top of page
Search

walked on the sea - அலைசேர் புனலன்

Writer's picture: j rajamohanj rajamohan

Updated: Feb 27, 2024

walked on the sea - அலைசேர் புனலன்

2.022 திருக்குடவாயில்,   பண் - இந்தளம்,    திருச்சிற்றம்பலம் பாடல் 6

 

அலைசேர் புனலன், அனலன், அமலன்,

தலைசேர் பலியன், சதுரன், விதிரும்

கொலைசேர் படையன், குடவா யில்தனில்

நிலைசேர் பெருங்கோ யில்நிலா யவனே.

 

சொற்பொருள்

அலைசேர் = திரளான அலை மோதும் போது அதை அடக்கியவர் ( அலை = கடல், மோதுதல் ) ( சேர் = திரட்சி )

புனலன்,     கடலின் மேல் நடந்தவர் ( புனல் = கடல், நீர் )

அனலன்,    = அக்கினி மயமான தெய்வம் ( அனல் = தீ, அக்கினி )

 அமலன்,    = குற்றமற்றவர் அல்லது பரிசுத்தமானவர்

தலைசேர்  = உச்சிக்குச் சென்று அடைந்தவர் அதாவது உயிர்த்து பரலோகம் சென்றவர் (தலை=உச்சி) (சேர்=அடைந்த)

பலியன்,       = சிலுவையில் பலியானவர்

சதுரன்,         =  நான்கு பக்கங்களிலும் சரிசமமாக வியாபித்து இருப்பவன் அதாவது உலகின் எல்லா திசைகளிலும் வியாபித்து இருக்கும் சர்வவியாபி ஆவார்.

விதிரும் கொலை சேர் = சிலுவையில் கொலை செய்யப்படும் போது நிலநடுக்கம் உண்டானது அதனால் சேவகர்களுக்கும் மற்றவர்களாகிய கொலையைச் சேர்ந்து செய்த அனைவருக்கும் அச்சம் ஏற்பட்டது. (விதிரும்=நிலநடுக்கம், tremor நடுக்கம்) (சேர்=சேர்ந்த, சார்ந்த)

படையன்,     =   படைகளை உடையவர் ( Lord od Host ) கணங்களை உடையவர்

குடவா யில்தனில் = குடைந்தெடுக்கப்பட்ட கல்லறை வாயில்தனில்

நிலைசேர்           = உயிர்த்து கல்லரை முன்பாக கூடிய அல்லது திரண்ட சீடர்கள் மற்றும் ஸ்திரீகளோடு நின்று காட்சி அளித்த தெய்வம் (நிலை=நிற்றல்) (சேர்=கூடி, திரண்ட)

பெருங்கோ யில்நிலா யவனே = உள்ளமாகிய பெரும் கோயிலில் வாசம் செய்து மனிதனை ஆளுபவனே ஆவார்


விளக்கம்

தெய்வம் கடலில் சீடர்களோடு பிரயாணம் செய்து கொண்டு இருந்த போது அவர்கள் சென்ற படகின் மேல் திரளான அலை வந்து மோதியது அப்படி மோதிய போது காற்றையும் கடலையும் அடக்கியவர் தெய்வம்.

அவர் ஒரு சமயத்தில்  கடலின் மேல் நடந்து வந்து சீடர்கள் சென்ற படகில் ஏறியவர் ஆவார். அவர் அக்கினி மயமான தெய்வம் ஆவார். அவர்  குற்றமற்றவர் அல்லது பரிசுத்தமானவர் ஆவார்.

அவர் உச்சிக்கு சென்று அடைந்தவர் அதாவது உயிர்த்து பரலோகம் சென்றவர் ஆவார். அவர் சிலுவையில் பலியானவர் ஆவார்.

அவர் நான்கு பக்கங்களிலும் சரிசமமாக வியாபித்து இருப்பவர் அதாவது உலகின் எல்லா திசைகளிலும் வியாபித்து இருக்கும் சர்வவியாபி ஆவார்.

அவர் சிலுவையில் கொலை செய்யப்படும் போது நிலநடுக்கம் உண்டானது அதனால் சேவகர்களும் மற்றும் கொலையைச் சேர்ந்து செய்த அனைவருக்கும் அச்சம் ஏற்பட்டது.

அவர் கணங்களின் அரசன் ஆவார் அதாவது அவர்  படைகளை உடையவர் ( Lord od Host ) ஆவார்.

அவர் குடைந்தெடுக்கப்பட்ட கல்லறை வாயில்தனில் உயிர்த்து கல்லரை முன்பாக கூடிய அல்லது திரண்ட சீடர்கள் மற்றும் ஸ்திரீகளோடு நின்று காட்சி அளித்த தெய்வம் ஆவார். அவர் நமது உள்ளமாகிய பெரும் கோயிலில் வாசம் செய்து நம்மை ஆளுபவர் ஆவார்


walked on the sea
அலைசேர் புனலன்

    

தெளிவான விளக்கம்

 

1) அலைசேர் புனலன், அனலன், அமலன், 

அலைசேர்

கடல் அலைகள் திரளாய் வந்து மோதியதையே அலை சேர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சேர் என்ற வார்த்தைக்குச் சேர்ந்து, அல்லது திரளாய் என்று இந்த இடத்தில் அர்த்தம் கொள்ள வேண்டும். இயேசு கிறிஸ்து கடலில் சீடர்களோடு பிரயாணம் செய்து கொண்டு இருந்த போது அவர் நித்திரையாக இருந்தார். அப்போது அவர்கள் சென்ற படகின் மேல் திரளான அலைகள் வந்து மோதியது அப்படி மோதிய போது அவர் எழுந்து காற்றையும் கடலையும் அதட்டினார் உடனே அலைகள் நின்றுபோய், அமைதலுண்டாயிற்று.

 

பரிசுத்த வேதாகமம்

பின்பு ஒருநாள் அவர் தமது சீஷரோடுங்கூடப் படவில் எறி: கடலின் அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்; அப்படியே புறப்பட்டுப் போனார்கள். படவு ஓடுகையில் அவர் நித்திரையாயிருந்தார். அப்பொழுது கடலிலே சுழல்காற்றுண்டானதால், அவர்கள் மோசமடையத்தக்கதாய்ப் படவு ஜலத்தினால் நிறைந்தது.  அவர்கள் அவரிடத்தில் வந்து, ஐயரே, ஐயரே, மடிந்துபோகிறோம் என்று அவரை எழுப்பினார்கள்; அவர் எழுந்து, காற்றையும் ஜலத்தின் கொந்தளிப்பையும் அதட்டினார்; உடனே அவைகள் நின்றுபோய், அமைதலுண்டாயிற்று.  லூக்கா 8:22-24 

 


shook the wind and the sea
புனலன்

புனலன்

புனல் என்றால் கடல் என அர்த்தம் ஆகும். இயேசு கிறிஸ்து கடலின் மேல் நடந்தார் அதனால் அவருக்குப் புனலன் எனப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் ஒரு சமயத்தில் தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, அக்கரைக்கு தமக்கு முன்னே போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார். அப்படி அவர்கள் சென்ற பிறகு இராத்திரியில் நாலாம் ஜாமத்தில் கடலின்மேல் நடந்து, அவர்களிடத்தில் வந்து  சீடர்கள் சென்ற படகில் ஏறியவர் ஆவார்.

 

பரிசுத்த வேதாகமம்

அவர் ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, அக்கரையில் பெத்சாயிதாவுக்கு எதிராக, தமக்கு முன்னே போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார்.

அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறினார்.  சாயங்காலமானபோது படவு நடுக்கடலிலிருந்தது; அவரோ கரையிலே தனிமையாயிருந்தார். அப்பொழுது காற்று அவர்களுக்கு எதிராயிருந்தபடியினால், அவர்கள் தண்டு வலிக்கிறதில் வருத்தப்படுகிறதை அவர் கண்டு, இராத்திரியில் நாலாம் ஜாமத்தில் கடலின்மேல் நடந்து, அவர்களிடத்தில் வந்து, அவர்களைக் கடந்து போகிறவர்போல் காணப்பட்டார். அவர் கடலின்மேல் நடக்கிறதை அவர்கள் கண்டு, ஆவேசம் என்று எண்ணி, சத்தமிட்டு அலறினார்கள். அவர்களெல்லாரும் அவரைக் கண்டு கலக்கமடைந்தார்கள். உடனே அவர் அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்று சொல்லி,  அவர்கள் இருந்த படவில் ஏறினார். அப்பொழுது காற்று அமர்ந்தது; அதினால் அவர்கள் தங்களுக்குள்ளே மிகவும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள். மாற்கு  :45-51

 

அனலன்

அவர் அக்கினிமயமான தெய்வம் ஆவார். அவர் யாரும் சேரக்கூடாத ஒளியில் வாசம் செய்பவர் ஆவார். அதனால் அவருக்கு அனலன் எனப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

 

பரிசுத்த வேதாகமம்

கர்த்தர் சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கினபடியால், அது முழுவதும் புகைக்காடாய் இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது. யாத் 19:18   

உன் தேவனாகிய கர்த்தர் பட்சிக்கிற அக்கினி, அவர் எரிச்சலுள்ள தேவன். உபாகமம் 4:24


அமலன்,

அவர்  குற்றமற்றவர் அல்லது பரிசுத்தமானவர் ஆவார். அவரிடத்தில் ஒருவரும் குற்றம் கண்டுபிடிக்க முடியவில்லை, அவர் பாவம் அறியாதவர், ஆவர் பாவம் செய்யவில்லை, எனவே தான் அவருக்கு அமலன் என்ற பெயர் கொடுக்கப் பட்டுள்ளது.

 

பரிசுத்த வேதாகமம்

என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? (இயேசு கிறிஸ்து)  நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை. யோவான் 8:46

நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார். 2  கொரி 5:21 ( பாவம் அறியாதவர் )

அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை; 1 பேதுரு 2:22 

 

2) தலைசேர் பலியன், சதுரன், 

தலைசேர்

இயேசு கிறிஸ்து உயிர்த்து உச்சிக்குச் சென்று அடைந்தவர் அதாவது உயிர்த்து பரலோகம் சென்றவர் ஆவார். தலை என்றால் உச்சி அல்லது மேலே உள்ள இடம் ஆகும், சேர் என்றால் சென்று சேர்ந்த என அர்த்தம் அதனால் தான் தலைசேர் என்று எழுதப்பட்டுள்ளது.

 

பரிசுத்த வேதாகமம்

இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசின பின்பு, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார்.  மாற்கு 16:19  

 

பலியன்

அவர் தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். மனிதக்குலத்துக்காக சிலுவையில் பலியானவர் ஆவார்.

 

பரிசுத்த வேதாகமம்

தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.  அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,  பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.  பிலிப் 2: 7-11

சதுரன்

அவர் நான்கு பக்கங்களிலும் சரிசமமாக வியாபித்து இருப்பவர் அதாவது உலகின் எல்லா திசைகளிலும் வியாபித்து இருக்கும் சர்வவியாபி ஆவார். இறையியலாளர்கள் தேவனின் குணாதிசயத்தைக் குறிப்பிடுவதற்கு “சர்வ” என்று ஆரம்பிக்கின்ற 3 பதங்களை உபயோகிக்கிறார்கள். அதாவது, ‘சர்வ வல்லவர்’, ‘சர்வ வியாபி’, ‘சர்வ ஞானி’. இதில் “சர்வ வல்லவர்” என்பது அவரது வல்லமையைக் குறிக்கிறது. அவரைவிட சக்தியுள்ளது வேறு எதுவுமில்லை. ( GOD is Omnipotent )

 

பரிசுத்த வேதாகமம்

ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு. ஆதி 17:1

 

3) விதிரும் கொலைசேர்

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்படும் போது நிலநடுக்கம் உண்டானது அதனால் சேவகர்களும் மற்றும் கொலையைச் சேர்ந்து செய்த அனைவருக்கும் அச்சம் ஏற்பட்டது. அதையே விதிரும் கொலைசேர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. விதிருதல் என்றால் நடுங்குதல் என்று அர்த்தம் ஆகும்

 

பரிசுத்த வேதாகமம்

இயேசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார். அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது கன்மலைகளும் பிளந்தது.  கல்லறைகளும் திறந்தது, நித்திரை அடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது. அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து அநேகருக்குக் காணப்பட்டார்கள். நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல் காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள். மத்தேயு 27:50-54


4) படையன், குடவா யில்தனில் நிலைசேர்

படையன்

அவர் கணங்களின் அரசன் ஆவார் அதாவது அவர்  படைகளை உடையவர் ( Lord od Host ) ஆவார். கணங்கள் என்பதை மேலும் அறிய  https://www.narrowpathlight.com/who-is-aathi-moolam  என்ற பக்கத்தை பார்க்கவும். பூத கணங்கள் என்பவை இந்து தொன்மவியலில் குறிப்பிடப்படுகின்ற பதினெண் கணங்களில் ஒரு கணம் ஆவார். இந்த பூத கணங்கள் தெய்வத்தின் சேவகர்களாகக் கயிலை மலையில் இருப்பதாகச் சித்தரிக்கப்படுகிறது. ( கயிலை மலை என்பது பரலோகம் ஆகும்.)

 

பரிசுத்த வேதாகமம்

பின்னும், அவர் அவனை நோக்கி: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இது முதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். யோவான் 1:51

அவர் பரலோகத்திற்குப் போய், தேவனுடைய வலதுபாரிசத்தில் இருக்கிறார்; தேவதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.  1 பேதுரு 3:22

தூதர்கள் யாவரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சூழநின்று, சிங்காசனத்திற்குமுன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனைத் தொழுதுகொண்டு:ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக; ஆமென், என்றார்கள். வெளி 7:11-12

 

குடவா யில்தனில் நிலைசேர்

அவர் குடைந்தெடுக்கப்பட்ட கல்லறை வாயில்தனில் உயிர்த்து கல்லரை முன்பாக கூடிய அல்லது திரண்ட சீடர்கள் மற்றும் ஸ்திரீகளோடு நின்று காட்சி அளித்த தெய்வம் ஆவார்.


பரிசுத்த வேதாகமம்

அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையை விட்டுச் சீக்கிரமாய்ப் புறப்பட்டு, அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள். அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள். மத்தேயு 28:8-9

 

5) பெருங்கோ யில்நிலா யவனே

அவர் நமது உள்ளமாகிய பெரும் கோயிலில் வாசம் செய்து நம்மை ஆளுபவர் ஆவார்


பரிசுத்த வேதாகமம்

உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோயில்களில் அவர் வாசம் பண்ணுகிறதில்லை. அப் 17:24   நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம். 1 கொரி 3:16:17

இதே விசயத்தைச் சைவ சித்தாந்தம், பத்தாம் திருமறை, ஏழாம் தந்திரம், திருமூலர் திருமந்திரம் 1823வது பாடலில் உள்ளமே தெய்வம் வாழும் பெரிய கோயில், நமது சதையினால் ஆன உடம்பு தெய்வம் வாழும் ஆலயம் என அழகாகக் குறிப்பிடுகிறது.


திருமந்திரம் கூறும் இல்வாழ்வான்

திருமந்திரம் #1823 நமது உள்ளமே பெரிய கோயில் எனக் குறிப்பிடுகிறது.


உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்,

வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்,

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கு

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அர்த்தம் பார்க்க http://mydictionary.in

அலை : மோதுதல், நீர்த்திரை கடல் திரையடித்தொதுக்கிய கருமணல் நிலம் மது கண்டனம் வருத்துகை மிகுதி கொலை

சேர் : அடைந்த சார்ந்த பொருந்திய திரட்சி, திரண்ட கூடிய

புனல் :  கடல்

அனல் : தீ வெப்பம் இடி கொடிவேலி

அமலன் : குற்றமற்றவன் ( பரிசுத்தமானவன் ) கடவுள்

தலை : உச்சி

விதிர் vitir   VI. v. i. fear, அஞ்சு; 2. tremble, நடுங்கு; 3. v. t. brandish, as a sword, வாள் வீச்சு.

விதிர்ப்பு, v. n. trembling, நடுக்கம்; 2. tremor, fear, அச்சம். https://agarathi.com/word/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d

நிலை- (18) : நிற்றல்

Omnipotent  all-powerful  almighty supreme  most high pre-eminent dictatorial  despotic  totalitarian autocratic autarchic invincible unconquerable

   

17 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page