top of page
Search
Writer's picturej rajamohan

Parai = தப்பு இசைக்க - மத்தளம் முழங்க

Updated: Feb 27

Parai = தப்பு இசைக்க - மத்தளம் முழங்க

2.022 திருக்குடவாயில்,   பண் - இந்தளம்,    திருச்சிற்றம்பலம் பாடல் 7

 

அறைஆர் கழலன், அழலன், இயலின்

பறையாழ் முழவும் மறைபாட நடம்

குறையா அழகன், குடவா யில்தனில்

நிறைஆர் பெருங்கோ யில்நிலா யவனே.

 

சொற்பொருள்

 

அறைஆர் =  மலைக் குகையில் எல்லாவற்றையும் நிறைவாய் செய்து முடித்த தெய்வம்       ( அறை = மலைக்குகை  ஆர் = நிறைவு )

கழலன்,     =  ( கழல் = கால் ) உயிர்த்தெழுந்த பின்பு கால்களை உடையவர்

அழலன்,    =  நெருப்பு மயமானவர் ( அழல் = தீ, நெருப்பு )

இயலின்  = தன்மையை

பறை யாழ் =  தப்பு இசைக்க ( யாழ் = பண், ஓசை )

முழவும்    = மத்தளம் முழங்க  ( முழவு = மத்தளம் )

மறைபாட   = வேதம் பாட அல்லது இசைக்க ஆராதிக்க வேண்டும்

நடம் குறையா அழகன்  = ( நடம் = நடை ) அவர் நாற்பது நாள் அளவும் தன்னை உயிர் உள்ளவராகக் காண்பித்து இந்த பூமியில் நடமாட்டம்  குறையாத அழகான தெய்வம் ஆவார்

குடவா யில்தனில்  = அவர் குடைந்தெடுக்கப்பட்ட கல்லறை வாயில்தனில்

நிறைஆர்   = பரிசுத்தம், நீதி, மாட்சிமை நிறைவாக கொண்டு நின்ற தெய்வம்

பெருங்கோ யில்நிலா யவனே. = அவர் நமது உள்ளமாகிய பெரும் கோயிலில் வாசம் செய்து நம்மை ஆளுபவர் ஆவார்

 

விளக்கம்

மலை குகையாகிய குகைக் கல்லறையில் பரிசுத்த வேதாகமத்தில் முன் குறித்தபடியே எல்லாவற்றையும் நிறைவாய் செய்து முடித்த தெய்வம் ஆவார். அவர் உயிர்த்தெழுந்த பின்பு கால்களை உடையவராக தன்னைக் காண்பித்து நாற்பது நாள் அளவும் இந்த பூமியில் உலா வந்தவர் ஆவார். அவர் அக்கினி மயமான தெய்வம் ஆவார், அப்படிப்பட்ட தன்மையை உடைய தெய்வத்தைத்  தப்பு இசைக்க மத்தளம் முழங்க வேதம் பாட அல்லது முழங்க ஆராதிக்க வேண்டும்.

இயேசு கிறிஸ்து நாற்பது நாள் அளவும் தன்னை உயிர் உள்ளவராகக் காண்பித்து இந்த பூமியில் நடமாட்டம்  குறையாமல் சீசர்களுடன் உலா வந்த அழகான தெய்வம் ஆவார்.

அவர் குடைந்தெடுக்கப்பட்ட கல்லறை வாயில்தனில் உயிர்த்தெழுந்து பரிசுத்தம், நீதி, மாட்சிமை ஆகிய குணங்களை நிறைவாக தன்னிடத்தில் கொண்டு நின்ற தெய்வம் ஆவார். அவர் நமது உள்ளமாகிய பெரும் கோயிலில் வாசம் செய்து நம்மை ஆளுபவர் ஆவார்



பறை
பறை முழங்க

 

தெளிவான விளக்கம்

 1) அறைஆர் கழலன், அழலன், 

 அறைஆர் 

அறை ஆர் என்றால் மலைக்குகையில் ஒரு நிறைவு என்பது அர்த்தம் ஆகும். அதாவது  மலைக் குகையாகிய குகைக் கல்லறையில், பரிசுத்த வேதாகமத்தில் முன் குறித்தபடியே எல்லாவற்றையும் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்து நிறைவாய் செய்து முடித்தார் அதையே அறை ஆர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் என்ன செய்து முடித்தார் என்பதை வேதாகமத்தில் மட்டுமே பார்க்க முடியும். கீழே இரண்டு காரியங்கள் மட்டுமே கூறப்பட்டுள்ளது. அனேக காரியங்கள் உண்டு.

 

1.1 அவருடைய பிறப்பு, இறப்பு மற்றும் உயிர்த்தெழுதல் பற்றிய தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றினார்.

பரிசுத்த வேதாகமம்

நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன்  என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். மத்தேயு 5:17

 

1.2 பூமியின் மக்களுக்காகப் பாவ மன்னிப்பு ஏற்படுத்தினார்.

பலியையல்ல,இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுகொள்ளுங்கள்;நீதிமான்களையல்ல,பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்.  மத்தேயு 9:13


1.3 அன்பின் பிரமாணங்களைக் கொடுத்தார். அவர் இந்த பூமிக்கு வரும் முன்பு பழிக்குப் பழி, இரத்தத்துக்கு இரத்தம் என்ற நிலை மாறி மன்னிப்பு என்ற அன்பின் பிரமாணம் உண்டானது.

பரிசுத்த வேதாகமம்

போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது என்று கேட்டான். இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான  கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்,உன்னிடத்தில் நீ  அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.


கழலன்

அவர் உயிர்த்தெழுந்த பின்பு கால்களை உடையவராக தன்னைக் காண்பித்து நாற்பது நாள் அளவும் இந்த பூமியில் உலா வந்தவர் ஆவார். அதாவது அவர் உயிர்த்தெழுந்த பின்பு எந்த விதமான சரீரத்துடன் உலா வந்தார் என்பது ஒரு சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது.

இயேசு கிறிஸ்துவின் சீசர்கள் அவரை சந்தேகத்துடன் பார்த்தார்கள் அதனால் அவர் அவர்களைத் தன்னை வந்து தொட்டுப்பருங்கள் என்றும் அவர்கள் கொடுத்த ஆகாரத்தைப் புசித்து தன்னை உயிருள்ளவராகக் காண்பித்தார். அதன் பின்பு அவர் இந்த பூமியில் நாற்பது நாள் வரை சீசர்களோடு கூட உலா வந்தார். இதையே கழலன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பரிசுத்த வேதாகமம்

இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.  அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள்.  அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன?  நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி,எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி, தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்:புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். அப்பொழுது பொரித்த மீன்கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்து, அவர்களை நோக்கி:மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக் குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று,நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார். லூக்கா 24:36-44

அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி,அநேகம் தெளிவான  திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார். அப் 1:3

 

அழலன்,

அவர் அக்கினி மயமான தெய்வம் ஆவார்,

பரிசுத்த வேதாகமம்

உன் தேவனாகிய கர்த்தர் பட்சிக்கிற அக்கினி, அவர் எரிச்சலுள்ள தேவன். உபாகமம் 4:24

 

2) இயலின் பறையாழ் முழவும் மறைபாட

அப்படிப்பட்ட தன்மையை உடைய தெய்வத்தை  தப்பு இசைக்க மத்தளம் முழங்க வேதம் பாட அல்லது முழங்க ஆராதிக்க வேண்டும்.

பரிசுத்த வேதாகமம்

வேதம் முழங்க அல்லது பாட

உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில், இஸ்ரவேலர் எல்லாரும் அவருடைய சந்நிதியில் சேர்ந்துவந்திருக்கும்போது, இந்த நியாயப்பிரமாணத்தை இஸ்ரவேலர் எல்லாரும் கேட்க அவர்களுக்கு முன்பாக வாசிக்கக்கடவாய். உபாகமம் 31:11

 

பறையாழ் முழவும்

எக்காள தொனியோடே அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள். தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள்  ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள். சங்கீதம் 150:3-5

 

3) நடம் குறையா அழகன், 

இயேசு கிறிஸ்து நாற்பது நாள் அளவும் தன்னை உயிர் உள்ளவராகக் காண்பித்து இந்த பூமியில் நடமாட்டம்  குறையாமல் சீசர்களுடன் உலா வந்த அழகான தெய்வம் ஆவார்.

 

பரிசுத்த வேதாகமம்

அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார். அப் 1:3

 

 

4)  குடவா யில்தனில் நிறைஆர்

அவர் குடைந்தெடுக்கப்பட்ட கல்லறை வாயில்தனில் உயிர்த்தெழுந்து பரிசுத்தம், நீதி, மாட்சிமை ஆகிய குணங்களை நிறைவாக தன்னிடத்தில் கொண்டு நின்ற தெய்வம் ஆவார்.


குடவாய
குடவாயில்

5) பெருங்கோ யில்நிலா யவனே.

அவர் நமது உள்ளமாகிய பெரும் கோயிலில் வாசம் செய்து நம்மை ஆளுபவர் ஆவார்

 

பரிசுத்த வேதாகமம்

உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோயில்களில் அவர் வாசம் பண்ணுகிறதில்லை. அப் 17:24

நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம். 1 கொரி 3:16:17

 

இதே விசயத்தைச் சைவ சித்தாந்தம், பத்தாம் திருமறை, ஏழாம் தந்திரம், திருமூலர் திருமந்திரம் 1823வது பாடலில் உள்ளமே தெய்வம் வாழும் பெரிய கோயில், நமது சதையினால் ஆன உடம்பு தெய்வம் வாழும் ஆலயம் என அழகாக குறிப்பிடுகிறது.

 

திருமந்திரம் கூறும் இல்வாழ்வான்

 

திருமந்திரம் #1823 நமது உள்ளமே பெரிய கோயில் எனக் குறிப்பிடுகிறது.

 

உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்,

வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்,

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கு

 

 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அர்த்தம் பார்க்க http://mydictionary.in

 

அறை : கற்பாறை மலைக்குகை பிரசவவீடு மலையினுச்சி சுரங்கம் அம்மி கண்ணறை தேன்கூட்டின் அறை வெட்டுகை துண்டம்

 

ஆர் : நிறைவு பூமி கூர்மை அழகு மலரின் பொருத்துவாய் காண்க: ஆத்தி திருவாத்தி ஆரக்கால் தேரின் அகத்தில் செறிகதிர் அச்சு மரம் செவ்வாய் சரக்கொன்றை அண்மை ஏவல் பலர்பால் படர்க்கை வினைமுற்று விகுதி மரியாதைப் பன்மை விகுதி ஓர் அசை அருமையான

 

கழல் kaẕal   s. foot, கால்; 2. ankle-rings; toerings; 3. anklet given to a warrior as a token of honour; 4. a weather-cock moved by the wind, காற்றாடி; 5. the கழற்சி, plant.

 

அழல் : எருக்கு கொடிவேலி உறைப்பு தீ கள்ளி நஞ்சு சூடு சுரச்சூடு நெருப்பு எரிவு

 

இயல் : தன்மை தகுதி சுகுமாரதை ஒழுக்கம் உழுவலன்பு செலவு ஒப்பு இயற்றமிழ் இலக்கணம்

நூல் நூலின் பகுதி திவ்வியப் பிரபந்தத்தைக் குழுவாக நின்று ஓதுகை மாறுபாடு சாயல் பெருமை அசைதல் வாழும்

 

பறை :  தோற்கருவி தப்பு வட்டம் சொல் விரும்பிய பொருள் மரக்கால் நூல்வகை வரிக்கூத்துவகை குகை பறத்தல் பறவை இறகு பறவை

 

யாழ் : பேரியாழ், சகோடயாழ், மகரயாழ், செங்கோட்டியாழ் என்னும் நால்வகை நரம்புக் கருவி மிதுனராசி அசுவினிநாள் திருவாதிரை நாள் பண் ஆந்தை

 

முழவு : மத்தளம் காண்க: முழவம் 

 

நடம் naṭam   s. dancing, கூத்து; 2. a kind of tune, ஒர்பண். நடநாடக சாலை, a dancing woman (a dramatic term). நடநாயகன், நடராசன், நடேசன், Siva, நடேச்சுரன்.  Other dictionary words Tamil  நடத்து,  நடத்துநர்,  நடத்தை,  நடந்தேறுநடனம்  நடப்பு,  நடப்புவிடு,  நடமாடு,  நடமாடும்,  நடமாட்டம்  நடம்  நடராஜர்  நடவடிக்கை  நடவு  நடாத்து நடி  நடிகன்


நிறை :  பூர்த்தி நிறுக்கை தராசு துலாராசி எடை வரையறை நிறுத்துகை வைத்து அமைக்கை கற்புவழி நிற்றல் மனவடக்கம்  கற்பு சூளுரை வலி அறிவு மறைபிறரறியாமை அழிவின்மை மாட்சிமை நீதி மிகுதி கவனம்

33 views0 comments

Komentarze


bottom of page