குடவாசல் - kudavasal, 2ஆம் திருமுறை 2022 திருக்குடவாயில் - பண் – இந்தளம் - திருச்சிற்றம்பலம்
2.022 திருக்குடவாயில், பண் - இந்தளம், திருச்சிற்றம்பலம்
என்தன் உளம் மேவி இருந்த பிரான்; கன்றன்; மணி போல் மிடறன்; கயிலைக் குன்றன்; குழகன் குடவாயில்தனில் நின்ற பெருங்கோயில் நிலாயவனே.
குடவாசல்
குடவாயில் என்று சங்க காலத்தில் அழைக்கப்பட்ட குடவாசல் (Kodavasal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்திலுள்ள, குடவாசல் வட்டம் மற்றும் குடவாசல் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடம் இடமும், ஒரு பேரூராட்சியும் ஆகும்.
இந்த ஊரின் பெயரை வைத்து குடவாசல் என்பதற்குப் பல விளக்கம் சொல்லப்படுகிறது. ஆனால் குடவாசல் என்பதற்குச் சரியான அர்த்தம் கொடுக்கப்படவில்லை, குடவாசல் அல்லது குடவாயில் என்ற வார்த்தையை ஆராய்ந்து பார்க்கவேண்டும்.


. இயேசு கிறிஸ்துவின் காலத்திற்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மலைகளில் குடைந்து எடுக்கப்பட்ட ஒரு குகையைக் கல்லறையாக பயன்படுத்தியுள்ளனர், இயேசு கிறிஸ்துவின் கல்லறையும் அப்படிப்பட்டதே, அப்படிப்பட்ட கல்லறையே குடவாசல் என்று அழைக்கப்படுகிறது. இரந்த ஒருவரை உள்ளே வைத்து விட்டு ஒரு பெரிய கல்லை வைத்து மூடிவிடுவார்கள். அதைக் கீழே உள்ள வசனங்கள் மூலமாக அறிந்து கொள்ள முடியும்.
இந்த பாடலில் "குடவாயில்தனில் நின்ற பெருங்கோயில் நிலாயவனே" என்ற வரிகள் வருகின்றன, அந்த பாடல் வரிகள் குடைந்து எடுக்கப்பட்ட கல்லறையின் வாசலில் உயிர்தெழுந்து நின்ற இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
கன்றன்
இந்த பாடலில் கன்றன் என்ற வார்த்தை வருகின்றது, கன்றன் என்ற வார்த்தைக்குக் கன்று + அவன் ஆகும். கன்று என்பது பிள்ளை தெய்வமாகிய இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது.
பாடல் விளக்கம்
என்தன் உளம் மேவி இருந்த பிரான்; கன்றன்; மணி போல் மிடறன்; கயிலைக் குன்றன்; குழகன் குடவாயில்தனில் நின்ற பெருங்கோயில் நிலாயவனே
என்தன் உளம் மேவி இருந்த = என்னுடைய உள்ளத்தை அன்பினால் நிறைத்த
பிரான்; கன்றன்; = தெய்வம் ஆகிய கன்று+அவன் (பிள்ளை தெய்வம்)
மணி போல் மிடறன்; = மாணிக்கம் போன்று பரிசுத்தர்
கயிலைக் குன்றன்; = பரலோக மலையில் வாசம் செய்பவர்
( திருப்பரங்குன்றம், சீயோன் மலை )
குழகன் = அழகன்
குடவாயில்தனில் நின்ற = குடைந்து எடுக்கப்பட்ட கல்லறையின் வாயில்தனில் உயிர்த்தெழுந்து நின்றவன்
பெருங்கோயில் = உள்ளமாகிய பெரும் கோயிலில் வாசம் செய்து
நிலாயவனே = மனிதனை ஆளுபவனே
விளக்கம்
என்னுடைய உள்ளத்தை அன்பினால் நிறைத்த தெய்வம் ஆகிய கன்று+அவன் ( பிள்ளை தெய்வமாகிய இயேசு கிறிஸ்து ) மாணிக்கம் போன்று பரிசுத்தர் ஆவார், அவர் பரலோகத்தில் இருக்கும் சீயோன் மலையில் வாசம் செய்பவர் ஆவார் ( திருப்பரங்குன்றம், கைலாய மலை ) அவர் ஆயிரம் பேரில் சிறந்த அழகன் ஆவார், அவர் குடைந்து எடுக்கப்பட்ட கல்லறையின் வாயில்தனில் உயிர்த்தெழுந்து நின்றவர் ஆவார், அவர் நம்முடைய உள்ளமாகிய பெரும் கோயிலில் வாசம் செய்து நம்மை ஆளுபவர் அல்லது ஆட்கொண்டவர் ஆவார்.
தெளிவான விளக்கம்
1) என்தன் உளம் மேவி இருந்த பிரான்;
என்தன் உளம் மேவி இருந்த வார்த்தைக்கு என்னுடைய உள்ளத்தை அடைந்து என்னை முழுமையாக ஆட்கொண்டு இருக்கும் தெய்வம் என அர்த்தம். தெய்வம் நம் உள்ளத்தை ஆட்கொண்டவர் ஆவார் அதனால் தான் அவரை நாம் ஆண்டவர் என அழைக்கிறோம்.
பரிசுத்த வேதாகமம்
பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம். தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும். 1 யோவான் 4;11-12
2) கன்றன்; மணி போல் மிடறன்;
கன்றன் என்ற வார்த்தை எழுதப்பட்டுள்ளது, கன்றன் என்றால் கன்று+அவன் ஆகும். தெய்வத்தை கன்றன் எனக் குறிப்பிடுவது தெய்வத்தை பிள்ளை தெய்வமாக அழைப்பதற்காகத் தான். இந்த கன்றன் என்ற வார்த்தை பிள்ளை தெய்வமாகிய இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது அவர் மாணிக்கம் போன்று பரிசுத்தர் ஆவார், மிடறு என்பது பரிசுத்தம் ஆகும்.
கன்றன் என்ற வார்த்தையில் இருந்து கந்தன் என்ற வார்த்தை வந்திருக்க வேண்டும்.
3) கயிலைக் குன்றன்;
கயிலை என்ற வார்த்தை பரலோகத்தை காண்பிக்கிறது. கயிலைக் குன்றன் என்றால் தெய்வம் பரலோகத்தில் இருக்கும் சீயோன் மலையில் வாசம் செய்வதைக் காண்பிக்கிறது. பரலோக மலையைத் திருப்பரங்குன்றம், வடமலை, கைலாய மலை, மேருமலை, உத்தர்காசி என்று அழைக்கிறோம். இதைப் பற்றி அறியப் பார்க்கவும்
4) குழகன் குடவாயில்தனில் நின்ற
அவர் ஆயிரம் பேரில் சிறந்த அழகன் ஆவார், அவருடைய சிலுவை மரணத்துக்குப் பிறகு அவரை ஒரு கன்மலையில் வெட்டி எடுக்கப்பட்ட குகைக் கல்லறையில் வைத்தார்கள். அவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து அந்த குடைந்து எடுக்கப்பட்ட கல்லறையின் வாயில்தனில் உயிரோடு நின்றவர் ஆவார், அதையே குடவாயில்தனில் நின்ற என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பரிசுத்த வேதாகமம்
அவன் போய், மெல்லிய துப்பட்டியை வாங்கிக்கொண்டுவந்து, அவரை இறக்கி, அந்தத் துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டியிருந்த கல்லறையிலே அவரை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு கல்லைப் புரட்டிவைத்தான். அவரை வைத்த இடத்தை மகதலேனா மரியாளும், யோசேயின் தாயாகிய மரியாளும் பார்த்தார்கள். மத்தேயு 15:46-47
மரியாள் கல்லறையினருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்; அப்படி அழுதுகொண்டிருக்கையில் அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்து, இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளுடை தரித்தவர்களாய் இரண்டு தூதர்கள், தலைமாட்டில் ஒருவனும் கால்மாட்டில் ஒருவனுமாக, உட்கார்ந்திருக்கிறதைக் கண்டாள். அவர்கள் அவளை நோக்கி: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள்: என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள். இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள்; ..................... . அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம். யோவான் 20:11-16
5) பெருங்கோயில் நிலாயவனே
அவர் நம்முடைய உள்ளமாகிய பெரும் கோயிலில் வாசம் செய்து நம்மை ஆளுபவர் அல்லது ஆட்கொண்டவர் ஆவார்.
பரிசுத்த வேதாகமம்
உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோயில்களில் அவர் வாசம் பண்ணுகிறதில்லை. அப் 17:24 நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம். 1 கொரி 3:16:17
இதே விசயத்தைச் சைவ சித்தாந்தம், பத்தாம் திருமறை, ஏழாம் தந்திரம், திருமூலர் திருமந்திரம் 1823வது பாடலில் உள்ளமே தெய்வம் வாழும் பெரிய கோயில், நமது சதையினால் ஆன உடம்பு தெய்வம் வாழும் ஆலயம் என அழகாகக் குறிப்பிடுகிறது.
திருமந்திரம் கூறும் இல்வாழ்வான்
திருமந்திரம் #1823 நமது உள்ளமே பெரிய கோயில் எனக் குறிப்பிடுகிறது.
உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்,
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்,
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கு
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மேவுதல் : அடைதல் விரும்புதல் நேசித்தல் உண்ணுதல் ஓதுதல் நிரவிச் சமனாக்குதல் மேலிட்டுக்கொள்ளுதல் வேய்தல் அமர்தல் பொருந்துதல்
மணி = முத்து, மாணிக்கம் ---- மிடறன் = விசுத்தன் = பரிசுத்தன்
விசுத்தம் : மிகு தூய்மை
guru
Comentarios