top of page
Search
Writer's picturej rajamohan

கொன்றைச்சடையன்-Crown-of-Thorns-முள்முடி

Updated: Feb 27

ாஇறங்கிச்சென்றுதொழுமின்,CrownofThorns,சுந்தரமூர்த்திசுவாமிகள்,திருப்பாட்டு,7ஆம்திருமுறை,தலம்,கழுக்குன்றம்,முள்முடி,கொன்றைச்சடையன்,கன்மலை,மாணிக்கம்,Caesalpinia,கிரீடம்,மணி,வானவில்,கழு, சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு --- 7 -ஆம் திருமுறை ---தலம் : கழுக்குன்றம் - திருக்கழுக்குன்றம் - பதிகம் 7.081 பாடல் 2 - இறங்கிச் சென்று தொழுமின்

Crown-of-Thorns

இறங்கிச் சென்று தொழுமின், இன் இசை பாடியே! பிறங்கு கொன்றைச் சடையன், எங்கள் பிரான், இடம்- நிறங்கள் செய்த மணிகள், நித்திலம், கொண்டு இழி கறங்கு வெள்ளை அருவித் தண் கழுக்குன்றமே.


இறங்கிச் = தன்னைத்தாழ்த்தி அதாவது மனதில் பெருமையில்லாமல் தாழ்த்தி

சென்று தொழுமின்! = விரைந்து சென்று தொழுவீர்களாக

இசை பாடியே = வீணையோடும் சுரமண்டலத்தோடும் . தம்புரோடும் நடனத்தோடும் ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்

பிறங்கு = பெருத்திருக்கும் அதாவது பெரிய

கொன்றைச் = முள் அதிகம் உள்ள ஒரு செடி ( Caesalpinia nuga - முட்கொன்றை )

சடையன் = சடை + அவன், சடை என்பது முடியாகும், முடி என்பது ( முள்முடி ) கிரீடமாகும்.

பிறங்கு கொன்றைச் சடையன் என்பது பெரிய முள்ளுகளினால் செய்யப்பட்ட கிரீடத்தை ( முள்முடி ) தலையில் ஏற்றுக்கொண்டவர் என அர்த்தம்

எங்கள் பிரான், இடம் = எங்கள் தெய்வம் இருக்கும் இடம்

நிறங்கள் செய்த மணிகள், = அவர் வானவில் செய்த விலையுயர்ந்த கல்லாகிய தெய்வம்

நித்திலம், கொண்டு = நித்து + இலம் = நித்திய வீட்டை உடைய தெய்வம்

இழி கறங்கு = கீழே சுற்றி விழுந்த ..

வெள்ளை அருவித் = பரிசுத்த இரத்தமும் தண்ணீரும் அருவி போலத் தரையில் விழுந்த

தண் கழுக்குன்றமே = சாந்தமான தன்மையுள்ள கழுமரமாகிய சிலுவை நிற்கும் மலையே


விளக்கம்

மக்கள் எல்லோரும் தங்களைத்தாழ்த்தி அதாவது மனதில் பெருமையில்லாமல் தாழ்த்தி, சிலுவையில் அறையப்படும் போது அவர் தலையில் பெரிய முள்ளுகளால் ஆன முள் கிரீடத்தை ( முள்முடியை )ஏற்றுக்கொண்ட அந்த தெய்வம் இருக்கும் இடம் விரைந்து சென்று தொழுவீர்களாக, வீணையோடும் சுரமண்டலத்தோடும் . தம்புரோடும் நடனத்தோடும் ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதித்துப் பாடுங்கள். அவர் வானவில் செய்த விலையுயர்ந்த கல்லாகிய தெய்வம் ஆவார், அவர் நித்திய வீட்டை உடைய தெய்வம் ஆவார், அவருடைய சிலுவை மரணத்தின் போது கடைசியாக அவருடைய உடம்பில் இருந்து ஒரு போர் சேவகன் ஈட்டியினால் குத்தும் போது பரிசுத்த இரத்தமும் தண்ணீரும் அருவி போலப் புறப்பட்டு கீழ் நோக்கிச் சுற்றி விழுந்தது அப்படிப்பட்ட சாந்தமான தன்மையுள்ள கழுமரமாகிய சிலுவை நிற்கும் மலையே என அர்த்தம் ஆகும்

விரிவான விளக்கம்

1) இறங்கிச் சென்று தொழுமின், இன் இசை பாடியே!

இந்த பூமியில் உள்ள மக்கள் அனைவரும் தங்கள் நிலைமையில் இருந்து தங்களைத் தாழ்த்தி அதாவது தங்கள் உள்ளங்களில் இருக்கும் பெருமை, மயக்கம், பாவங்கள் அனைத்தையும் விட்டு தங்களைத் தாழ்த்தி விரைந்து சென்று தெய்வத்தை எக்காள தொனியோடும், வீணையோடும், சுரமண்டலத்தோடும்,. தம்புரோடும், நடனத்தோடும், யாழோடும், தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள். ஓசையுள்ள கைத்தாளங்களோடும் ; பேரோசையுள்ள கைத்தாளங்களோடும், அவரைத் துதித்து வழிபட வேண்டும்

பரிசுத்த வேதாகமம்

என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம் பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டு திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன். 2 நாளாகமம் 7:14

எக்காள தொனியோடே அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள். தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள். ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள். சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. (அல்லேலூயா.) சங்கீதம் 150:3-6

2) பிறங்கு கொன்றைச் சடையன், எங்கள் பிரான், இடம்

பிறங்கு என்ற வார்த்தை பெருத்த அல்லது பெரிய என்ற அர்த்தத்தோடு வருகிறது, கொன்றை என்பது முள் நிறைந்த ஒரு செடி ஆகும், ( விளக்கம் கீழே ) . சடையன் என்பது சடை + அவன் ஆகும், சடை என்பது முடியாகும், முடி என்றால் கிரீடமாகும் ( முள்முடி )

பல அர்த்தங்களில். கொன்றைச் சடையன் என்பதைக் கொன்றைப் பூ சூடியவன் என அர்த்தம் எடுக்கப்பட்டுள்ளது. தலம் கழுக்குன்றம் என்பது கழுமரத்தில் தெய்வம் கழு ஏற்றப்பட்ட நிகழ்வுகளைக் கூறும் பகுதி, இந்த பாடலில் இரத்தமும், தண்ணீரும் அருவியாகக் கீழே கிறங்கி வந்ததை யாபகப்படுத்துகிறது, தெய்வத்தின் பாடுகள் மத்தியில் அவர் கொன்றை மாலை அணிந்திருக்க வாய்ப்பு இல்லை, எனவே முள் கிரீடம் வைக்கப்பட்டவர் என அர்த்தம் எடுப்பது சாலச் சிறந்தது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் மரணத்தை ஏற்றுக்கொண்ட போது அவருக்கு பெரிய முள்ளுகளால் செய்யப்பட்ட கிரீடத்தை வைத்தார்கள் அதையே இந்த வரிகள் காண்பிக்கிறது, அப்படி முள்முடி வைக்கப்பட்ட எங்கள் தெய்வம் இருக்கும் இடம் விரைந்து சென்று தொழுவீர்களாக என்பது அர்த்தம் ஆகும்.


கொன்றைச் சடையன்
முள்முடி கிரீடம்


முள் முடி

இயேசுவின் தலையில் சூட்டப்பட்ட முள் 1.5” நீளம் உள்ளதென்றும், அப்படியாக 90 முட்களை இயேசுவின் தலையில் சூட்டினார்களென்றும் வேத வல்லுநர்கள் சொல்லுகிறார்கள் - https://manna.today/1599/


கொன்றை செடிக்கு அறிவியல் பெயர் caesalpinia என்பதாகும் அதில் உள்ள nuga என்ற ரகமும், spinosa என்ற ரகமும், முட்கள் நிறைந்தவை ஆகும். அதையே ஆசிரியர் தெய்வத்துக்கு முள்முடி சூட்டப்பட்டதைக் காண்பிக்கக் கொன்றைச் சடையன் எனப் பெயர் இடுகிறார். கொன்றைச் சடையன் என்பது கொன்றைப் பூவை சூடியவன் என எடுப்பது அர்த்தத்தை முற்றுமாக மாற்றிவிடும்.


Caesalpinia nuga : முட்கொன்றைதுறை / Department : புதலியல் botanyஅருங்கலைச்சொல் அகரமுதலி (2002)

Caesalpinia spinosa - சீசல்பினியா ஸ்பினோசா (பொதுப் பெயர்: தாரா) என்பது தென் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு பசுமையான முள் புதர் ஆகும். பல்வேறு பயன்பாடுகளில் [ 8 , 9 ] மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுவதால் இது பொருளாதார ரீதியாக மதிப்புமிக்கது . சீனாவில், யுனான் மாகாணத்தில் தாரா செடிகள் பரவலாக விநியோகிக்கப்படுகின்றன, மேலும் அதிக பொருளாதார மதிப்பு கொண்ட பல பயன்பாடுகளில் தாரா பயன்படுத்தப்படுகிறது [ 10 ]


பரிசுத்த வேதாகமம்

அப்பொழுது பிலாத்து இயேசுவைப்பிடித்து வாரினால் அடிப்பித்தான். போர்ச்சேவகர் முள்ளுகளினால் ஒரு முடியைப் பின்னி அவர் சிரசின்மேல் வைத்து, சிவப்பான ஒரு அங்கியை அவருக்கு உடுத்தி: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று சொல்லி, அவரைக் கையினால் அடித்தார்கள். பிலாத்து மறுபடியும் வெளியே வந்து: நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்று நீங்கள் அறியும்படிக்கு, இதோ, உங்களிடத்தில் இவனை வெளியே கொண்டுவருகிறேன் என்றான். இயேசு, முள்முடியும் சிவப்பங்கியும் தரித்தவராய், வெளியே வந்தார். அப்பொழுது பிலாத்து அவர்களை நோக்கி: இதோ, இந்த மனுஷன் என்றான். யோவான் 19:1-5


3) நிறங்கள் செய்த மணிகள், நித்திலம், கொண்டு

தெய்வம் நிறங்கள் செய்தவர் ஆவார். பூர்வ காலத்தில் அதாவது நோவா காலத்தில் இந்த பூமி தண்ணீரினால் அழிக்கப்பட்டது, அதன் பிறகு தேவன் மனிதர்களோடு உடன்படிக்கை ஏற்படுத்தி தன்னுடைய வில்லை மேகத்தில் வைத்தார், அதையே நாம் வானவில் என்று சொல்லுகிறோம், அதேயே நிறங்கள் செய்த மணிகள் என்று எழுதப்பட்டுள்ளது. மணிகள் என்றால் விலை உயர்ந்த கல் ஆகும். தெய்வம் ஒரு கல் அதாவது கன்மலை ஆவார்.


அப்படி தேவன் பூமியைத் தண்ணீரினால் அழித்த படியினாலே தான் இன்றும் பல நகரங்கள் பூமிக்கு அடியில் புதையுண்டு கிடக்கின்றன, அதை நாம் பல அகழ்வாய்வுகள் மூலமாகத் தெரிந்து கொள்கிறோம்.


பரிசுத்த வேதாகமம் 2 பேதுரு 3 ஆம் அதிகாரம் 6 ஆம் வசனத்தில் அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள் என்று கூறுகிறது..

தெய்வம் விலை உயர்ந்த கல் ( கன்மலை ) என்பதை வழியடைக்கும் கல் என்ற பக்கத்தைப் பார்த்து அறிந்து கொள்ளவும் ( GO )

நித்திலம் கொண்டு என்றால் நித்திய வீட்டை உடையவர் ஆகும், அவர் உயிர்த்து பரலோகமான நித்திய வீட்டை அடைந்தவர்


பரிசுத்த வேதாகமம்

அன்றியும் தேவன்: எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் சகல ஜீவஜந்துக்களுக்கும், நித்திய தலைமுறைகளுக்கென்று நான் செய்கிற உடன்படிக்கையின் அடையாளமாக: நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும். நான் பூமிக்கு மேலாய் மேகத்தை வருவிக்கும்போது, அந்த வில் மேகத்தில் தோன்றும். அப்பொழுது எல்லா மாம்ச ஜீவன்களையும் அழிக்க இனி ஜலமானது பிரளயமாய்ப் பெருகாதபடிக்கு எனக்கும் உங்களுக்கும் மாம்சமான சகல ஜீவஜந்துக்களுக்கும் உண்டான என் உடன்படிக்கையை நினைவுகூருவேன். ஆதி 9:12-15

பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம். 2 கொரி 5:1


4) இழி கறங்கு வெள்ளை அருவித் தண் கழுக்குன்றமே

அவருடைய சிலுவை மரணத்தின் போது கடைசியாக அவருடைய உடம்பில் இருந்து ஒரு போர் சேவகன் ஈட்டியினால் குத்தும் போது பரிசுத்த இரத்தமும் தண்ணீரும் அருவி போலப் புறப்பட்டு கீழ் நோக்கிச் சுற்றி விழுந்தது அப்படிப்பட்ட சாந்தமான தன்மையுள்ள கழுமரமாகிய சிலுவை நிற்கும் மலையே என அர்த்தம் ஆகும்


பரிசுத்த அருவி
இரத்தமும், தண்ணீரும்

பரிசுத்த வேதாகமம்

அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைக் கண்டு, அவருடைய காலெலும்புகளை முறிக்கவில்லை. ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது. யோவான் 19:33-34 NEXT

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பிறங்கு - (வி) ஒளிர், சுடர்விடு, பிரகாசி, உயர், பெருகு, வழிந்தோடு, பெருத்திரு, மிகுதியாயிரு, செறிவாயிரு, சிறந்திரு; பிறங்கு நிலை

கறங்கு –ஒலி, சத்தம்;காற்றாடி, கறங்கோலை(ஓலைக் காற்றாடி);சுழற்சி, சுற்றி வருதல், சுழலு,. சொல் பொருள். (வி) ஒலி, சத்தம்.

Crown-of-Thorns- மணி (பெ) 1. கண்டை, 2. விலையுயர்ந்த கல், நவரத்தினம், 3. நீலமணி, 4. பளிங்கு 5. மணியோசை

நித்து> நித்தியம் அல்லது நில் > நிற்று > நிற்றியம் > நித்தியம்.

Guru

21 views0 comments

Comentarios


bottom of page