திருக்குடவாயில் - நான் முகனும் - I am the way 2ஆம் திருமுறை 2022 திருக்குடவாயில் - பண் – இந்தளம் - திருச்சிற்றம்பலம்
குடவாசல்,kudavasal,திகழும்திருமாலொடுநான்முகனும்,குடவாசல்,குகைகல்லறை,திருச்சிற்றம்பலம்,மிடறன்,உள்ளம்பெருங்கோயில்,ஊன்உடம்புஆலயம்,திருமந்திரம்,திருமால்,நானேவழி,பெருமான்,குடவாயின்மன்னிநிகழும்,
2.022 திருக்குடவாயில்-பாடல்1-பண்-இந்தளம்- திருச்சிற்றம்பலம்
திகழும் திருமா லொடுநான் முகனும்
புகழும் பெருமான், அடியார் புகல
மகிழும் பெருமான், குடவாயின் மன்னி
நிகழும் பெருங்கோ யில்நிலா யவனே.
திகழும் திருமா லொடு = ஒளிர்ந்த புனிதமான மேகத்தில் இருந்து
நான் முகனும் = நானே வழி என்ற மனித குமாரனைப்
புகழும் பெருமான், = இவர் என் நேச குமாரன் என்று புகழ்ந்த தெய்வம்
அடியார் புகல = மற்றும் அடியார்களாகிய சீசர்கள் புகல
மகிழும் பெருமான், = மகிழ்ச்சியான தெய்வம்
குடவாயின் = குடைந்து எடுக்கப்பட்ட குகை கல்லறையின் குடவாசல்
மன்னி நிகழும் = தவம் முடிந்து உயிர்த்தெழுதல் நிகழும் வரை பொறுக்க சொன்ன
பெருங்கோயில் = நம் உள்ளமாகிய பெரும் கோயிலை
நிலா யவனே = ஆளுபவனே ஆவார்
"அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். யோவான்" 14:6
விளக்கம்
இயேசு கிறிஸ்து நானே வழி (முகம்) என்று சொன்ன மனித குமாரன் ஆவார் அதையே நான் முகன் என்று கூறப்பட்டுள்ளது, முகம் என்றால் வழியாகும், அவர் தனது மூன்று சீசர்களோடு உயர்ந்த மலைக்குச் சென்ற போது ஒரு ஒளிர்ந்த புனிதமான மேகத்திலிருந்து பிதாவானவர் "இவர் என் நேச குமாரன் இவரில் பிரியமாய் இருக்கிறேன்" எனப் புகழுந்தார். அப்போது. அவரோடு சென்ற சீசர்கள் இருவரும் அவரை புகல்ந்து, அவரை நோக்கி உமக்குக் கூடாரம் அமைப்போம், அதனால் மகிழ்ந்த குமாரனாகிய தெய்வம் அவர்களை நோக்கி குடவாயின் தவம் முடிவடைந்து உயிர்த்தெழுதல் நிகழும் வரை இந்த நிகழ்வை யாருக்கும் சொல்ல வேண்டாம் என உறைத்த தெய்வம். மனிதனின் உள்ளமாகிய பெருங்கோயிலில் இருந்து அவனை ஆளுபவர் ஆவார்
நானே வழி என்பது நான் முகன் ஆகும். முகம் என்பது வழி என்பதை அறிந்து கொள்ள ஆறுமுகம் என்ற பக்கத்தைப் பார்க்கவும் (GO)
தெளிவான விளக்கம்
1) திகழும் திருமா லொடு, நான் முகனும்,
திகழும் என்பது ஒளிரும் என்பது ஆகும். திரு மால் என்பது புனிதமான மேகம் ஆகும், ( மால் என்றால் மேகம் ஆகும்.
நான் முகனும் என்பது நானே வழி என்று சொன்ன தெய்வம் ஆகும், முகம் என்பது வழியாகும்
2) புகழும் பெருமான், அடியார் புகல மகிழும் பெருமான்
புகழும் பெருமான்
புகழும் பெருமான் என்பது இந்த இடத்தில் பிதாவாகிய தேவனைக் குறிக்கிறது, அவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றி கூறும் போது இவரில் நான் பிரியமாய் இருக்கிறேன் என்று புகழ்ந்து கூறுகிறார், இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் என்று இன்னொரு மொழி பெயர்ப்பு கூறுகிறது.
அடியார் புகல மகிழும் பெருமான்
பிதாவின் சத்தம் கோட்ட இயேசு கிறிஸ்துவின் சீசர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள். மிகவும் அச்சம் அடைந்து அவரை மகிமைப்படுத்தினார்கள். இதையே அடியார் புகல மகிழ்ந்த பெருமான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இடத்தில் பெருமான் என்பது மனிதக குமாரனைக் குறிக்கிறது.
3) குடவாயின் மன்னி நிகழும் பெருங்கோ யில்நிலா யவனே - திருக்குடவாயில் - நான் முகனும் - I am the way
குடைந்து எடுக்கப்பட்ட கல்லறையின் வாயின் தவம் முடிந்து உயிர்த்தெழுதல் நிகழும் வரை பொறுக்கச் சொன்ன நம் உள்ளமாகிய பெரும் கோயிலை ஆளுபவனே ஆவார். இயேசு கிறிஸ்துவும் மூன்று சீசர்களும் மலையிலிருந்து இறங்கிவந்தபோது இயேசு, 'மானிட மகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும் வரை இக்காட்சியைப்பற்றி எவருக்கும் சொல்லக்கூடாது' என அவர்களுக்குக் கட்டளையிட்டார். இந்த நிகழ்வை குடவாயின் மன்னி நிகழும் வரை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரிசுத்த வேதாகமம்
உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோயில்களில் அவர் வாசம் பண்ணுகிறதில்லை. அப் 17:24 நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம். 1 கொரி 3:16:17
இதே விசயத்தைச் சைவ சித்தாந்தம், பத்தாம் திருமறை, ஏழாம் தந்திரம், திருமூலர் திருமந்திரம் 1823வது பாடலில் உள்ளமே தெய்வம் வாழும் பெரிய கோயில், நமது சதையினால் ஆன உடம்பு தெய்வம் வாழும் ஆலயம் என அழகாகக் குறிப்பிடுகிறது.
திருமந்திரம் கூறும் இல்வாழ்வான்
திருமந்திரம் 1823 நமது உள்ளமே பெரிய கோயில் எனக் குறிப்பிடுகிறது.
உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்,
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்,
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கு
பரிசுத்த வேதாகமம் .. மத்தேயு 17:1-7. இல் இந்த நிகழ்வைப் பற்றிக் கூறும் போது இயேசு கிறிஸ்து நம் ஆண்டவர் பேதுரு, யோவான் மற்றும் யாக்கோபுடன் ஒரு உயர்ந்த மலையில் ஜெபம் செய்யச் சென்றபோது அங்கு மறுரூபமானார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின. அந்த மலை தாபோர் மலை எனக் கருதப் படுகிறது. இம்மலை கலிலேயாக் கடலில் இருந்து மேற்கே சுமார் பதினெட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நம் ஆண்டவர் மறு ரூபமான போது மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தனர். பேதுரு இயேசுவைப் பார்த்து,' ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?' என்றார். அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அது ஒரு உன்னத அனுபவம். அப்படி ஒளியுள்ள ஒரு மேகம் நிழலிட, “இவர் என் நேச குமாரன்; இவரில் பிரியமாய் இருக்கிறேன்; ( இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் ) இவருக்குச் செவி கொடுங்கள்” என்ற குரல் மேகத்தில் இருந்து ஒலித்தது. அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள். இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு,' எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்' என்றார். அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத்தவிர வேறு எவரையும் காணவில்லை. அவர்கள் மலையிலிருந்து இறங்கிவந்தபோது இயேசு, 'மானிட மகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும்வரை இக்காட்சியைப்பற்றி எவருக்கும் சொல்லக்கூடாது' என அவர்களுக்குக் கட்டளையிட்டார். இதையே இந்த பாடல் நமக்கு நினைவூட்டுகிறது.
********************************************************************************* NEXT
Commentaires