3.7.1 )அருள்வாய்
ரோமர் 5:5
மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.
லூக்கா 11:13
பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.
3.7.2 ) குகனே
குருவே, கிறிஸ்துவே, அழகானவரே, குமாரனே,
guru