Three nails - மூன்று உடைக்களியாகிய ஆணியை ஏற்றுக் கொண்டவன்
சுந்தரமூர்த்தி சுவாமிகள்-திருப்பாட்டு - 7 -ஆம் திருமுறை-தலம்:கழுக்குன்றம் - திருக்கழுக்குன்றம் - பதிகம் 7.081 பாடல் 4 வெளிறு தீரத் தொழுமின்-மழுவாளன்,குடவாசல்,முளிறு,பிளிறு,களிறு,ஆடி, மதம்,வெண்பொடி,முந்தி,கோடு
வெளிறு தீரத் தொழுமின், வெண்பொடி ஆடியை!
முளிறு இலங்கு மழுவாளன் முந்தி உறைவு இடம்-
பிளிறு தீரப் பெருங்கைப் பெய்ம் மதம் மூன்று
உடைக்களிறினோடு பிடி சூழ் தண் கழுக்குன்றமே!
வெளிறு தீரத் தொழுமின், = குற்றம் அல்லது பாவம் நீங்கத் தொழுவீராக
வெண்பொடி ஆடியை! = வெண்மையான அல்லது பரிசுத்தமான சிறிய குகையாகிய கல்லறையை (ஆடி = அளைந்து, அளை = குகை) ( பொடி = சிறிய )
முளிறு இலங்கு = முள்ளை தன் தலையில் முடியாக ஏற்று முன் மாதிரியாய் விளங்கியவர் அதாவது முதற்பலன் ஆனவர் ( முளிர் = முள் )
மழுவாளன் = மரத்தால் ஆன ஆயுதத்தை ஏற்றுக் கொண்டவன் அல்லது உடையவன் ( கோடு ஆயுதம் )
முந்தி உறைவு இடம்- = ஆதிமூலமான ( சகல படைப்புகளுக்கு முந்தியே இருந்த ) தெய்வம் இருக்கும் இடமாகிய கழுமரம் இருக்கும் இடம் சென்று வணங்க வேண்டும்.
பிளிறு தீரப் = ஆரவாரம் அல்லது சத்தம் தீர்ந்து ஆவி போக ( வார்த்தையாகிய தெய்வம் மரணம் அடைய )
பெருங்கைப் = உயர்வான அல்லது சிறந்த கைகளில்
பெய்ம் = மேலிருந்து மழை போல் விழுந்து கொட்டும் இரத்தம்
மதம் மூன்று = வலிமையான மூன்று கூர்மையான ஆணியை (உடைக்களி) ஏற்றுக்கொண்ட தெய்வத்தோடு
உடைக்களி றினோடு = பிடிக்கப்பட்ட கள்ளர்களின் கால் எலும்புகள் உடைக்கப்பட்டது, ( உடை = உடைத்தல், களிறு = கள்ளன் )
பிடி சூழ் தண் கழுக்குன்றமே! = பிடிக்கப்பட்ட கள்வர்கள் சூழ்ந்து சிலுவையில் அறையப்பட்ட சாந்தமான தன்மையுள்ள கழுமரம் நிற்கும் மலையே
விளக்கம்
உலக மக்களே அனைவரும், தெய்வத்தை நம் பாவம் தீர்ந்து பரிசுத்தமாய் வாழ்வதற்காகத் தொழுது வழி பட வேண்டும். நம் தெய்வம் முள்முடியை ஏற்று மரித்து, பரிசுத்தமான சிறிய குகையினால் ஆன கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டு பிறகு உயிர்த்தெழுந்தார். நாம் குகையை குடவாசல் என அழைக்கிறோம், அந்த குகை கல்லறையாகிய குடவாசல் இருக்கும் இடம் சென்று வழிபடுவோமாக. ( குடவாசல் என்பது குகை கல்லறை ஆகும் )
அவர் முன் மாதிரியாய் ஆனவர் அதாவது முதற்பலன் ஆனவர் ஆவார். அவர் வார்த்தையாகிய தெய்வம் அவரது சத்தம் முடிந்து போய் மரணம் அடைந்தவர் ஆவார்.
அவர் மரத்தினால் ஆன ஆயுதமாகிய சிலுவையிலே மரணத்தை ஏற்றுக்கொண்ட மழுவாளன் ஆவார். அவரே எல்லா விதமான படைப்புக்கும் முந்தி பரலோகத்தில் இருந்தவர் ஆவார், அதாவது அவர் ஆதியானவர். அப்படிப் பட்ட தெய்வம் இருக்கும் இடமாகிய கழுமரமாகிய சிலுவை நிற்கும் மலையாகிய கழுக்குன்றம் சென்று வணங்குவீர்களாக.
அவர் சிலுவையிலே அறையப்படும் போது, தன்னுடைய புனிதமான கைகளில் வலிமையான மூன்று கூர்மையான ஆணிகளை ஏற்றுக் கொண்டார், அதனால் உண்டான இரத்தம் அவருடைய கைகளில் இருந்து மழை போல் மேலிருந்து பூமியில் விழுந்தது.
அப்படிப்பட்ட வலிமையான மூன்று கூர்மையான ஆணியை ( உடைக்களியை ) ஏற்றுக்கொண்டு மரித்த தெய்வத்தோடு சிலுவையில் அறையப்படுவதற்குப் பிடிக்கப்பட்ட கள்ளர்களின் கால் எலும்புகள் உடைக்கப்பட்டது, ( எலும்புகள் உடைக்கப்பட்ட கள்ளன் ) அப்படிப்பட்டவர்கள் சூழ்ந்து சிலுவையில் அறையப்பட்ட சாந்தமான தன்மையுள்ள கழுமரம் நிற்கும் மலையே என்று அர்த்தம் ஆகும்.

தெளிவான விளக்கம்
1)வெளிறு தீரத் தொழுமின், வெண்பொடி ஆடியை!
உலக மக்களே அனைவரும், தெய்வத்தை நம் பாவம் தீர்ந்து பரிசுத்தமாய் வாழ்வதற்காகத் தொழுது வழி பட வேண்டும். நம்முடைய பாவம் என்பது கரும பாவம் ( செய்த பாவங்கள் ) மற்றும் ஜென்ம பாவமாகும் ( மூதாதையர் வழி பாவம் ). நம்முடைய பாவங்களுக்காகத் தெய்வம் முள்முடியை ஏற்று மரித்து, பரிசுத்தமான சிறிய குகையினால் ஆன கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டு பிறகு உயிர்த்தெழுந்தார். (இயேசு கிறிஸ்துவின் காலத்தில் குகை கல்லறைகள் பயன் படுத்தப்பட்டன )
அதையே வெண் பொடி ஆடி என குறிப்பிடப்பட்டுள்ளது, வெண் என்பது வெண்மை அல்லது பரிசுத்தத்தைக் காண்பிக்கிறது, பொடி என்றால் சிறிய வாய் உள்ள குகையில் வெட்டப்பட்ட கல்லறையாகும், அதையே நாம் அந்த குகை கல்லறையை குடவாசல் என அழைக்கிறோம். அந்த குடவாசல் இருக்கும் இடம் சென்று வழிபடுவோமாக. ( குடவாசல் என்பது குகை கல்லறை ஆகும் )
(தொழுமின், வெண்பொடி ஆடியை என எழுதப்பட்டு இருக்கிறது. ஆடியை என எழுதப்பட்டு உள்ளதால் ஆடி என்பது ஒரு பொருளாகும். உதாரனமாக அந்த கண்ணாடியை எடு என்றால் அது கண்ணாடி என்ற பொருளைக் குறிக்கும். பலர் இந்த வெண்பொடி ஆடியை என்பதை வெண்பொடியாகிய திருநீற்றுடன் ஆடி வந்து தொழுவாயாக என் எழுதியுள்ளனர். அது தவறு ஆடி என்பது ஒரு பொருள் ஆகும், அதன் அர்த்தத்தைப் பார்ப்போம். ஆடி என்பது அளைந்து எனப் பொருள் ஆகும், அளை என்பதற்கு குகை என அர்த்தம் ஆகும் )
குடவாசல் என்பதைப்பற்றி அறிய பார்க்கவும் (GO)

பரிசுத்த வேதாகமம்
……….அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். அவர் அவரது உடலை இறக்கி, மெல்லிய துணியால் சுற்றிப் பாறையில் குடைந்திருந்த கல்லறையில் வைத்தார். அதற்கு முன்பு யாரையும் அதில் அடக்கம் செய்ததில்லை. லூக்கா 23:52-53 திரு விவிலியம்
அப்பொழுது இயேசு மறுபடியும் தமக்குள்ளே கலங்கிக் கல்லறையினிடத்திற்கு வந்தார். அது ஒரு குகையாயிருந்தது; அதின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது. யோவான் 11:38
2) முளிறு இலங்கு மழுவாளன் முந்தி உறைவு இடம்-
முளிறு
தெய்வம் முள்ளை தன் தலையில் முடியாக ஏற்று முன் மாதிரியாய் விளங்கியவர் அதாவது முதற்பலன் ஆனவரும் ஆவார். முளிர் என்பது முள் ஆகும். அவர் முள்முடியை ஏற்றுக்கொண்டதினால் அவரை நாம் கொன்றைச் சடையன் என அழைக்கிறோம்.
இலங்கு
இலங்கு என்ற வார்த்தைக்கு விளங்குதல் என அர்த்தம். தெய்வம் உயிர்த்தெழுந்தவர்களில் முதற்பலன் ஆனவர் அல்லது விளங்கியவர் ஆவார்.
மழுவாளன்
மழு என்பது மரத்தால் ஆன ஆயுதம் ஆகும், மழுவாளன் என்பது மரத்தால் ஆன ஆயுதத்தை உடையவர் ஆவார். தெய்வம் மரத்தினால் ஆன ஆயுதமாகிய சிலுவையிலே மரணத்தை ஏற்றுக்கொண்ட மழுவாளன் ஆவார். மழு என்பதைக் கோடு ஆயுதம் என்று அவ்வையார் தனது விநாயகர் அகவலில் குறிப்பிடுகிறார் கோடு ஆயுதம் --- கோடு என்பது மரம் எனப் பொருள் படும், அவ்வையார் விநாயகர் அகவலில் பிள்ளை தெய்வத்தை பாடும் போது கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே" என்று பாடுகிறார். கோடு ஆயுதம் என்பது மரத்தால் ஆன கழுமரமே ஆகும்.
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25) இந்தப் பாடல் மூலம் அவ்வையார் விநாயகரை 'குருவாக இந்த உலகில் பிறந்து மக்கள் மகிழ்ச்சியாக இருக்க அவர்களின் பாவத்தினை கோடு ஆயுதத்தால் நீக்கினார்' என்று கூறுகின்றார். இதுவும் இயேசு கிறிஸ்துவைப் பற்றியே குறிப்பிடுகிறது. பிள்ளை தெய்வம் கோடு ஆயுதத்தின் மூலம் மக்களின் வினையினால் வரும் பாவத்தினை போக்கினார் என்றும் கூறி இருக்கின்றார். https://vazhipokkanpayanangal.blogspot.com/2012/05/28.html
முந்தி
முந்தி என்ற வார்த்தை படைக்கப்பட்ட எல்லோருக்கும், எல்லாவற்றிருக்கும் முந்தியவர் என அர்த்தம். பரிசுத்த வேதாகமம் இயேசு கிறிஸ்துவை முந்தி முதல் கடவுள் எனக் குறிப்பிடுகிறது. அவர் தான் ஆதியில் இருந்தவர் ஆவார். அவரே அல்பாவும் ஒமெகாவும் ஆனவர் ஆவார். அப்படிப் பட்ட தெய்வம் இருக்கும் இடமாகிய கழுமரமாகிய சிலுவை நிற்கும் மலையாகிய கழுக்குன்றம் சென்று வணங்குவீர்களாக.
பரிசுத்த வேதாகமம்
அப்பொழுது பிலாத்து இயேசுவைப்பிடித்து வாரினால் அடிப்பித்தான். போர்ச்சேவகர் முள்ளுகளினால் ஒரு முடியைப் பின்னி அவர் சிரசின்மேல் வைத்து, சிவப்பான ஒரு அங்கியை அவருக்கு உடுத்தி: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று சொல்லி, அவரைக் கையினால் அடித்தார்கள். பிலாத்து மறுபடியும் வெளியே வந்து: நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்று நீங்கள் அறியும்படிக்கு, இதோ, உங்களிடத்தில் இவனை வெளியே கொண்டுவருகிறேன் என்றான். இயேசு, முள்முடியும் சிவப்பங்கியும் தரித்தவராய், வெளியே வந்தார். அப்பொழுது பிலாத்து அவர்களை நோக்கி: இதோ, இந்த மனுஷன் என்றான். யோவான் 19:1-5
ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல,கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள். 1 கொரி 15:22-23
நாள் உண்டகாததற்கு முன்னும் நானே இருக்கிறேன்; என் கைக்குத் தப்புவிக்கத்தக்கவன் இல்லை; நான் செய்கிறதைத் தடுப்பவன் யார்? ஏசாயா 43:13
இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார். வெளி 1:8
3) பிளிறு தீரப்
பிளிறு என்றால் பேரோசை அல்லது பெரிய சத்தம் என அர்த்தம் ஆகும். இயேசு கிறிஸ்து சிலுவையிலே மகா சத்தமாய் கூப்பிட்டு தன் உயிரை விட்டார், அவருடைய சத்தம் தீர்ந்து முடிவுக்கு வந்தது, அந்த நிகழ்ச்சியைப் பிளிறு தீர எனக் கூறப்பட்டுள்ளது.
பரிசுத்த வேதாகமம்
சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது. இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார். லூக்கா 23:45-46
4) பெருங்கைப் பெய்ம்
பெருங்கை என்பது உயர்வான அல்லது சிறந்த கைகள் என் அர்த்தம் ஆகும். பெய்ம் என்ற வார்த்தை மேலிருந்து மழை போல் விழுந்து கொட்டுவதை காண்பிக்கிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் போது இரண்டு கைகளிலும் காலிலும் ஆணிகள் அடிக்கப்பட்டார், அதனால் உண்டான இரத்தம் மழையைப் போல் அவருடைய சிறந்த கைகளில் இருந்து விழுந்து தரையில் கொட்டியது, இதையே பெருங்கைப் பெய்ம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பரிசுத்த வேதாகமம்
அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, ………… கொலோ 1:20
5) மதம் மூன்று உடைக்களி
மதம் என்ற வார்த்தை வலிமையான என அர்த்தம் ஆகும் மூன்று உடைக்களி என்பது மூன்று ஆணிகள் என அர்த்தம் எடுக்கலாம், அதாவது இயேசு கிறிஸ்து சிலுவையில் வலிமையான மூன்று கூர்மையான ஆணியினால் அறையப்பட்டுத் தொங்கினார் அதையே மதம் மூன்று உடைக்களிறினோடு என எழுதப்பட்டுள்ளது
5) உடைக்களிறினோடு பிடி சூழ் தண் கழுக்குன்றமே
உடைக்களிறினோடு என்ற வார்த்தையை வேறு விதமாக எடுத்தால் உடை என்றால் உடைக்கப்பட்ட என் அர்த்தம் ஆகும், களிறு அவனோடு என்பது களிறு என்பவனோடு என எடுக்கப்படவேண்டும் களிறு என்ற வார்த்தைக்குக் கள்ளன் என்ற அர்த்தம் உண்டு. இந்த இடம் தெய்வம் கழுமரத்தில் ஏற்றப்பட்ட நிகழ்வுகள் அடங்கிய இடமாகும், இந்த இடத்தில் யானைக்கு வேலையில்லை.
சிலுவையில் அறையப்பட்டவர்கள் சாயங்காலத்திற்குள் சாகவில்லை என்றால் அவர்களுடைய கால் எலும்புகள் உடைக்கப்பட்டு மரணத்தை வர வைப்பார்கள் அப்படியே பிடிக்கப்பட்ட கள்ளர்களின் கால் எலும்புகள் உடைக்கப்பட்டது, இயேசு கிறிஸ்துவின் கால் எலும்புகள் முறிக்கப்படவில்லை, அப்படிப் பிடிக்கப்பட்டு கால் எலும்பு உடைக்கப்பட்ட கள்ளர்கள் சூழ்ந்து இருந்த சாந்தமான தன்மையுள்ள கழுமரமாகிய சிலுவை இருக்கும் கழுக்குன்றமே ஆகும்.
பரிசுத்த வேதாகமம்
அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாயிருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு, யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள். அந்தப்படி போர்ச்சேவகர் வந்து, அவருடனேகூடச் சிலுவையில் அறையப்பட்ட முந்தினவனுடைய காலெலும்புகளையும் மற்றவனுடைய காலெலும்புகளையும் முறித்தார்கள். அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைக் கண்டு, அவருடைய காலெலும்புகளை முறிக்கவில்லை. யோவான் 19:31-33
------------------------------------------------------------------------------ NEXT
வெளிறு = குற்றம், பாடல் வரி, அகம்.106:11. https://mydictionary.in/ வெளிறு
ஆடி = அளைந்து, பாடல் வரி,அகம்.227:10. https://mydictionary.in/ ஆடி
அளை = குகை, பாடல் வரி,அகம்.52:5 அகம்.88:12 அகம்.147:5 அகம்.168:11 அகம்.258:7 அகம்.342:11 அகம்.362:4. https://mydictionary.in/ அளை
மதம் = வலிமை, பாடல் வரி ,அகம்.307:8 https://mydictionary.in/ மதம்
களிறு = ஆண்பன்றி, யானை, சுறா, கள்வன் https://mydictionary.in/ களிறு
இலங்கு = விளங்குகின்ற https://mydictionary.in/ இலங்கு
உடைக்களி =உடைக்கும் கூர்மையான ஆணியை ஏற்றுக்கொண்ட தெய்வத்தோடு ( கள்ளியில் உள்ள முள் போன்ற ஆணி )
முளரி muḷari s. the lotus; 2. a thorn bush, முட்செடி
பிளிறு piḷiṟu s. Noise, sound, roar, din of voices, ஆரவாரம். noise, sound, இரைச்சல்
மழு = கோடரி, காண்க: மழுவாள், பழுக்கக் காய்ச்சிய இரும்பு, மழு, யோகியர், தண்டு, தடி, ஒருவகைத் தைலம் https://mydictionary.in/ மழு
コメント