செம்மலர் - who shed the blood for mankind
மெய்கண்டார் தனது சிவஞான போதகம் பன்னிரண்டாம் சூத்திரத்தில் செம்மலர் நோந்தாள் என்ற வார்த்தையை உபயோகப் படுத்தியுள்ளார்
செம்மலர் நோன்றாள் சேரல் ஒட்டா அம்மலங் கழீஇ அன்பரொடு மரீஇ மாலற நேயமும் மலிந்தவர் வேடமும் ஆலயந் தானும் அரனெனத் தொழுமே .
செம்மலர் = சிவந்து + மலர் போல் மலர்ந்த
செம்மலர் என்பது இரத்தம் சிந்தி மரித்து அலர்ந்த மலர் போல உயிர்த்த தெய்வத்தைக் குறிப்பிடுகிறது.
( விளக்கம் கீழே )
விளக்கம்
செம்மலர் நோன்றாள் சேரல் ஒட்டா
இரத்தம் சிந்தி மரித்து அலர்ந்த மலர் போல உயிர்த்து அதாவது மன்னுயிர்க்காகத் தன்னுயிர் கொடுத்து சிலுவையில் தவமாகிய நோன்பினை கடைப்பிடித்து நின்ற தெய்வத்தின் திருவடிகளைச் சேர்ந்து வணங்க வேண்டும். அப்படி நாம் வணங்கும் போது தெய்வத்தை சேரவிடாமல் தடுத்து நின்ற கொடிய பாவம் கழுவப்பட்டு நமக்காக மரித்த அன்பான தெய்வத்தோடு இணைக்கப்படுகிறோம்.

அம்மலங் கழீஇ அன்பரொடு மரீஇ அப்படி இனைக்கப்படுவதால் நம்முடைய பாவத்தினால் உண்டான மயக்க நிலமை முற்றிலும் நீக்கப்பட்டு நமது உள்ளத்தில் அதாவது நமது ஆன்மாவில் தெய்வத்தின் அன்பு உண்டாகிறது.
மாலற நேயமும் மலிந்து அவர் வேடமும்
அப்படி தெய்வத்தின் அன்பினால் நாம் நிரப்பப்படும் போது நம்முடைய பழைய சாயல் அதாவது பாவ மனிதன் மாறி புதிய சாயல் அதாவது இரத்தம் சிந்தி நமக்காக மரித்த தெய்வத்தின் சாயலாக இந்த பூமியில் வாழ்வோம்.
ஆலயந் தானும் அரன் எனத் தொழுமே .
அப்படி தெய்வத்தின் சாயலாக நாம் மாறும் போது நமது பாவங்களை உடைத்து நீக்குகிற தெய்வம் வாழும் ஆலயமாக நமது உள்ளம் பரிசுத்தமாக மாறுகிறது.
இதையே திருமந்திரம் #1823 நமது உள்ளமே பெரிய கோயில் எனக் குறிப்பிடுகிறது.
உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம், வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல், தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கு
பரிசுத்த வேதாகமம் இல்வாழ்வானைப்ப்ற்றிக் கூறும் போது
1) நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம். 1 கொரி 3:16:17
2) உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? 1 கொரி 6:19
செம் என்றால் இரத்தம் சிந்திய என அர்த்தம்,
மலர் என்றால் மலர் போல் மலர்ந்த அல்லது அலர்ந்த அல்லது உயிர்த்த என அர்த்தம் ஆகும்
மலர் என்பதின் அர்த்தம் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும், மலர் என்ற வார்த்தை உபயோகப் படுத்தப்பட்டுள்ள இடங்களை் பார்ப்போம்.
கொய்மலர்
இந்த பாடல் சைவ சித்தாந்தத்தில் 6வது திருமறையில் 98 பொது வில் 1வது பாடலாக அமைந்துள்ளது.
நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம் நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம் ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம் இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற் கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க் கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே
இந்த பாடலில் கொய் மலர் சேவடி என்ற வார்த்தை உபயோகப் படுத்தப்பட்டுள்ளது
கொய் என்றால் கிள்ளி அல்லது பிடுங்கி வெட்டி எடுக்கப்பட்ட என அர்த்தம்
மலர் என்றால் மலர் போல் மலர்ந்த அல்லது அலர்ந்த அல்லது உயிர்த்த என அர்த்தம் ஆகும்
இந்த பூமியில் இருந்து கொய்யப்பட்டு (கொல்லப்பட்டு) அலர்ந்தமலர் போன்று உயிர்த்தெழுந்தவனுடைய சேவடியை வணங்குவதைக் குறிப்பிடுகிறது.
மலர் மிசை ஏகினான்
திருவள்ளுவர் தனது திருக்குறள் பாடல் 3 இல் மலர் மிசை ஏகினான் என்ற வார்த்தையை உபயோகப் படுத்தியுள்ளார்
மலர் என்றால் மலர் போல் மலர்ந்த அல்லது அலர்ந்த அல்லது உயிர்த்த என அர்த்தம் ஆகும்
மிசை என்பது வானத்தை குறிக்கிறது அதாவது பரலோகத்தைக் குறிக்கிறது.
ஏகினான் என்றால் ஏறிச்சென்றவர் என அர்த்தம் அதாவது உயிர்த்தெழுந்தவர் ஆகும்
குறள் 3
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ்வார்.
மலர்ந்து அல்லது உயிர்த்து வானம் (HEAVEN) சென்று இருப்பவனாகிய கடவுளின் மாண்பு மிக்க பாதங்களைச் சேர்ந்தவர்கள் இந்த பூமியில் இன்பமான வாழ்வையும், பரலோக வீட்டின் நித்திய பேரின்ப வாழ்வையும் பெறுவர்
திருவள்ளுவர் தனது 248 வது குறளில் உயிர்த்தெழுதலுக்கு மலர் பூப்பது என்று அடையாளப் படுத்துகிறார்.
குறள் 248: kural 248
பொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது
சொற்பொருள்
பொருள் அற்றார் = இவ்வுலகத்தில் உலகப் பொருள் இல்லாமல் வாழ்பவர்கள்
பூப்பர் ஒருகால் = ஒரு குறிக்கப்பட்ட காலத்தில் பூ போலப் பூத்து எழுவர் அதாவது தெய்வத்தால் குறிக்கப்பட்ட காலத்தில் பூ பூப்பது போல உயிர்த்தெழுவர்.
அருள் அற்றார் = தெய்வத்தை நாடிச் சென்று அவருடைய பரிசுத்த ஆவியாகிய அருளைப் பெற்று வாழாதவர்கள்
அற்றார் = பரலோக வாழ்க்கை அற்றவர்களே அல்லது கிடைக்காதவர்கள் ஆவார்கள்
மற்றாதல் அரிது = அப்படி அருள் அற்றவர்கள் பூ பூப்பது போல உயிர்த்தெழுவது முடியாத காரியம் ஆகும்.
விளக்கம்
இவ்வுலகத்தில் உலகப் பொருள் இல்லாமல் வாழ்பவர்கள் ஒரு குறிக்கப்பட்ட காலத்தில் பூ போலப் பூத்து எழுவர் அதாவது தெய்வத்தால் குறிக்கப்பட்ட காலத்தில் பூ பூப்பது போல உயிர்த்தெழுவர். தெய்வத்தை நாடிச் சென்று அவருடைய பரிசுத்த ஆவியாகிய அருளைப் பெற்று வாழாதவர்கள் பரலோக வாழ்க்கை அற்றவர்களே அல்லது கிடைக்காதவர்கள் ஆவார்கள் அப்படி அருள் அற்றவர்கள் பூ பூப்பது போல உயிர்த்தெழுவது முடியாத காரியம் ஆகும்.
コメント