Everlasting -அந்தம் இல்லா அடியார்
சுந்தரமூர்த்தி சுவாமிகள்-திருப்பாட்டு - 7 -ஆம் திருமுறை-தலம்:கழுக்குன்றம் - திருக்கழுக்குன்றம் - பதிகம் 7.081 பாடல் 8 அந்தம் இல்லா அடியார்
அந்தம் இல்லா அடியார் தம் மனத்தே உற
வந்து, நாளும் வணங்கி, மாலொடு நான்முகன்
சிந்தை செய்த மலர்கள் நித்தலும் சேரவே
கந்தம் நாறும் புறவின் தண் கழுக்குன்றமே.
சொற்பொருள்
அந்தம் இல்லா அடியார் = அந்தம் இல்லாத அடியார் என்றால் முடிவில்லா ராஜ்யத்தை சென்று சேரக்கூடிய அடியார்களாகிய அவருடைய பக்தர்கள் அல்லது தெய்வத்தின் மேல் அன்புள்ளவர்கள் ஆவார்கள்.
தம்மனத் தேஉற = பக்தர்கள் அல்லது தெய்வத்தின் மேல் அன்புள்ளவர்கள் மனதில் வாழும் தெய்வம் ஆகும்
வந்து நாளும் வணங்கி = அவர் இருக்கும் இடத்தில் வந்து தினமும் வந்து வணங்குவாயாக
மாலொடு நான்முகன் = புனிதமான மேகத்தில் இருந்து பிதாவும், நானே வழி என்று சொன்ன தெய்வமும் அவர்களோடு இருந்து
சிந்தை செய்த மலர்கள் = ( சிந்தை எண்ணம் - செய்த = செய்து முடித்த– மலர்கள் = மலர்ந்த அல்லது உயிரோடு அல்லது இரந்து வானத்துக்கு எடுத்துக்கொள்ளப் பட்டவர்கள் இருவர்) இந்த பூமியில் இருக்கும் வரை தெய்வத்தின் சித்தம் அல்லது சிந்தை என்ன என்று அறிந்து அதை நிறைவேற்றியவர்களாகிய எலியாவும் மோசே இருந்த இடத்தில்
நித்தலுஞ் சேரவே = எல்லா நாளும் வந்து ஒன்று கூடி ஆராதிக்க வேண்டும்.
கந்தம் நாறும் = கந்தவர்க்கங்கள் மணக்கும் இடமாகிய
புறவிற் றண்கழுக் குன்றமே = புறாவை போல பரிசுத்தமான சாந்தமான தண் கழுமரம் இருக்கும் கழுக்குன்றமே.
விளக்கம்
அந்தம் இல்லாத அடியார் என்றால் முடிவில்லா ராஜ்யத்தை சென்று சேரக்கூடிய அடியார்களாகிய அவருடைய பக்தர்கள் அல்லது தெய்வத்தின் மேல் அன்புள்ளவர்களின் மனதில் வாழும் தெய்வம் ஆவார். அப்படிப்பட்ட தெய்வம் இருக்கும் இடத்தில் வந்து தினமும் வந்து வணங்குவீர்களாக.
புனிதமான மேகத்தில் இருந்து பிதா, நானே வழி என்று சொன்ன தெய்வமாகிய இயேசு கிறிஸ்து மறுரூபமாகிப் பேசிக் கொண்டு இருந்த போது அந்த இடத்தில் எலியாவும் மோசேவும் பிதாவோடும், இயேசு கிறிஸ்துவுடன் வானத்தில் தோன்றி காட்சியளித்தனர். அதையே மாலொடு நான்முகன்சிந்தை செய்த மலர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எலியாவும், மோசேவும் இந்த பூமியில் இருக்கும் வரை தெய்வத்தின் சித்தம் அல்லது சிந்தை என்ன என்று அறிந்து அதை நிறைவேற்றியவர்கள் அவர்கள் உயிரோடு அல்லது இரந்து வானத்துக்கு எடுத்துக்கொள்ளப் பட்டவர்கள் ஆவார்கள். அதனால் அவர்களை மலர்கள் (மலர்ந்தவர்கள்) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி அந்த நான்கு பேர்களும் ஒன்று சேர்ந்து காட்சி கொடுத்த மலைக்கு நாம் எல்லா நாளும் வந்து ஒன்று கூடி ஆராதிக்க வேண்டும்.
இயேசு கிறிஸ்துவை அவருடைய சிலுவை மரணத்திற்குப் பிறகு கந்தவர்க்கங்கள் இட்டு அருகில் இருந்த குகை கல்லறையில் வைத்தார்கள் அப்படி அந்த கந்தவர்க்கங்கள் மணக்கும் இடமாகிய புறாவைப் போல பரிசுத்தமான அல்லது சாந்தமான தன்மையுள்ள கழுமரமாகிய சிலுவை நிற்கும் தண் கழுக்குன்றமே.
தெளிவான விளக்கம்.
1) அந்தம் இல்லா அடியார் தம் மனத்தே உற வந்து, நாளும் வணங்கி,
அந்தம் இல்லாத அடியார் என்றால் முடிவில்லா ராஜ்யத்தை சென்று சேரக்கூடிய அடியார்களாகிய அவருடைய பக்தர்கள் அல்லது தெய்வத்தின் மேல் அன்புள்ளவர்களின் மனதில் வாழும் தெய்வம் ஆவார். அப்படிப்பட்ட தெய்வம் இருக்கும் இடத்தில் வந்து தினமும் வந்து வணங்குவீர்களாக.
முடிவில்லா ராஜ்யம் – பரலோகம் - நரகம்
முடிவில்லா ராஜ்யம் என்பது பரலோக ராஜ்யமும், நரக வாழ்வும் ஆகும், தேவன் ஒவ்வொரு மனிதனையும் இந்த உலகத்தை ஜெயித்துப் பரலோக ராஜ்யத்திற்கு வந்து சேர வேண்டும் என்பதற்காகப் படைத்துள்ளார். அவர் மனிதனுக்கு என்று பரலோகத்தில் இடம் ஆயத்தம் பண்ணியுள்ளார். அதைப் புரிந்து கொள்ளாமல் இந்த பூமியில் வாழ்ந்து இந்த பூமியை ஜெயிக்காத மனிதர்கள் முடிவில்லா நரக வாழ்க்கைக்குச் செல்வார்கள். அதனால் தான் இந்த பாடல் வரிகள் மனிதனை அந்தம் இல்லா அடியார் எனக் குறிப்பிடுகிறது.. முடிவில்லா ராஜ்யமான பரலோகத்துக்குத் தகுதியுள்ளவர்களின் உள்ளத்தில் வாழும் தெய்வம் ஆவார்.
பரிசுத்த வேதாகமம்
என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன். யோவான் 14:1-2
பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம். ஏனெனில், இந்தக் கூடாரத்திலே நாம் தவித்து, நம்முடைய பரம வாசஸ்தலத்தைத் தரித்துக்கொள்ள மிகவும் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம்; 2 கொரி 5:1-2
2) மாலொடு நான்முகன்
மால் என்பது புனிதமான மேகம் ஆகும், நான் முகனும் என்பது நானே வழி என்று சொன்ன தெய்வம் ஆகும், முகம் என்பது வழியாகும். மேகத்தில் இருந்து பிதாவும், நானே வழி என்று சொன்ன இயேசு கிறிஸ்துவும் சந்தித்ததை இந்த வரிகள் யாபகப் படுத்துகின்றது.
பரிசுத்த வேதாகமம் இந்த நிகழ்வைப் பற்றி கூறும் போது, ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல் போய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று. அப்பொழுது மோசேயும், எலியாவும் அவரோடே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள். அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்குச் சித்தமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான். அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. இதையே மால் உடன் நான் முகன் என்று குறிப்பிடப்படுகிறது.
பரிசுத்த வேதாகமம்
"அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். யோவான்" 14:6
நானே வழி என்பது நான் முகன் ஆகும். முகம் என்பது வழி என்பதை அறிந்து கொள்ள ஆறுமுகம் என்ற பக்கத்தைப் பார்க்கவும் (GO)
3) சிந்தை செய்த மலர்கள் நித்தலும் சேரவே
அந்த இடத்தில் எலியாவும் மோசேவும் பிதாவோடும், இயேசு கிறிஸ்துவுடன் வானத்தில் தோன்றிக் காட்சியளித்து நான்கு பேர்களும் பேசிக் கொண்டு இருந்தார்கள்.. அதையே மாலொடு நான்முகன்சிந்தை செய்த மலர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எலியாவும், மோசேவும் இந்த பூமியில் இருக்கும் வரை தெய்வத்தின் சித்தம் அல்லது தெய்வத்தின் சிந்தை என்ன என்று அறிந்து அதை நிறைவேற்றியவர்கள் அவர்கள் உயிரோடு அல்லது இரந்து வானத்துக்கு எடுத்துக்கொள்ளப் பட்டவர்கள் ஆவார்கள். அதனால் அவர்களை மலர்கள் (மலர்ந்தவர்கள்) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி அந்த நான்கு பேர்களும் ஒன்று சேர்ந்து காட்சி கொடுத்துப் பேசிக் கொண்டிருந்த மலைக்கு நாம் எல்லா தினமும் வந்து ஒன்று கூடி ஆராதிக்க வேண்டும்
பரிசுத்த வேதாகமம்
எலியா பரலோகத்துக்கு உயிரோடு எடுத்துக் கொள்ளப்படுதல்
அவர்கள் அக்கரைப்பட்டபின்பு, எலியா எலிசாவை நோக்கி: நான் உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படு முன்னே நான் உனக்குச் செய்யவேண்டியது என்ன, கேள் என்றான். அதற்கு எலிசா: உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டுகிறேன் என்றான். அதற்கு அவன்: அரிதான காரியத்தைக் கேட்டாய்; உன்னைவிட்டு நான் எடுத்துக்கொள்ளப்படுகையில் என்னை நீ கண்டால் உனக்குக் கிடைக்கும்; இல்லாவிட்டால் கிடையாது என்றான். அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகையில், இதோ, அக்கினிரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான்.
மோசேயின் சரீரத்தைத் தேவனே அடக்கம் பண்ணினார்
பின்னர் கர்த்தருடைய தாசனாகிய மோசே மோவாப் நாட்டில் மரித்தான். கர்த்தர் மோசேயிடம் இவை நிகழும் என்று சொல்லியிருந்தார். 6 கர்த்தர் மோசேயை மோவாபில் அடக்கம் செய்தார். இது பெத்பேயோருக்கு எதிர்புறத்தில் உள்ள பள்ளத்தாக்கிலே உள்ளது. ஆனால் இன்றுவரை மோசேயின் கல்லறை எங்கே இருக்கிறது என்று எவருக்கும் தெரியாது. உபாகமம் 34:5-6
4) கந்தம் நாறும் புறவின் தண் கழுக்குன்றமே
இயேசு கிறிஸ்துவை அவருடைய சிலுவை மரணத்திற்குப் பிறகு கந்தவர்க்கங்கள் இட்டு அருகில் இருந்த குகை கல்லறையில் வைத்தார்கள் அப்படி அந்த கந்தவர்க்கங்கள் மணக்கும் இடமாகிய புறாவைப் போல பரிசுத்தமான அல்லது சாந்தமான தன்மையுள்ள கழுமரமாகிய சிலுவை நிற்கும் தண் கழுக்குன்றமே.
பரிசுத்த வேதாகமம்
இவைகளுக்குப்பின்பு ( இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்துக்குப் பின்பு ) அரிமத்தியா ஊரானும், யூதருக்குப் பயந்ததினால் இயேசுவுக்கு அந்தரங்க சீஷனுமாகிய யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோகும்படி பிலாத்துவினிடத்தில் உத்தரவு கேட்டான்; பிலாத்து உத்தரவு கொடுத்தான். ஆகையால் அவன் வந்து, இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோனான். ஆரம்பத்திலே ஒரு இராத்திரியில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டுவந்தான். அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம்பண்ணும் முறைமையின்படியே அதைச் சுகந்தவர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள். யோவான் 19:38-40
Comments