top of page
Search

Word of God - படம் உடைய அரவன்

Writer's picture: j rajamohanj rajamohan

Updated: Feb 27, 2024

Word of God - படம் உடைய அரவன்

சுந்தரமூர்த்தி சுவாமிகள்-திருப்பாட்டு - 7 -ஆம் திருமுறை-தலம்:கழுக்குன்றம் - திருக்கழுக்குன்றம் - பதிகம் 7.081  பாடல், மடம் உடைய அடியார்,மடம்,கடம்,விண்ணவர், மிடறன்,வார்த்தை,மாட்டு, திருமந்திரம்,உள்ளம்,திருக்கோயில்,குடவாயில்,குகை,குடம்,


மடம் உடைய அடியார் தம் மனத்தே உற

விடம் உடைய மிடறன், விண்ணவர்மேலவன்,

படம் உடைய அரவன் தான், பயிலும்(ம்) இடம்-

கடம் உடைய புறவின் தண் கழுக்குன்றமே,


மடம் உடைய அடியார்  = பேதமை நிறைந்த பக்தர்களாகிய அடியார்களுடைய

தம் மனத்தே உறவிடம்  = மனதை தன்னுடைய உறைவிடமாக

உடைய மிடறன்,      = கொண்டு வாழும் பரிசுத்த தெய்வம்

விண்ணவர்மேலவன் = அவர் உயிர்த்தெழுந்து விண்ணுலகத்தில் இருப்பவர். அவர் எல்லாவற்றிலும் மேலானவர் ஆவார், அவர் சகலவற்றையு ம் சிருஷ்டித்தவர் ஆவார்.

படம் உடைய அரவன் தான்,  = படம் என்றால் பிரதி பலித்தல், அவர் பரலோகத்தில் இருக்கும் உருவமற்ற பிதாவாகிய தெய்வத்தை பிரதிபலித்து பிதாவின் ரூபத்தில் அல்லது உருவத்தில் மனித குமாரனாக வந்தவர். அவர் அரவன் ஆவார். அரவம் என்பது சத்தம் ஆகும், அரவன் என்றால் வார்த்தையாகிய தெய்வம் ஆவார். ( பிதாவாகிய தெய்வத்தின் ரூபமான வார்த்தையாகிய தெய்வம் ) பிலி 2:6

பயிலும்(ம்) இடம்-  =  வார்த்தையாகிய தெய்வம் இந்த உலகத்தையும் சாத்தானையும் ஜெயித்த இடமாகிய கழுமரம் நிற்கும் கழுக்குன்றம் ஆகும்.

கடம் உடைய   = கடம் என்றால் குடம் ஆகும், கழுக்குன்றம் என்பது குடவாசலாகிய கல்லறைக் குகையை தன் அருகில் உடைய இடம் ஆகும்.

புறவின் தண் கழுக்குன்றமே,  =  புறவு என்பது அது புறாவின் தன்மையாகும்.  இயேசு கிறிஸ்து தன் உயிரைச் சிலுவையில் விடும்போது பூமியெங்கும் அந்தகாரமான இருள் உண்டானது, சூரியன் இருளடைந்தது, தேவாலய திரைச் சீலை மேலிருந்து கீழ் வரை இரண்டாக கிழிந்தது. அப்படி புறம்பே நடந்த நிகழ்வுகளைப் பார்த்த நூற்றுக்கு அதிபதி அவரை நீதிமான் என அறிக்கையிட்டான். எனவே கள்ளர்களில் ஒருவராக எண்ணப்பட்டார் என்ற பெயர் மாறியதினால் அல்லது கலைந்ததினால்  உண்டான புறாவின் குணமாகிய பரிசுத்தம் பாய்ந்து வந்த சாந்தமான தன்மையுள்ள சிலுவையாகிய கழுமரம் நிற்கும் கழுக்குன்றமே ஆகும்.


விளக்கம்

பேதமை நிறைந்த பக்தர்களாகிய அடியார்களுடைய  மனதை தன்னுடைய உறைவிடமாகக் கொண்டு வாழும் பரிசுத்தமான தெய்வம் அவர் விண்ணவர் ஆவார் அதாவது  அவர் இந்த பூமிக்கு மனித குமாரனாக வந்து சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து உயிர்த்தெழுந்து விண்ணுலகத்தில் இருப்பவர். அவர் எல்லாவற்றிலும் மேலானவர் ஆவார், அவர் சகலவற்றையும் சிருஷ்டித்தவர் ஆவார் அவர் படம் உடைய அரவன் ஆவார்,  படம் என்றால் பிரதி பலித்தல், அவர் பரலோகத்தில் இருக்கும் உருவமற்ற பிதாவாகிய தெய்வத்தை பிரதிபலித்து பிதாவின் ரூபத்தில் அல்லது உருவத்தில் மனித குமாரனாக வந்தவர். அவர் அரவன் ஆவார். அரவம் என்பது சத்தம் ஆகும், அரவன் என்றால் வார்த்தையாகிய தெய்வம் ஆவார். ( பிதாவாகிய தெய்வத்தின் ரூபமான வார்த்தையாகிய தெய்வம் ) பிலி 2:6 அந்த  வார்த்தையாகிய தெய்வம் இந்த உலகத்தையும் சாத்தானையும் ஜெயித்த இடமாகிய கழுமரம் நிற்கும் கழுக்குன்றம் ஆகும். அந்த கழுக்குன்றம் என்பது குடவாசலாகிய கல்லறைக் குகையை தன் அருகில் உடைய இடம் ஆகும். இயேசு கிறிஸ்து தன் உயிரைச் சிலுவையில் விடும்போது பூமியெங்கும் அந்தகாரமான இருள் உண்டானது, சூரியன் இருளடைந்தது, தேவாலய திரைச் சீலை மேலிருந்து கீழ் வரை இரண்டாகக் கிழிந்தது. அப்படி புறம்பே நடந்த நிகழ்வுகளை பார்த்த நூற்றுக்கு அதிபதி அவரை நீதிமான் என அறிக்கையிட்டான். எனவே கள்ளர்களில் ஒருவராக எண்ணப்பட்டார் என்ற பெயர் மாறியதினால் அல்லது கலைந்ததினால்  உண்டான புறாவின் குணமாகிய பரிசுத்தம் பாய்ந்து வந்த சாந்தமான தன்மையுள்ள சிலுவையாகிய கழுமரம் நிற்கும் கழுக்குன்றமே ஆகும். 


குடவாசல்
கடம்

தெளிவான விளக்கம்

1) மடம் உடைய அடியார் தம் மனத்தே உற விடம் உடைய மிடறன்

பேதமை அல்லது அறியாமை நிறைந்த பக்தர்களாகிய அடியார்களுடைய மனதை தன்னுடைய உறைவிடமாக வாழும் தெய்வம் ஆவார். பேதமை அல்லது அறியாமை  நிறைந்த மக்களுடைய மனதில் வாழ்ந்து அவர்களை தனக்கென்று தெரிந்தெடுத்து வழிநடத்தும் தெய்வம் ஆவார்.


பரிசுத்த வேதாகமம் ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாயெண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார். மாம்சமான எவனும் தேவனுக்குமுன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார் எனக் கூறுகிறது . 1 கொரி 1:27-29

அப்படி அவர் பேதமையானவர்களைத் தெரிந்து கொண்டு அவர்கள் உள்ளத்தில் வாழ்வதனால்  தான் அவருக்கு திருவள்ளுவர் இல்வாழ்வான் என்ற பெயரைக் கொடுத்து உள்ளார். இல்வாழ்வான் என்பது வானம் விட்டு இறங்கி வந்து மனித குமாரனாக வாழ்ந்து மரித்து உயிர்த்தெழுந்து பிறகு பரிசுத்த ஆவியாக எல்லா மனிதர்களின் இல்லத்திலும் மனத்துக்குள்ளும் வாழுபவர்தான் இல்வாழ்வானாகும்.

இதையே திருமந்திரம் #1823 நமது உள்ளமே பெரிய கோயில் எனக் குறிப்பிடுகிறது.


உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்,

வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்,

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கு


உள்ளம் ஒரு பெரிய கோவில், இந்த மாமிச உடம்பு ஒரு ஆலயம், வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்  சந்தேகம் இல்லாமல் தெளிந்த மனம் உடையவர்களுக்கு நித்தியசீவன் கொடுப்பது YESHIVAவின் உடம்பு ஆகும். கள்ளமான புலன்கள் ஐந்துக்கும் இருட்டைப் போக்கும் விளக்கு YESHIVAவின் உடம்பு ஆகும்.


பரிசுத்த வேதாகமம் இல்வாழ்வானைப்ப்ற்றிக் கூறும் போது

நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம். 1 கொரி 3:16:17    உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?   1 கொரி 6:19    நான் உங்கள் நடுவில் உலாவி உங்கள் தேவானாய் இருப்பேன் என்று கூறுகிறார். லேவி 2612     நான் உங்கள் நடுவே வாசம்பண்ணி,உங்களுக்கு தேவனாயிருப்பேன் என்று கூறுகிறார். ...யாத் 29:45  


2)  விண்ணவர்மேலவன்,

விண்ணவர் என்பது தெய்வத்தின் உறைவிடம் பரலோகமாகும், அவர் இந்த பூமியில் மனிதனாக வந்து பிறந்து சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து பரலோகம் சென்று பிதாவின் வலது பக்கத்தில் அமர்ந்து உள்ளார், அதையே நாம் வலம்புரி என குறிப்பிடுகிறோம்.


பரிசுத்த வேதாகமம் இயேசு கிறிஸ்து தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,  பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். என கூறுகிறது.   பிலிப் 2:7-11


மேலவன் என்பது எல்லா படைக்கப்பட்டவைகளுக்கும் மேலானவர் என்பது அர்த்த,ம் ஆகும். அவர் பரலோகத்திற்குப் போய், தேவனுடைய வலதுபாரிசத்தில் இருக்கிறார்; தேவதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. எனப் பரிசுத்த வேதாகமம் கூறுகிறது  1பேதுரு 3:22


3) படம் உடைய அரவன் தான், பயிலும்(ம்) இடம்-

படம் உடைய அரவன் என்றவுடன் படம் எடுத்து ஆடும் பாம்புடன் இருக்கும் தெய்வம் என்று அர்த்தம் எடுக்கப்பட்டுள்ளது, அது சரியல்ல தவறாகும். படம் என்பதின் அர்த்தம் மற்றும் அரவன் என்பதின் அர்த்தம் என்ன என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

படம் என்பது ஒரு பொருளின் அல்லது ஒரு மனிதனின் பிரதிபலிப்பாகும், அதாவது ஒரு மனிதனின் உருவத்தை ஒத்துப் போகும் வேறு உருவமாகும்.

அரவன் என்பது வார்த்தையாகிய தெய்வம் ஆகும். அரவன் என்ற வார்த்தையை அப்படியே அர்த்தம் எடுத்தால் அரவு அவன் ஆகும்  பாம்பு அவன் என்று எடுக்கமுடியாது. தெய்வத்தைப் பாம்பாகப் பார்க்கமுடியாது.. அரவன் என்பதற்கு ஒலி என்ற அர்த்தம் உண்டு ஒலி என்பது சத்தம், வார்த்தை, மாட்டு என்பதாகும். இதையே திருவள்ளுவர் தனது 5வது குறளில் பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு எனக் குறிப்பிடுகிறார். மேலும் தனது முதல் குறளில் எழுத்தெல்லாம் ஆதிபகவன் எனக் குறிப்பிடுகிறார்.

நாம் எந்த காரியத்தை ஆரம்பிப்பதற்கு முன் "உ" என போட்டு ஆரம்பம் செய்கிறோம் இது வார்த்தையாகிய கடவுளைக் குறிக்கிறது ( Son of GOD or கடவுளின் குமாரன் 

வாக்கியம், சப்தம் (ஓலி), WORD

The BruhatAranyaka Upanishad says, “VagyavaiBrahmma”, the word is Brahmma (creator). வாக்யா வை பிரம்மா  Brahmmavindu Upanishad says, “ShabdovaiBrahmma”, the voice is Brahmma சப்தோ வை பிரம்மா  “ShabdaksharamParamBrahmma”, the voice and word became absolute God.சப்தாக்ஸ்கரம் பரம் பிரம்மா


பரிசுத்த வேதாகமம்

ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். 

சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. யோவான் 1:1-3

அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது    யோவான் 1:14. 

ஆதிமுதலாய் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டுப்பார்த்ததுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம். 1யோவான் 1:1

இதை அறிந்து கொள்ளக் குறள் 28:  நிறைமொழி மாந்தர் என்ற பக்கத்தைப் பார்க்கவும் (GO)


4) கடம் உடைய புறவின் தண் கழுக்குன்றமே,

கடம் என்பது குடம் என்று அர்த்தம் ஆகும் தெய்வம் குடவாசல் என்ற கல்லறை வாயில் நின்றவர் ஆவார்

. 2.022 திருக்குடவாயில்,   பண் - இந்தளம்,    திருச்சிற்றம்பலம் 


என்தன் உளம் மேவி இருந்த பிரான்;

கன்றன்; மணி போல் மிடறன்; கயிலைக்

குன்றன்; குழகன் குடவாயில்தனில்

நின்ற பெருங்கோயில் நிலாயவனே.


குடவாசல் என்பது குடைந்து எடுக்கப்பட்ட கல்லறையின் அல்லது ஒரு குகையின் வாசல் ஆகும். இயேசு கிறிஸ்துவின் காலத்திற்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மலைகளில் குடைந்து எடுக்கப்பட்ட ஒரு குகையைக் கல்லறையாகப் பயன்படுத்தியுள்ளனர், இயேசு கிறிஸ்துவின் கல்லறையும் அப்படிப்பட்டதே, அப்படிப்பட்ட கல்லறையே குடவாசல் என்று அழைக்கப்படுகிறது. இரந்த ஒருவரை உள்ளே வைத்து விட்டு ஒரு பெரிய கல்லை வைத்து மூடிவிடுவார்கள்.  இந்த பாடலில்  "குடவாயில்தனில்  நின்ற பெருங்கோயில் நிலாயவனே"  என்ற வரிகள் வருகின்றன, அந்த பாடல் வரிகள் குடைந்து எடுக்கப்பட்ட கல்லறையின் வாசலில் உயிர்த்தெழுந்து நின்ற இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.  

இந்த வரியில் கடம் கடம் உடைய புறவின் தண் கழுக்குன்றமே என்று குறிப்பிடப்படுகிறது. அதாவது கடமாகிய குடவாசல் ஆகிய கல்லறையை தன் அருகில் உடைய புறாவின் குணமாகிய பரிசுத்தம் பாய்ந்து வந்த சாந்தமான தன்மையுள்ள சிலுவையாகிய கழுமரம் நிற்கும் கழுக்குன்றமே ஆகும்

அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம்பண்ணும் முறைமையின்படியே அதைச் சுகந்த வர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள். அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது. யூதருடைய ஆயத்தநாளானபடியினாலும், அந்தக் கல்லறை சமீபமாயிருந்தபடியினாலும், அவ்விடத்திலே இயேசுவை வைத்தார்கள்.    யோவான் 19:40-42

                      -------------------------------------------------------------------- NEXT

மிடறன் = பரிசுத்தன்

பயிலும்(ம்) இடம் \=  தேர்ச்சியடைதல் அல்லது வெற்றி பெறுதல் ( உயிர்த்தெழுந்த இடம் )

படம் உடைய அரவன் = உருவம் உடைய சத்தம், வார்த்தை, ஒலி, குரல்,

மடம் =மடமை, அறியாமை

படம் = ( பிரதி பலித்தல் )ஏதொன்றின் உருவத்தையும் கண்ணால் காணும் படி வரைந்த அல்லது தீட்டிய அல்லது ஒளிப்படக்கருவி போன்றவற்றால் உருவாக்கிய ஒப்புரு. எடுத்துக்காட்டாக ஓவியம் ஒரு படம். நேரில் காண்பதுபோல் காணக்கூடிய இயல்பாய் அசையும் படம், திரைப்படம், நிகழ்படம்.

அரவு = பாம்பு, ஒலி, உடைப்பு, அடைக்கும்,  வைக்கோல், பழுதை, நாகமரம், ஆயிலியம்,  ( அரவம் = ஒலி ) 

கடம் = யானைக்கூட்டம்,  யானைக்கதுப்பு, மோவாய், யானைமதம், உடல், காடு, குடம், தோட்டம்

13 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page