top of page
Search

Light - வெயிலின் நிலையார்

Writer: j rajamohanj rajamohan

Updated: Mar 8, 2024

Light - வெயிலின் நிலையார்

2.022 திருக்குடவாயில்,   பண் - இந்தளம்,    திருச்சிற்றம்பலம் பாடல் 10

 

வெயிலின் நிலையார், விரிபோர் வையினார்,

பயிலும் உரையே பகர்பா விகள்பால்

குயிலன், குழகன், குடவா யில்தனில்

உயரும் பெருங்கோ யில்உயர்ந் தவனே.

 

சொற் பொருள்


வெயிலின் நிலையார்,   = ஒளியின் தன்மையுடையவர் (வெயில் = ஒளி)

விரி போர்வையினார்,    = விரிக்கப்பட்ட போர்வை போன்று நம்மை மறைத்து பாதுகாப்பவர்.

பயிலும் உரையே    = உள்ளத்தில் தங்கும் வார்த்தையானவர் (உரை=மொழி, வார்த்தை)

பகர் பாவிகள் பால் = தன் பாவங்களை உணர்ந்து கொண்ட பாவிகள் பக்கம் நிற்கும்

குயிலன், குழகன்,   = அவர் மேகத்துக்குச் சமமானவர் அதாவது மேகத்தில் இருந்து பேசுபவர் ஆவார், அவர் அழகான தெய்வம் ஆவார். (குயில் = மேகம் )

குடவா யில்தனில்   = குடைந்து எடுக்கப்பட்ட கல்லறை வாயில்தனில்

உயரும்    = வானுலகத்துக்கு உயிர்த்து உயர்ந்தவர் அதாவது உயிர்த்தெழுந்து பரலோகம் சென்றவர்

பெருங்கோயில் உயர்ந்தவனே = பெரிய கோயில்களிலும் சிறந்தவர் அல்லது பெரியவர்  ஆவார் ( உயர்ந்த = சிறந்த )

 

விளக்கம்

 

தெய்வம் ஒளிமயமானவர், அவர் சேரக்கூடாத ஒளியில் வாசம் செய்கிறவர், அவர் இந்த பூமிக்கு ஒளியாக வந்தவர் அதையே ஒளியின் தன்மையுடையவர் என்று எழுதப்பட்டுள்ளது. தெய்வம்.  விரிக்கப்பட்ட போர்வை போன்று நம்மை எல்லா தீமைகளுக்கும், விக்கினங்களுக்கும் மறைத்துப் பாதுகாப்பவர் ஆவார். அவர் உள்ளத்தில் தங்கும் வார்த்தையானவர், மனிதர்களில் தன் பாவங்களை உணர்ந்து கொண்ட பாவிகள் பக்கம் நின்று அவர்களை இரட்சிக்கும் தெய்வம் ஆவார். அவர் மேகத்துக்குச் சமமானவர் அதாவது மேகத்தில் இருந்து பேசுபவர் ஆவார், அவர் அழகான தெய்வம் ஆவார். குடைந்து எடுக்கப்பட்ட கல்லறை வாயில் தனில் வானுலகத்துக்கு உயிர்த்து உயர்ந்தவர் அதாவது உயிர்த்தெழுந்து பரலோகம் சென்றவர். பெரிய கோயில்களிலும் சிறந்தவர் அல்லது பெரியவர்  ஆவார்.

 

Light
வெயிலின் நிலையார்

தெளிவான விளக்கம்

 

1) வெயிலின் நிலையார், விரிபோர் வையினார்,

தெய்வம் ஒளியின் தன்மையுடையவர், அதாவது அக்கினி மயமானவர் அதையே வெயிலின் நிலையார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தெய்வம் பறந்து காக்கும் பட்சியை போன்றவர், அவர் தன்னுடைய கரத்தின் நிழலினால் நம்மை பாதுகாப்பவர், கோழி தன் சிறகுகளால் தன் குஞ்சுகளைப் பாதுகாப்பது போல் நம்மை அவருடைய சிறகுகளால் மூடி தீமைகளில் இருந்து பாதுகாப்பவர்  எனவே தான் விரி போர்வையினார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தெய்வம் நம்மை  விரிக்கப்பட்ட போர்வை போன்று நம்மை மறைத்து பாதுகாப்பவர்.

 

பரிசுத்த வேதாகமம்

உன் தேவனாகிய கர்த்தர் பட்சிக்கிற அக்கினி, அவர் எரிச்சலுள்ள தேவன். உபாகமம் 4:24

 

அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும். சங்கீதம் 91:4

அவர் என் வாயைக் கூர்மையான பட்டயமாக்கி, தமது கரத்தின் நிழலினால் என்னை மறைத்து, என்னைத் துலக்கமான அம்பாக்கி, என்னைத் தமது அம்பறாத்தூணியிலே மூடிவைத்தார். ஏசாயா 49:2

 

2) பயிலும் உரையே பகர் பாவிகள் பால்

பயிலும்

பயிலும் என்பது தங்கும் என அர்த்தம் தெய்வம் நம் உள்ளத்தில் தங்குபவர் ஆவார். அதனால் தான் உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம் எனத் திருமந்திரம் கூறுகிறது. திருவள்ளுவர் தெய்வத்தை இல்வாழ்வான் என குறிப்பிடுகிறார். அதைப் பற்றி அறியப் பார்க்கவும் https://www.narrowpathlight.com/god-who-dwells-with-humans

பரிசுத்த வேதாகமம்

உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோயில்களில் அவர் வாசம் பண்ணுகிறதில்லை. அப் 17:24   நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம். 1 கொரி 3:16:17


திருமந்திரம் கூறும் இல்வாழ்வான்

திருமந்திரம் #1823 நமது உள்ளமே பெரிய கோயில் எனக் குறிப்பிடுகிறது.

 

உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்,

வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்,

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கு


உரையே

தெய்வம் வார்த்தையானவர், அதையே பயிலும் உரையே என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உரை என்றால் மொழி அல்லது வார்த்தை என அர்த்தம் ஆகும். பரிசுத்த வேதாகமம் இயேசு கிறிஸ்துவை வார்த்தை எனக் குறிப்பிடுகிறது. திருவள்ளுவர் தெய்வத்தை நிறைமொழி மாந்தர் என்றும் மாட்டு ( மாட்டு = வார்த்தை ) என்றும், எழுத்தெல்லாம் ஆதிபகவன் என்று கூறுகிறார். விவரமாக அறியப் பார்க்கவும்  https://www.narrowpathlight.com/jesus-is-word-of-god

 

பரிசுத்த வேதாகமம்

ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் (இயேசு கிறிஸ்து)  ஆதியிலே தேவனோடிருந்தார்.  யோவான் 1:1-2

 

பகர் பாவிகள் பால்

தன் பாவங்களை உணர்ந்து கொண்ட பாவிகள் பக்கம் நிற்கும் தெய்வம் ஆவார். அவர் நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தவர் ஆவார். எனவே தான் பகர் பாவிகள் பால் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

பரிசுத்த வேதாகமம்

இயேசு அதை கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.  மாற்கு 2:17

 

 

3) குயிலன், குழகன், 

அவர் மேகத்துக்குச் சமமானவர் அதாவது மேகத்தில் இருந்து பேசுபவர் ஆவார். குயில் என்றால் மேகம் என அர்த்தம் ஆகும்.  மேகம் என்ற வார்த்தை தெய்வத்தைக் குறிக்கும் சொல்லாகவே உள்ளது முகில் வண்ணன், மேக வண்ணன், திருமால், மேகஸ்தம்பம், pillar of gloud,  எனத் தெய்வத்தை அழைக்கிறோம் அவர் அழகான தெய்வம், அதாவது பதினாயிரம் பேர்களில் சிறந்தவர்  ஆவார்.

 

பரிசுத்த வேதாகமம்

அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.   மத்தேயு 17:5

மோசே கூடாரத்துக்குள் பிரவேசிக்கையில், மேகஸ்தம்பம் இறங்கி, கூடார வாசலில் நின்றது; கர்த்தர் மோசேயோடே பேசினார். ஜனங்கள் எல்லாரும் மேகஸ்தம்பம் கூடார வாசலில் நிற்கக்கண்டார்கள்; ஜனங்கள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடார வாசலில் பணிந்து கொண்டார்கள். யாத் 33: 9,10,

என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; பதினாயிரம்பேர்களில் சிறந்தவர். உன்ன 5:10

 

4) குடவாயில் தனில் உயரும்

குடைந்து எடுக்கப்பட்ட கல்லறை வாயில் தனில் இருந்து உயிர்த்தெழுந்து வானுலகத்துக்கு உயர்ந்தவர் அதாவது உயிர்த்தெழுந்து பரலோகம் சென்றவர் ஆவார்.

 

5) பெருங்கோயில் உயர்ந்தவனே.

பெரிய கோயில்களிலும் சிறந்தவர் அல்லது பெரியவர் ஆவார். இயேசு கிறிஸ்து தன்னைப் பற்றி கூறும் போது தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்றார். எதனால் என்றால் இயேசு கிறிஸ்து கைகளினால் கட்டப்பட்ட கோயில்களில் வாசம் செய்வதில்லை, அவர் மனிதர்கள் உள்ளத்தில் வாழ்பவர் ஆவார். எனவே தான் அவரை பெருங்கோயில் உயர்ந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

பரிசுத்த வேதாகமம்

தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்தேயு 12:6

உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோயில்களில் அவர் வாசம் பண்ணுகிறதில்லை. அப் 17:24  

நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும்தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்;தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது;நீங்களே அந்த ஆலயம். 1 கொரி 3:16:17

இதே விசயத்தைச் சைவ சித்தாந்தம், பத்தாம் திருமறை, ஏழாம் தந்திரம், திருமூலர் திருமந்திரம் 1823வது பாடலில் உள்ளமே தெய்வம் வாழும் பெரிய கோயில், நமது சதையினால் ஆன உடம்பு தெய்வம் வாழும் ஆலயம் என அழகாகக் குறிப்பிடுகிறது.

திருமந்திரம் கூறும் இல்வாழ்வான்

திருமந்திரம் #1823 நமது உள்ளமே பெரிய கோயில் எனக் குறிப்பிடுகிறது.


உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்,

வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்,

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கு

 ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அர்த்தம் பார்க்க http://mydictionary.in

 

வெயில் :  சூரிய வெளிச்சம் சூரிய வெப்பம் கதிரவன் ஒளி

  

நிலை- (28)  :  தன்மை

 

போர்வை : மூடுதல் மேல்மூடும் துணி தோல் வாள் முதலியவற்றின்  உறை கவசம் தேர்த் தட்டின் வெளி மறையப் பாவின பலகை

மூடுதல் : போர்த்தல் மறைத்தல் சுற்றிக் கொள்ளுதல் நோய் முதலியன  மிகுதல்

 

பயிலும்- (1)  :  தங்கும்

 

உரை :  உரைக்கை சொல் பொருள் விளக்கம் ஒலி பேச்சு மொழி முழக்கம் ஆசிரியவசனம் ஆகமப்பிரமாணம் மாற்றுரை விடை பொன் புகழ் தேய்வு எழுத்தின் ஒலி புகழுரை விரிவுரை

 

பகர்தல் : சொல்லுதல் விற்றல் கொடுத்தல் உணர்த்துதல் ஒளிர்தல் பெயர்தல்

 

பால்- (1)  :  பக்கம்

குயில் : சொல் ஒரு பறவை கோகிலம் மேகம் துளை உயர்ந்தவன் - சிறந்தவன்; நெடியோன் காமன்

 
 
 

Comentários


bottom of page