Holy Creator of universe - வெள்ளைத் தலையன்,சுந்தரமூர்த்தி சுவாமிகள்-திருப்பாட்டு - 7 -ஆம் திருமுறை-தலம்:கழுக்குன்றம் - திருக்கழுக்குன்றம் - பதிகம் 7.081 பாடல் 10
பல் இல் வெள்ளைத் தலையன் தான் பயிலும்(ம்) இடம்,
கல்லில் வெள்ளை அருவித் தண் கழுக்குன்றினை,
மல்லின் மல்கு திரள்தோள் ஊர வனப்பினால்
சொல்லல் சொல்லித் தொழுவாரைத் தொழுமின்களே!
பல் இல் = பல மனிதர்களின் உள்ளமாகிய இல்லங்களில் வாழும்
வெள்ளைத் தலையன் = பரிசுத்தமான முதல்வன் அதாவது அண்டங்களைப் படைத்தவன்
தான் பயிலும்(ம்) இடம், = அவர் தங்கும் இடமாகிய
கல்லில் = மூலைக் கல்லான அல்லது ஞானக் கன்மலையான தெய்வத்தின்
வெள்ளை அருவித் = உடம்பில் இருந்து பரிசுத்தமான இரத்தம் அருவியாக வந்த
தண் கழுக்குன்றினை, = சாந்தமான கழுமரம் நிற்கும் கழுக்குன்றினை
மல்லின் மல்கு = ( மல் + இன் ) வலிமை நிறைந்த இனிமையான
திரள்தோள் ஊர = பெரிய தோள்களை உடைய ஊரனை
வனப்பினால் = பரிசுத்த அலங்காரத்துடன்
சொல்லல் சொல்லித் = ( சொல்+அல் ) வார்த்தை அல்லாத வார்த்தைகளைச் சொல்லி
தொழுவாரைத் தொழுமின்களே! = வணங்கக் கூடியவரை வணங்குவீர்களாக இனிமையான மக்களே
விளக்கம்
பல மனிதர்களின் உள்ளமாகிய இல்லங்களில் வாழும் பரிசுத்தமான முதல்வன் அதாவது அண்டங்களைப் படைத்தவன் அவர் தங்கும் இடமாகிய கழுக்குன்றம் சென்று வழிபட வேண்டும். அந்த கழுக்குன்றம் மூலைக் கல்லான அல்லது ஞானக் கன்மலையான தெய்வத்தின் உடம்பில் இருந்து பரிசுத்தமான இரத்தம் அருவியாக வந்த சாந்தமான கழுமரம் நிற்கும் கழுக்குன்றம் ஆகும்.
கழுக்குன்றத்தில் தன்னையே பலியாகக் கொடுத்த தெய்வம் வலிமை நிறைந்த இனிமையான பெரிய தோல்களை உடைய ஊரன் ஆவார். அவர் நம்மை அழுத்துகிற பாவத்தினாலும், சாபத்தினாலும் வரும் கஷ்டங்கள் நம்மைச் சேதப்படுத்தாதபடி நம்மைப் பாதுகாக்கும் படியாக நம்மைத் தூக்கிச் சுமக்கும் தோழ்களை உடைய தெய்வம்
அப்படிப் பட்ட வணக்கத்துக்கு உரியவரை. பரிசுத்த அலங்காரத்துடனும் வார்த்தை அல்லாத வார்த்தைகளைச் சொல்லியும் ( வேறு பாசைகளினால் அல்லது கொல விடுவதின் மூலம் ) வணங்குவீர்களாக இனிமையான மக்களே

தெளிவான விளக்கம்
1) பல் இல் வெள்ளைத் தலையன் தான் பயிலும்(ம்) இடம்,
தெய்வம் பல மனிதர்களின் உள்ளமாகிய இல்லங்களில் வாழும் பரிசுத்தமான ஆதி முதல்வன் அதாவது அண்டங்களைப் படைத்தவன் ஆவார். அவர் தங்கும் இடமாகிய கழுமரமாகிய சிலுவை நிற்கும் கழுக்குன்றம் சென்று வழிபட வேண்டும்.
பல் என்பது பல என்பதாகும், இல் என்பது இல்லம் அல்லது இல்வாழ்வான் ஆகும். திருவள்ளுவர் தனது 41வது குறளில் இல்வாழ்வான் யார் எங்க் குறிப்பிட்டுள்ளார்.
குறள் 41
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை
இல்வாழ்வானைப் பற்றி திருவள்ளுவர் தனது 41வது குறளிலும் மற்றும் 42வது குறளிலும் குறிப்பிடுகிறார். மற்ற எட்டு குறளிலும் இல்வாழ்க்கை என்று குறிப்பிடுகிறார். இல்வாழ்வான் என்று கூறுவது நமது உள்ளமாகிய வீட்டில் வாழும் தெய்வத்தைக்குறிப்பதாகும்.எனவே தான் தெய்வத்தை மாடசாமி என்றும், ஸ்ரீநிவாசன், ( ஸ்ரீனிவாசன், சீனிவாசன் ) என்றும், ஐந்து வீட்டு சாமி என்றும் கூறுகிறோம்
பரிசுத்த வேதாகமம் இல்வாழ்வானைப்பற்றிக் கூறும் போது
நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம். 1 கொரி 3:16:17
உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? 1 கொரி 6:19
2) கல்லில் வெள்ளை அருவித் தண் கழுக்குன்றினை,
அந்த கழுக்குன்றம் மூலைக் கல்லான அல்லது ஞானக் கன்மலையான தெய்வத்தின் உடம்பில் இருந்து பரிசுத்தமான இரத்தம் அருவியாக வந்த சாந்தமான கழுமரம் நிற்கும் கழுக்குன்றம் ஆகும்.
இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் போது கடைசியாக அவருடைய உடம்பில் இருந்து ஒரு போர் சேவகன் ஈட்டியினால் குத்தும் போது பரிசுத்த இரத்தமும் தண்ணீரும் அருவி போலப் புறப்பட்டு கீழ் நோக்கிச் சுற்றி விழுந்தது இதையே வெள்ளை அருவி என குறிப்பிடப்பட்டுள்ளது.
பரிசுத்த வேதாகமம் இயேசு கிறிஸ்துவை 18 வகையான கல் எனக் குறிப்பிடுகிறது. 1) ஜீவனுள்ள கல் அல்லது உயிர் உள்ள கல் ( Living stone) 2) தெரிந்து கொள்ளப்பட்ட கல் ( Chosen by GOD ) 3) விலையேறப் பெற்ற கல் ( Precious stone ) 4) இடறுதற்கான கல் ( Stumbling stone ) 5) தள்ளப்பட்ட கல் ( Rejected stone or Disallowed stone ) 6) மூலைக்கல் ( Corner stone ) 7) அஸ்திபாரமான கல் ( Foundation Stone ) 8) பரீட்சிக்கப்பட்ட கல் ( Tried or Tested Stone ) 9) நொறுங்கிப்போடுகிற கல் (broking stone ) 10) நசுக்கிப் போடும் கல் ( A crushing stone ) 11) அவரே கன்மலை ( He is the Rock ) 12) தவறுதற்கான கன்மலை ( Rock of Offence or Stumbling stone ) 13) நம்மை ஜெநிப்பித்த கன்மலை (Begotted Rock ) 14) வந்தடையத்தக்கக் கன்மலை ( Habitation rock ) 15) இரட்சிப்பின் கன்மலை ( Rock of my salvation ) 16) பெலமாகிய கன்மலை ( Rock of thy strength ) 17) தாகம் தீர்க்கும் கன்மலை 18 ) நித்திய கன்மலை ( Everlasting Rock )
3) மல்லின் மல்கு திரள்தோள் ஊர
கழுக்குன்றத்தில் தன்னையே பலியாகக் கொடுத்த தெய்வம் வலிமை நிறைந்த இனிமையான பெரிய தோள்களை உடைய ஊரன் ஆவார். அவர் நம்மை அழுத்துகிற பாவத்தினாலும், சாபத்தினாலும் வரும் கஷ்டங்கள் நம்மைச் சேதப்படுத்தாதபடி நம்மைப் பாதுகாக்கும் படியாக நம்மைத் தூக்கிச் சுமக்கும் தோழ்களை உடைய தெய்வம்
ஊரன் என்பது நமது ஊருக்குள் வாழும் தெய்வம் அவர். அதனால் தான் எல்லா ஊரிகளிலும் ஊர் மத்தியில் கோயில்கள் அமைந்துள்ளது. பரிசுத்த வேதாகமம் தெய்வத்தை நமது நடுவில் வாசம் பண்ணும் தெய்வம் எங்க் குறிப்பிடுகிறது.
நான் உங்கள் நடுவில் உலாவி உங்கள் தேவானாய் இருப்பேன் என்று கூறுகிறார். லேவி 2612
நான் உங்கள் நடுவே வாசம்பண்ணி,உங்களுக்கு தேவனாயிருப்பேன் என்று கூறுகிறார்.. ...யாத் 29:45
ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவதுபோல, நீங்கள் இவ்விடத்திற்கு வருகிறவரைக்கும், நடந்து வந்த வழிகள் எல்லாவற்றிலும், உங்கள் தேவனாகிய கர்த்தர்உங்களைச் சுமந்துகொண்டுவந்ததைக் கண்டீர்களே. உபாகமம் 1:31
4) வனப்பினால் சொல்அல் சொல்லித் தொழுவாரைத் தொழுமின்களே!
அப்படிப் பட்ட வணக்கத்துக்கு உரிய தெய்வத்தை. பரிசுத்த அலங்காரத்துடனும் வார்த்தை அல்லாத வார்த்தைகளைச் சொல்லியும் வணங்குவீர்களாக இனிமையான மக்களே
வனப்பினால் என்றால் அழகுடன் தொழுது கொள்ள வேண்டும் அதை பரிசுத்த வேதாகமம் அழகாகக் கூறுகிறது ஜனங்களின் வம்சங்களே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்;கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள். கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய சந்நிதியில் பிரவேசியுங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனேகர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள். பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்; அவர் பூச்சக்கரத்தை அசையாதபடிக்கு உறுதிப்படுத்துகிறவர். 1நாளாகமம் 16:28-30
சொல் அல் சொல்லி
சொல் அல் சொல்லி என்பது வார்த்தை அல்லாத வேறு வார்த்தையைப் போட்டு தெய்வத்தை தொழுது கொள்ளவேண்டும். அதன் விளக்கம் பரிசுத்த வேதாகமத்தில் மட்டுமே உள்ளது. பரிசுத்த வேதாகமம் அந்த வார்த்தையை அந்நியபாஷை என்றும் பரிகாச உதடுகளின் வார்த்தை என்றும் கூறுகிறது. இயேசு கிறிஸ்துவின் சீசர்கள் முதன் முதலில் பரிசுத்த ஆவியில் நிறைந்து பேசினார்கள். அந்த அந்நிய பாஷையை இன்றும் பேசிக் கொண்டு தான் இருக்கிறோம். அதை நமது வழக்கத்தின் படி கொல விடுதல் அல்லது குரவை விடுதல் என்று கூறுகிறோம். இந்த கொல விடுதல் திருமணத்தின் போதும், மற்ற விழாக்களின் போதும், பண்டிகை நாட்களிலும், இரந்த வீட்டிலும் விடுகிறோம். தெய்வத்தின் அருளாகிய பரிசுத்த ஆவி வரும் போது நம்மை மறந்து பேசும் ஒரு சொல் அல்லாத சொல் ஆகும்.
இன்றும் சொல் அல்லாத சொல்லில் வழிபடும் மக்கள்
சொல் அல்லாத சொல்லில் அதாவது அந்நிய பாஷையில் வழிபடும் மக்கள் கிறிஸ்துவ சமுதாயத்தில் அதிகம் உண்டு.. அந்நிய பாஷையை அதிகமாக உபயோகப்படுத்தும் ஆலயங்கள் பெந்தெகொஸ்தே ஆலயங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
பரிசுத்த வேதாகமம்..
பரியாச உதடுகளினாலும் அந்நியபாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார். ஏசாயா 28:11
அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள். அப் 2:2-4
---------------------------------------------------------------------------------------------------- NEXT
பல்- (193) : பல பாடல் வரி : அகம்.2:9 அகம்.5:9 அகம்.6:20 அகம்.9:17
இல் = இல்லறம், இல்வாழ்க்கை, வீடு
தலை- (10) : முதல், முடிவு, மேல்,பாடல் வரி :அகம்.69:19 அகம்.87:6 அகம்.126:4 அகம்.132:9 அகம்.136:12 அகம்.136:18 அகம்.187:8 அகம்.211:12 அகம்.318:9 அகம்.332:15.
அண்டம் : விதை முட்டை தலை கொட்டை(விதை) ஆகாயம் மூளை கஸ்தூரிப்பை மதம் அண்டநோய் (ஏறண்டம்)
அண்டம் அல்லது பிரபஞ்சம் அல்லது புடவி (universe, இலத்தீன்: universus) என்பது பரவெளி, நேரம்,[a] மற்றும் அவற்றின் உள்ளடக்கங்கள்,[10] கோள்கள், விண்மீன்கள், விண்மீன் திரள்கள் மற்றும் பிற அனைத்து வகையான பொருள் மற்றும் ஆற்றல்களையும் உட்கொண்டது. மல் : வளம் வருவாய் வலிமை மல்தொழில் மற்போர் செய்பவன் திருமாலாடிய கூத்து பருமை காண்க: மல்லுச்சட்டம் துகில்வகை
மல்கு- (3) : நிறைந்த பாடல் வரி : அகம்.233:1 அகம்.298:3 அகம்.391:3.
பயிலும் = தங்கும்
திரள் = திரண்ட, திரளாக, மொத்தமாக
கத்தம் : தோள் சாணி
ஊர : மறைக்க, நெருங்க
வனப்பு : அழகு இளமைநிறம் பலவுறுப்புத் திரண்டவழிப் பெறுவதொரு செய்யுள் அழகு பெருந்தோற்றம்
சொல் = வார்த்தை
அல்- (5) : அல்லாத பாடல் வரி : அகம்.5:5 அகம்.39:23 அகம்.93:2 அகம்.113:1 அகம்.392:20.
Kommentare