top of page
Search
Writer's picturej rajamohan

Fallen Angel - அரக்கன் மடிய

Updated: Feb 27

Fallen Angel - அரக்கன் மடிய

2.022 திருக்குடவாயில்,   பண் - இந்தளம்,    திருச்சிற்றம்பலம் பாடல்: 8

 

வரைஆர் திரள்தோள் அரக்கன் மடிய

வரைஆர ஒர்கால் விரல்வைத் தபிரான்,

வரைஆர் மதில்சூழ் குடவா யில்மன்னும்

வரைஅர் பெருங்கோ யில்மகிழ்ந் தவனே.

 

சொற்பொருள்

 

வரைஆர் திரள் தோள்  = ( வரை = மலை ) ( ஆர் = சோதி ) மலையில் அதாவது சிலுவை நிற்கும் கல்வாரி மலையில்  சோதி மயமான திரண்ட கைகளை உடைய

அரக்கன் மடிய     = ( விழுந்து போன தூதனான ) சாத்தான் வீழ்ந்து போகும்படியாக

வரைஆர =  ( வரை =வரையறுத்தல் ) ( ஆர = மாலை ) வரையறுக்கப்பட்ட படி அல்லது முன்னறிவித்தபடி மாலை நேரத்தில்

ஒர்கால் விரல் வைத்த பிரான்,  = சிலுவையில் சாத்தானை வெற்றி பெற்று தன் கால்களால் அவன் தலையை நசுக்கியவர் ஆவார்

வரைஆர் மதில்சூழ்    = ( வரை = மலை )  ( ஆர் = Fulness, completion, density, நிறைவு ) மலையில் முழுவதும்  மதில்கள் சூழ்ந்துள்ள

குடவாயில்மன்னும் = குடைந்து எடுக்கப்பட்ட கல்லறையாகிய குடவாயில் முன்பாக  உறுதியாய் நின்று கொண்டிருந்த தெய்வம் ( மன்னுதல் = உறுதியாய் நிற்றல் )

வரைஅர்   =  வரையறுக்கப்பட்ட படி அல்லது முன்னறிவித்தபடி நிறைவாக ( அர் = நிறைவு )

பெருங்கோயில் மகிழ்ந்தவனே. = மனிதர்களின் உள்ளமாகிய பெருங்கோயிலில் வாசம் செய்து மகிழ்ந்தவர் ஆவார்

 

விளக்கம்

மலையில் அதாவது சிலுவை நிற்க்கும் கல்வாரி மலையில் சோதி மயமான திரண்ட கைகளை உடைய  ( விழுந்து போன தூதனான ) சாத்தான் வீழ்ந்து போகும்படியாக

வரையறுக்கப்பட்ட படி அல்லது முன்னறிவித்தபடி மாலை நேரத்தில்  ஒரு கால் விரல் வைத்து  சிலுவையில் சாத்தானை வெற்றி பெற்று தன் கால்களால் அவன் தலையை நசுக்கியவர் ஆவார்

மலையில் முழுவதும்  மதில்கள் சூழ்ந்துள்ள குடைந்து எடுக்கப்பட்ட கல்லறையாகிய குடவாயில் முன்பாக  உறுதியாய் நின்று கொண்டிருந்த தெய்வம் ஆவார்.

அவர் வரையறுக்கப்பட்ட படி அல்லது முன்னறிவித்தபடி நிறைவாக மனிதர்களின் உள்ளமாகிய பெருங்கோயிலில் வாசம் செய்து மகிழ்ந்தவர் ஆவார். 


சாத்தான்
தலை நசுக்கப்பட்டது

தெளிவான விளக்கம்

 

1) வரைஆர் திரள்தோள் அரக்கன் மடிய

அரக்கன் என்பது சாத்தான், சனி, பேய், சைத்தான்,  என்பது ஆகும்,

சாத்தான் என்பது விழுந்து போன தேவ தூதர்கள் ஆவார்கள். அவர்கள் ஒரு கூட்டமாக உள்ளவர்கள், சாத்தான் என்பவன் விழுந்து போன தேவ தூதர்கள் எல்லோருக்கும் தலைவன் ஆவான், அவன் படைக்கப்படும் போது தெய்வத்தோடு கூட பரலோகத்தில் இருந்தவன், அவன் சகலவித இரத்தினங்களும் பொன்னும் அவனை மூடிக்கொண்டிருக்கிறது, அக்கினி மயமான கற்களின் நடுவே உலாவினவன்.

அப்படிப்பட்ட ஜோதி மயமான சாத்தான் பெருமை கொண்டு உன்னதமானவரான தெய்வத்துக்கு மேலாக தன்னை உயர்த்த மனதில் நினைத்த போது பரலோகத்தில் இருந்து கீழே தள்ளப்பட்டான். அப்படித் தள்ளப்பட்ட சாத்தனைத் தெய்வம் கல்வாரி மலையில் நிற்கும் சிலுவையில்  சிந்தப்பட்ட இரத்தத்தினால், அவன் வீழ்ந்து போகும்படியாக மேற்கொண்டு அவன் மேல் வெற்றி சிறந்தார். அதையே திரள் தோள் அரக்கன் மடிய எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ( மடிய என்றால் விழுகையாகும்.) இதைக் குறித்து அறியக் கீழே கொடுக்கப் பட்டுள்ள வேதாகம வார்த்தைகளை வாசிக்கவும்.

 

பரிசுத்த வேதாகமம்

அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!  நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்,  நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்;உன்னதமானவருக்கு ஒப்பாவேன்  என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்.  ஏசாயா 14:12-15

நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம் புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம்  முதலான  சகல வித  இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது.  நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணப்பட்ட கேருப்; தேவனுடைய  பரிசுத்த  பர்வதத்தில்  உன்னை வைத்தேன்;அக்கினிமயமான கற்களின் நடுவே உலாவினாய். நீ சிருஷ்டிக்கப்பட்ட நாள் துவக்கி உன்னில் அநியாயம் கண்டுபிடிக்கப்பட்டதுமட்டும், உன் வழிகளில்  குறையற்றிருந்தாய். உன் வியாபாரத்தின் மிகுதியினால், உன் கொடுமை  அதிகரித்து  நீ  பாவஞ்செய்தாய்; ஆகையால் நான் உன்னை தேவனுடைய  பர்வதத்திலிருந்து  ஆகாதவனென்று தள்ளி,காப்பாற்றுகிற கேருபாய் இருந்த உன்னை அக்கினிமயமான கற்களின் நடுவே இராதபடிக்கு அழித்துப்போடுவேன்.உன் அழகினால் உன் இருதயம் மேட்டிமையாயிற்று;உன் மினுக்கினால் உன் ஞானத்தைக் கெடுத்தாய்;உன்னைத் தரையிலே தள்ளிப்போடுவேன்;………   எசேக்கியேல் 28;13-17

 

2) வரைஆர ஒர்கால் விரல்வைத் தபிரான்,

வரையறுக்கப்பட்ட படி அல்லது முன்னறிவித்தபடி மாலை நேரத்தில்  ஒரு கால் விரல் வைத்த  சிலுவையில் சாத்தானை வெற்றி பெற்று தன் கால்களால் அவன் தலையை நசுக்கியவர் ஆவார்.

வரையறுக்கப்பட்டபடி என்பது முன்பாகவே பரிசுத்த வேதாகமத்தில் தீர்க்கதரிசனமாகக் கூறப்பட்டபடி மாலை நேரத்தில் சிலுவையில் தன்னுடைய இரத்தத்தைக் கடைசி சொட்டு வரை சிந்தி சாத்தானைச் சிலுவையில் மேற்கொண்டு அவனது தலையை தன் கால்களால் நசுக்கி வெற்றி சிறந்தார்.

 

அந்த தீர்க்கதரிசனம் என்ன ?

ஆதாமும் ஏவாளும் தெய்வம் சாப்பிடக் கூடாது என்று சொன்ன பழத்தை சாப்பிட்டபடியால் மனிதக் குலத்துக்குப் பாவம் உண்டானது. அப்படி அவர்களை பாவத்துகுள்ளாக்கிய பாம்பு உருவத்தில் வந்த சாத்தானைத் தெய்வம் சபித்துச் சொன்ன வார்த்தையின் படி சாத்தன் தலை சிலுவையில் நசுக்கப்பட்டது. அதையே “வரைஆர ஒர்கால் விரல்வைத்த பிரான்”, எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தீர்க்கதரிசன வசனம் கிறிஸ்துவுக்கு முன்பாக சுமார் 1700 ஆண்டுகளில் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது. அதாவது சுமார் 3700 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்டது.

 

பரிசுத்த வேதாகமம்

அப்பொழுது அவர்: நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்? புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ என்றார். அதற்கு ஆதாம்:என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான்.  அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச் செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள்: சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள்.  அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச்  செய்தபடியால்  சகல நாட்டுமிருகங்களிலும் சகல காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்;  உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.               ஆதி 3:11-15


3) வரைஆர் மதில்சூழ் குடவா யில்மன்னும்

மலையில் முழுவதும்  மதில்கள் சூழ்ந்துள்ள குடைந்து எடுக்கப்பட்ட கல்லறையாகிய குடவாயில் முன்பாக  உறுதியாய் நின்று கொண்டிருந்த தெய்வம் ஆவார்.

பரிசுத்த வேதாகமம்

நூற்றுக்கு அதிபதியினாலே அதை அறிந்துகொண்டபின்பு, சரீரத்தை  யோசேப்பினிடத்தில்  கொடுத்தான். அவன் போய், மெல்லிய துப்பட்டியை வாங்கிக்கொண்டுவந்து, அவரை இறக்கி, அந்தத் துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டியிருந்த கல்லறையிலே அவரை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு கல்லைப் புரட்டிவைத்தான்.    மாற்கு 15:45-46


குடவாயில்
உயிர்த்து நின்றவர்

4) வரைஅர் பெருங்கோ யில்மகிழ்ந் தவனே.

அவர் வரையறுக்கப்பட்ட படி அல்லது முன்னறிவித்தபடி நிறைவாக மனிதர்களின் உள்ளமாகிய பெருங்கோயிலில் வாசம் செய்து மகிழ்ந்தவர் ஆவார்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படு முன்பு சீசர்களிடம் நான் பரலோகம் சென்று சத்திய ஆவியாகிய தேற்றரவாளனை அனுப்புவேன், அவர் உலக மக்கள் உள்ளங்களில் தங்கி வாசம் செய்வார் எனக் கூறினார். அவர் சொன்னபடி நம் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அதையே “வரைஅர் பெருங்கோ யில் மகிழ்ந்தவனே” என குறிப்பிடப்பட்டுள்ளது..



பரிசுத்த வேதாகமம்

நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். உலகம்  அந்தச்  சத்திய  ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள்  அவரை  அறிவீர்கள்   யோவான் 14:16-17.


அவர் நமது உள்ளமாகிய பெரும் கோயிலில் வாசம் செய்து நம்மில் மகிழ்பவர் ஆவார்

 

பரிசுத்த வேதாகமம்

உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோயில்களில் அவர் வாசம் பண்ணுகிறதில்லை. அப் 17:24

நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம். 1 கொரி 3:16:17

 

இதே விசயத்தை  சைவ சித்தாந்தம், பத்தாம் திருமறை, ஏழாம் தந்திரம், திருமூலர் திருமந்திரம் 1823வது பாடலில் உள்ளமே தெய்வம் வாழும் பெரிய கோயில், நமது சதையினால் ஆன உடம்பு தெய்வம் வாழும் ஆலயம் என அழகாக குறிப்பிடுகிறது.

 

திருமந்திரம் கூறும் இல்வாழ்வான்

 

திருமந்திரம் #1823 நமது உள்ளமே பெரிய கோயில் எனக் குறிப்பிடுகிறது.

 

உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்,

வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்,

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கு

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ 

அர்த்தம் பார்க்க http://mydictionary.in

 

வரை : மலை மலையுச்சி பக்கமலை உயர்ந்த மலை கல்   சிறுவரம்பு நீர்க்கரை எல்லை அளவு விரலிறை அளவு கோடு எழுத்து ஏற்றத்தாழ்வு நோக்குகை முத்துக்குற்றத்துள் ஒன்று மூங்கில் காலம் இடம் பொழுது

 

வரை - என்பதற்கு பொதுவான அடிக்கருத்து எல்லை, வரம்பு ஆகும். ( கோடு, எல்லை, வரம்பு, விரைப்பு, கரை (வரம்பு), அளவு, திருமணம், இரேகை. எழுத்து.மலை - போன்ற அனைத்துமே வரை பொருள் கொண்டவை) . வரை = கோடு, எல்லைக்கோடு, அளவு, எல்லை. வரைதல் = கோடிடுதல், எல்லை குறித்தல், வரையறுத்தல், விலக்குதல். ஓரிடத்தின் எல்லை என்பது கோட்டினால் குறிக்கப்படுவது வழக்கமாதலால், கோடிடுதல் எல்லை குறித்தலை உணர்த்தும். கோடு என்பது பிரிபடும் பகுதிகளின் எல்லையாய் அமைவது. வரையறை= இலக்கணம், எல்லைப்படுத்தல்.வரையறை என்பது அளவை (பொருள் கொள்ளும் அளவை) உறுதி செய்வது (வரை = அளவு). வரையறுத்தல்: அடிமுதல் முடிவரை, இதுவரை, இது வரைக்கும்.

 

 

ஆர் : நிறைவு பூமி கூர்மை அழகு மலரின் பொருத்துவாய் காண்க: ஆத்தி திருவாத்தி ஆரக்கால் தேரின் அகத்தில் செறிகதிர் அச்சு மரம் செவ்வாய் சரக்கொன்றை அண்மை ஏவல் பலர்பால் படர்க்கை வினைமுற்று விகுதி மரியாதைப் பன்மை விகுதி ஓர் அசை அருமையான

ஆர் ār  s. Fulness, completion, density, நிறைவு. 2. Sharpness, pointedness. கூர்மை. 3. Lightness, lustre, splendor, சோதி. https://agarathi.com/word/%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d

திரள் tiraḷ   s. a ball, a globe, உண்டை; 2. a crowd, a multitude, கூட்டம்; 3. a circle; 4. an army, சேனை; 5. adj. much,abundant, மிகுந்த. 

 

கால் : வழி நடை இடம் வனம் முனை மரக்கால்  அளவு கதிர் மழைக்கால் காற்று வாதரோகம் ஐம்பூதம்  பொழுது செவ்வி தடவை காலன்  கருநிறம் ஏழனுருபுள் ஒன்று ஒரு வினையெச்ச விகுதி ஒரு முன்னொட்டு எண்குறி பாதம் பூவின் தாள் அடிப்பாகம் எழுத்தின் கால் தேருருள் வண்டி கோல் குறுந்தறி நெசவுத்தறியின் மிதி கைப்பிடி தூண் பற்றுக்கோடு  முளை மரக்கன்று மகன் இனமுறை  பிறப்பிடம் வாய்க்கால் பிரிவு

 

மடிதல் : மடங்குதல் நுனிமழுங்குதல் தலைசாய்தல் வீழ்தல் வாடுதல் சுருளுதல் முயற்சி அறுதல் தூங்குதல் சுருங்குதல் ஊக்கங்குறைதல் அழிதல் சாதல் தானியங் கேடுறுதல் திரண்டுசெல்லுதல் கொப்புளம்  உடைதல் மறத்தல்

 

ஆர :  ஆத்தி அத்தி உண்ண மாலை நிறைய

 

மன்னுதல்  : நிலைபெறுதல் தங்குதல் பொருந்துதல் விடாது முயலுதல் உறுதியாய் நிற்றல் அடுத்தல் மிகுதல்

 

அர்  =  வேர்ச்சொற் சுவடி - அர் அர் = ஒலிக்குறிப்பு அரவம் = ஒலி ...2 அறு அர் - அறு அறு = வெட்டு, பிள, பிரி, நீங்கு, நீக்கு. ...3.அர் அர் - அரு = அழி, குறை, நெருங்கு அருகு = குறைவாகு, நெருங்கு, பக்கம்.

23 views0 comments

Comments


bottom of page