top of page
Search
Writer's picturej rajamohan

comeing of jesus - வானத்திலிருந்து இறங்கிவருவார்

Updated: Sep 26

comeing of jesus - வானத்திலிருந்து இறங்கிவருவார்

சுந்தரமூர்த்தி சுவாமிகள்-திருப்பாட்டு - 7 -ஆம் திருமுறை-தலம்:கழுக்குன்றம் - திருக்கழுக்குன்றம் - பதிகம் 7.081  பாடல் 9 பிழைகள் தீரத் தொழுமின்


பிழைகள் தீரத் தொழுமின்பின் சடைப் பிஞ்ஞகன்,

குழை கொள் காதன், குழகன், தான் உறையும்(ம்) இடம்-

மழைகள் சாலக் கலித்து நீடு உயர் வேய் அவை

கழை கொள் முத்தம் சொரியும் தண் கழுக்குன்றமே!


சொற்பொருள்

பிழைகள் தீரத் தொழுமின்  =  நம்முடைய குற்றங்கள், குறைகள் நீங்கத் தொழுவீர்களாக

பின் சடைப் பிஞ்ஞகன்,    = (  பின் என்றால் வழி, சடை = முள்முடி, பிஞ்ஞகன் = பிஞ்சு+அவன் )

சிலுவையில் முள்முடியைத் தனது தலையில் ஏற்றுக்கொண்ட தெய்வம் இந்த உலகத்தில் வந்து குமாரனாக அல்லது குழந்தையாகப் பிறந்தவர் ஆவார். அவர் பரலோகத்திற்குச் செல்ல வழியானவர் ஆவார் 

குழை கொள் காதன்,   = வானம் கொண்ட காதலன் அல்லது மணவாளன் அல்லது நாதன் . உயிர்த்தெழுந்து வானம் சென்று வலது பாரிசத்தில் அமர்ந்தவர் அதாவது வானத்தை ( பரலோகத்தை ) தமது இருப்பிடமாக்கி உயிர்த்தெழுந்து சென்றவர்.

 குழகன், தான் உறையும்(ம்) இடம்-  = அழகன், அப்படிப்பட்ட தெய்வம் குடிகொண்டிருக்கும் இடம் சென்று வழிபடுவீர்களாக

மழைகள் சாலக் கலித்து  = மழைகள் = மேகங்கள், சால = மிகவும்  கலித்து = ஒலித்து, யாழொலித்தல்

 நீடு உயர் வேய் அவை  =  நீடு = நீண்ட வாழ்வை அடைய, உயர் = உயர்ந்து (வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு)  வேய் = ஜீவ கிரீடத்தை சூடிய அல்லது பெற்று கொண்ட,  அவை = சபை

கழை கொள்  =  கழை = தண்டு அல்லது கோல் --- கொள் = ஏற்றுக் கொண்ட

முத்தம் சொரியும் தண் கழுக்குன்றமே!  =  முத்தம் = முத்தி, வீடுபேறு ---- முத்தி அல்லது பரலோக வாழ்க்கை கொடுக்கும் கழுமரமாகிய சிலுவை நிற்கும் சாந்தமான கழுக்குன்றமே


விளக்கம்

சிலுவையில் முள்முடியைத் தனது தலையில் ஏற்றுக்கொண்ட தெய்வம் இந்த உலகத்தில் வந்து குமாரனாக அல்லது குழந்தையாகப் பிறந்தவர் ஆவார். அவர் பரலோகத்திற்குச் செல்ல வழியானவர் ஆவார். அவர் இந்த உலகத்தில் மனித குமாரனாக அல்லது குழந்தையாக வந்து பிறந்தவர் ஆவார். அதையே பிஞ்ஞகன் என்று அழைக்கிறார்கள். அவர் மனிதன் பரலோகத்திற்குச் செல்ல வழியானவர் ஆவார். அவர் தான் உயிர்த்தெழுந்து பரலோகம் சென்ற முதற்பலன்  ஆவார்.

வானம் கொண்ட காதலன் அல்லது மணவாளன் அ.ல்லது நாதன். உயிர்த்தெழுந்து வானம் சென்று வலது பாரிசத்தில் அமர்ந்தவர் அதாவது வானத்தை ( பரலோகத்தை ) தமது இருப்பிடமாக்கி உயிர்த்தெழுந்து சென்றவர். அவர் அழகானவர், அப்படிப்பட்ட தெய்வம் குடிகொண்டிருக்கும் இடம் சென்று வழிபடுவீர்களாக.

மேகங்களில் இயேசு கிறிஸ்து இரண்டாம் முறையாக வரும் போது, மிகவும் சத்தமாய் எக்காளம் (யாழொலித்தல்) ஒலிக்கும். அதையே மழைகள் சாலக் கலித்து  என்று எழுதப்பட்டுள்ளது.

அப்படி எக்காளம் ஒலிக்கும் போது பரலோக வாழ்வை அல்லது நித்திய வாழ்வை அடைந்து ஜீவ கிரீடத்தைச் சூட நாமும் வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இயேசு கிறிஸ்துவோடு பரலோகம் செல்வோம். அதையே நீடு உயர் வேய் அவை  எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது அதாவது நீண்ட வாழ்வை அடைய, உயர்ந்து பரலோக வெற்றியைச் சூடிய அல்லது பெற்றுக் கொண்ட சபை

தண்டு அல்லது கோல் ஆகிய சிலுவை மரனத்தை ஏற்றுக் கொண்டு இரட்சிப்பு வழங்கியவர். அப்படி உண்டான இரட்சிப்பு மக்களுக்கு முத்தி அல்லது பரலோக வாழ்க்கையைக் கொடுக்கும். அப்படிப் பட்ட கழுமரமாகிய சிலுவை நிற்கும் சாந்தமான கழுக்குன்றமே என அர்த்தம் ஆகும்.


comeing of jesus
எக்காளம்

தெளிவான விளக்கம்

1) பிழைகள் தீரத் தொழுமின்பின் சடைப் பிஞ்ஞகன்,

பின் என்பது வழி என அர்த்தம் ஆகும், சடை என்பது முள்முடியாகும்.  சிலுவையில் முள்முடியைத் தனது தலையில் ஏற்றுக்கொண்ட தெய்வம் இயேசு கிறிஸ்து ஆவார். அவர் இந்த உலகத்தில் மனித குமாரனாக அல்லது குழந்தையாக வந்து பிறந்தவர்,  அதையே பிஞ்ஞகன் என்று அழைக்கிறார்கள். அவர் மனிதன் பரலோகத்திற்குச் செல்ல வழியானவர் ஆவார். அவர் தான் உயிர்த்தெழுந்து பரலோகம் சென்ற முதற்பலன்  ஆவார்.


பிஞ்ஞகன்

தெய்வம் இந்த பூமியில் மனித குமாரனாக பிறந்தார் அதையே பிஞ்ஞகன் எனக் குறிப்பிடுகிறார் ஆசிரியர், ( பிஞ்சு +அவன் ) தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.  பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையில் கிடத்தியிருக்கக்காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.  லூக்கா 2:10-12


வழியானவர்   ( பின் )

இயேசு கிறிஸ்துவின் வழியாகத்தான் ஒருவன் பரலோகம் செல்ல முடியும், அதனால் தான் அவரை வழியானவர் என்று கூறுகிறோம் இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். என்றார் யோவான் 14:6


2) குழை கொள் காதன், குழகன், தான் உறையும்(ம்) இடம்-

வானம் ( குழை ) கொண்ட காதலன் ( காதன் ) அல்லது மணவாளன் அ.ல்லது நாதன். உயிர்த்தெழுந்து வானம் சென்று வலது பாரிசத்தில் அமர்ந்தவர் அதாவது வானத்தை ( பரலோகத்தை ) தமது இருப்பிடமாக்கி உயிர்த்தெழுந்து சென்றவர். அவர் அழகானவர், அப்படிப்பட்ட தெய்வம் குடிகொண்டிருக்கும் இடம் சென்று வழிபடுவீர்களாக. 

வானம் சென்றவர்

இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது. அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டு பேர் அவர்களருகே நின்று: கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.   அப் 1:9-11


மணவாளன்

அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் உபவாசிப்பார்களா? மணவாளன் தங்களுடனே இருக்கும்வரைக்கும் உபவாசிக்கமாட்டார்களே. மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள்.  மாற்கு 2{19-20


அழகுள்ளவர் (முருகு)

என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; பதினாயிரம்பேர்களில் சிறந்தவர்.  அவர் தலை தங்கமயமாயிருக்கிறது; அவர் தலைமயிர் சுருளாயும், காகத்தைப்போல் கருமையாயுமிருக்கிறது. அவருடைய கண்கள் தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாய்த் தங்கும் புறாக்கண்களுக்கு ஒப்பானவைகளும், பாலில் கழுவப்பட்டவைகளும், நேர்த்தியாய்ப் பதிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது. அவர் கன்னங்கள் கந்தவர்க்கப்பாத்திகளைப்போலவும், வாசனையுள்ள புஷ்பங்களைப் போலவுமிருக்கிறது; அவர் உதடுகள் லீலிபுஷ்பங்களைப்போன்றது, வாசனையுள்ள வெள்ளைப்போளம் அதிலிருந்து வடிகிறது. அவர் கரங்கள் படிகப்பச்சை பதித்த பொன்வளையல்களைப் போலிருக்கிறது; அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்கள் இழைத்த பிரகாசமான யானைத் தந்தத்தைப்போலிருக்கிறது. அவர் கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப்போலிருக்கிறது; அவர் ரூபம் லீபனோனைப்போலவும் கேதுருக்களைப்போலவும் சிறப்பாயிருக்கிறது. அவர் வாய் மிகவும் மதுரமாயிருக்கிறது; அவர் முற்றிலும் அழகுள்ளவர். இவரே என் நேசர்; எருசலேமின் குமாரத்திகளே! இவரே என் சிநேகிதர்.   உன்னத     5:10-16


3) மழைகள் சாலக் கலித்து நீடு உயர் வேய் அவை

மழைகள் சாலக் கலித்து என்பது மேகங்களில் மிகவும் பெரிய சத்தம் உண்டானது என்பது ஆகும். மேகங்களில் இயேசு கிறிஸ்து இரண்டாம் முறையாக வரும் போது, மிகவும் சத்தமாய் எக்காளம் (யாழொலித்தல்) ஒலிக்கும். அதையே மழைகள் சாலக் கலித்து  என்று எழுதப்பட்டுள்ளது.

நீடு உயர் வேய் அவை என்பது மிகவும் உயரத்தில் இருக்கும் வானமாகிய பரலோகத்துக்குச் சென்று அதை நாம் சுதந்தரித்துக் கொண்டு, இறைவன் நமக்காக வைத்திருக்கும்  ஜீவ கிரீடத்தை சூடிக்கொள்வோம். அவை என்பது சபையாகும், இரட்சிக்கப்பட்ட மனிதர்கள் தான் சபை ஆவார்கள் அதையே concoration of churchs என அழைக்கிறோம்.

வானத்தில் எக்காளம் ஒலிக்கும் போது பரலோக வாழ்வை அல்லது நித்திய வாழ்வை அடைய நாமும் வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இயேசு கிறிஸ்துவோடு பரலோகம் சென்று ஜீவ கிரீடத்தை பெற்றுக் கொள்வோம். அதையே நீடு உயர் வேய் அவை  எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது அதாவது நீண்ட வாழ்வை அடைய, உயர்ந்து பரலோக வெற்றியைச் சூடிய அல்லது பெற்றுக் கொண்ட சபை

பரிசுத்த வேதாகமம்

அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக்கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்.  அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்.   வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே ( with a great sound of a trumpet )  அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள்.  மத்தேயு 24:29-31  

ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும்கர்த்தருடனேகூட இருப்போம். 1 தெச 4:16-17

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்புகர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.  யாக்கோபு 1:12

 

4) கழை கொள் முத்தம் சொரியும் தண் கழுக்குன்றமே!

தண்டு அல்லது கோல் ஆகிய சிலுவை மரணத்தை ஏற்றுக் கொண்டு இரட்சிப்பு வழங்கியவர். அப்படி உண்டான இரட்சிப்பு மக்களுக்கு முத்தி அல்லது முக்தி அல்லது வீடுபேறு அல்லது பரலோக வாழ்க்கையைக் கொடுக்கும். அப்படிப் பட்ட கழுமரமாகிய சிலுவை நிற்கும் சாந்தமான கழுக்குன்றமே என அர்த்தம் ஆகும்                          NEXT

 --------------------------------------------------------------------------------------------------------------------------------------

வழி- (12) =  பின் பாடல் வரி :அகம்.7:15 அகம்.7:15 அகம்.18:9 அகம்.127:11 அகம்.137:9 அகம்.198:8 அகம்.200:5 அகம்.224:7 அகம்.259:8 அகம்.297:15 அகம்.301:24 அகம்.341:5.    https://mydictionary.in/

 

சடை  = பின்னலாய் அமைந்த மயிர்முடி, பின்னிய கூந்தல், அடர்ந்த மயிர், வேர் விழுது இலாமிச்சை வெட்டிவேர் சடாமாஞ்சில் திருவாதிரைநாள் மிதுனராசி வேதமோதும் முறைகளுள் ஒன்று கற்றை ஆணியின் கொண்டை நெட்டி அடைப்பு

குழை = குண்டலம், தளிர், சேறு, துளை, காது, குழல், காடு, வானம், நெய்தல்,சங்கு https://mydictionary.in/

காதன் - ஒப்புமை – Similar காவதன்  காதலன்  காதரன்  காதகன்  கலாதன்  கணாதன்  அகாதன்  கான்  யமகாதன்  மகாரதன்

 மழை- (26) : மேகம் பாடல் வரி : அகம்.12:12 அகம்.43:1 அகம்.47:16 அகம்.111:7 அகம்.123:10 அகம்.133:6 அகம்.134:2 அகம்.136:16 அகம்.139:6 அகம்.186:15 அகம்.198:7 அகம்.213:2 அகம்.217:1 அகம்.232:2 அகம்.235:5 அகம்.258:5 அகம்.264:1 அகம்.271:13 அகம்.294:1 அகம்.304:1 அகம்.308:5 அகம்.328:12 அகம்.336:20 அகம்.345:7 அகம்.389:23 அகம்.397:5. https://mydictionary.in/

கலித்தல் = ஒலித்தல்; யாழொலித்தல்; செழித்தல்; உண்டாதல்; எழுதல்; பெருகுதல்; மகிழ்தல்; செருக்குதல்; விரைவாதல்; நெருங்கியிருத்தல்; நழுவுதல்; நீக்குதல்.

வேய் = மூங்கில் மூங்கிற்கோல் உட்டுளைப்பொருள் புனர்பூசநாள் வேய்கை மாடம் குறளைச்சொல் யாழ் கவனஞ் செய்கை ஒற்றன் ஒற்றினைத் தெரிந்து கொண்ட கூறுபாட்டினைக் கூறும் புறத்துறை-- வேய்-தல்

vēy-   4 v. tr. 1. To cover, as abuilding; to roof, thatch; மூடுதல். பிறங்கழல்வேய்ந்தன (பு. வெ. 3, 22). 2. To put on, as agarland; to wear, as crown; சூடுதல். புதன்மானப்பூவேய்ந்து (மதுரைக். 568). நுமர்வேய்ந்த கண்ணியோடு (கலித். 83). 3. To surround; சூழ்தல்.மாலையை வேய்ந்தரிக்கு மிஞிறு (சீவக. 1769).   https://agarathi.com/word/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

முத்தி = வீடுபேறு விடுபடுகை இருவகை முத்திநிலை திசை முத்தம் திருமகள் தேமல் . https://mydictionary.in/

15 views0 comments

Comentarios


bottom of page