top of page
Search

seed of the woman - ஸ்திரீயின் வித்து

Writer's picture: j rajamohanj rajamohan

Updated: Feb 27, 2024

seed of the woman - ஸ்திரீயின் வித்து

2ஆம் திருமுறை 2022 திருக்குடவாயில் - பண் – இந்தளம் - திருச்சிற்றம்பலம்

 பாடல் எண் : 2

ஓடும் நதியும் மதியோடு உரகம்

சூடுஞ் சடையன், விடைதொல் கொடிமேல்

கூடும் குழகன், குடவா யில்தனில்

நீடும் பெருங்கோ யில்நிலா யவனே.

 

சொற்பொருள்

ஓடும் நதியும் = செல்லும் வழியில் (நதி = வழி)

மதியோடு  = அதிமதுரத்தோடும் அதாவது  இரந்தவர்களை அடக்கம் செய்யும் போது தடவும் மூலிகைகளோடும்

உரகம்    = வெள்ளீயம் போன்ற தாதுப் பொருட்கள் அல்லது கந்தவர்க்கங்களோடும் வந்த பெண்கள் பூசிய

சூடுஞ் சடையன்,  = அணிந்த அல்லது பூசப்பட்ட ஆதிமூலமாகிய வேர் ஆனவன் (சடை = வேர் )

 விடைதொல்  =   பழையவற்றிக்குப் பதில் கொடுத்து

கொடிமேல்  = உயர்ந்த இடத்தின் மேல் அதாவது பரலோகம்

கூடும் குழகன், =  சென்று சேர்ந்த அழகான தெய்வம்

 குடவா யில்தனில் = குடைந்து எடுக்கப்பட்ட கல்லறை வாசலில்

நீடும்  = நிலைத்து நின்ற அதாவது உயிர்த்தெழுந்து கல்லறை வாசலில் நின்று காட்சி அளித்த

பெருங்கோ யில்நிலா யவனே = நம் உள்ளமாகிய பெரும் கோயிலை ஆளுபவனே ஆவார்

 

விளக்கம் 

தெய்வம் மரித்து அடக்கம் பண்ணப்பட்ட பின்பு மூன்றாம் நாள் கல்லரைக்குச்சென்று கந்தவர்க்கங்கள் பூசுவதற்காக மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி  வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிறபோது கல்லறையிடத்தில் வந்தார்கள். அப்படிச் செல்லும் வழியில் ( நதி = வழி ) அதிமதுரத்தையும் அதாவது  இரந்தவர்களை அடக்கம் செய்யும் போது தடவும் மூலிகைகளையும் வெள்ளீயம் போன்ற தாதுப் பொருட்கள் அல்லது கந்தவர்க்கங்களையும் வாங்கிக் கொண்டு வந்த பெண்கள் பூசியதைச்  சூடிக் கொண்ட தெய்வம் அவர் ஆதிமூலமாகிய வேர் ஆனவர் ( சடை = வேர் ) பழையவற்றுக்கு பதில் கொடுத்தவர் அதாவது தெய்வம் மனிதனைப் படைத்த போது சாத்தான் மனிதனை பாவத்துக்கு உள்ளாக்கினான், அந்த இடத்தில் கொடுக்கப்பட்ட பழைய ஒரு தீர்க்க தரிசனத்தை நிறைவேற்றியவர். அவர் உயிர்த்து உயர்ந்த இடத்தின் மேல் அதாவது பரலோகம்  சென்று சேர்ந்த அழகான தெய்வம் ஆவார். அவர் குடைந்து எடுக்கப்பட்ட கல்லறை வாசலில் நிலைத்து நின்ற அதாவது உயிர்த்தெழுந்து கல்லறை வாசலில் நின்று காட்சி அளித்தவர் ஆவார். அவர்  நம் உள்ளமாகிய பெரும் கோயிலை ஆளுபவனே ஆவார் 


ஸ்திரீயின் வித்து
seed of the woman

தெளிவான விளக்கம்

 1) ஓடும் நதியும் மதியோடு உரகம்

ஒடும் நதியும் மதியோடு உரகம் என்ற வார்த்தையை மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு நதி, ஒரு நிலவு, ஒரு பாம்பு என்று தோன்றும், இந்த வரி தெய்வம் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையாகிய குடவாசலைப் பற்றி கவிதை எழுதும் போது எழுதப்பட்டது. தெய்வத்தின் கல்லறையில் நதிக்கும், மதிக்கும், பாம்புக்கும் வேலையில்லை. வேறு எந்த விசயத்தைக் கூறுகிறார்கள் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். நதி என்பது வழியைக் காண்பிக்கிறது. மதி என்பது அதிமதுரத்தைக் காண்பிக்கிறது, உரகம் என்பது வெள்ளீயத்தைக் காண்பிக்கிறது, அதாவது மருத்துவ குணம் உள்ள தாதுகள், மற்றும் கந்தவர்க்கங்களைக் காண்பிக்கிறது  அதாவது தெய்வம் மரித்து அடக்கம் பண்ணப்பட்ட பின்பு மூன்றாம் நாள் கல்லரைக்குச்சென்று கந்தவர்க்கங்கள் பூசுவதற்காக மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி  வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிறபோது கல்லறையிடத்தில் வந்தார்கள். அதையே ஓடும் நதியும் மதியோடு உரகம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

 

தெய்வத்துக்கு சிலுவை மரணத்துக்குப் பின்பு கந்தவர்க்கங்கள் பூசப்பட்டது என்பதைத் திரு சுந்தரமூர்த்தி சுவாமிகள்-திருப்பாட்டு - 7 -ஆம் திருமுறை-தலம்:கழுக்குன்றம் - திருக்கழுக்குன்றம் - பதிகம் 7.081  பாடல் 8ல் அழகாகக் கூறியுள்ளார்

 

அந்தம் இல்லா அடியார் தம் மனத்தே உற                                                            வந்து, நாளும் வணங்கி, மாலொடு நான்முகன்                                                            சிந்தை செய்த மலர்கள் நித்தலும் சேரவே                                                               கந்தம் நாறும் புறவின் தண் கழுக்குன்றமே

 

இந்த பாட்டுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ளப் பார்க்கவும்  https://www.narrowpathlight.com/saiva-siddhantham

 

பரிசுத்த வேதாகமம்

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: சுத்த வெள்ளைப்போளமும் குங்கிலியமும் அல்பான் பிசினுமாகிய கந்தவர்க்கங்களையும் சுத்தமான சாம்பிராணியையும் நீ சமநிறையாக எடுத்து, தைலக்காரன் செய்கிறதுபோல அதற்குப் பரிமளமேற்றி, துப்புரவான பரிசுத்த தூபவர்க்கமாக்கி,  யாத் 30:34-35   

ஓய்வுநாளான பின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக்கொண்டு, வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிறபோது கல்லறையினிடத்தில் வந்து,  கல்லறையின் வாசலிருக்கிற கல்லை நமக்காக எவன் புரட்டித்தள்ளுவான் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.  மாற்கு 16:1-3

 

2) சூடுஞ் சடையன்,  

அதிமதுரத்தையும் அதாவது  இரந்தவர்களை அடக்கம் செய்யும் போது தடவும் மூலிகைகளையும் வெள்ளீயம் போன்ற தாதுப் பொருட்கள் அல்லது கந்தவர்க்கங்களையும் வாங்கிக் கொண்டு வந்த பெண்கள் பூசியதைச்  சூடிக் கொண்ட தெய்வம் அவர் ஆதி மூலமாகிய தெய்வம் ஆவார் அதையே வேர் ஆனவர் எனக் கூறப்பட்டுள்ளது ( சடை = வேர் )

ஆதிமூலம் என்பதை அறிய ஆதிமூலம் என்ற பக்கத்தைப் பார்க்கவும். https://www.narrowpathlight.com/who-is-aathi-moolam

 

3) விடைதொல்

விடை தொல் என்பது ஒரு முக்கியமான பகுதி ஆகும். தொல் என்றால் தொன்மையான அல்லது பழமையான என் அர்த்தம் ஆகும். விடை என்பது பதில் ஆகும். தெய்வம் பழமையான ஒன்றுக்குத் தனது சிலுவை மரணத்தின் மூலம்  பதில் கொடுத்தவர் ஆவார்.

 

பழமையான ஒன்று என்பது இந்த பூமியில் தெய்வம் மனிதனைப் படைத்தவுடன் சாத்தான் அவர்களை வஞ்சித்து பாவத்துக்கு உள்ளாக்கினான். சாத்தான் சர்ப்பம் மூலமாகக் கிரியை செய்து முதல் மனிதனான ஆதாம், ஏவாள் இருவரையும் ஏமாற்றினான். அப்பொழுது தெய்வம் சாத்தானாகிய பாம்புக்குச் சொன்ன தீர்க்கதரிசனம் தான் பழமையான காரியம் ஆகும்,

 

தீர்கதரிசனம்

“அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்; உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்”.

இந்த தீர்க்கதரிசனத்தின் படி ஸ்திரீயின் வித்தாகிய இயேசு கிறிஸ்து சாத்தானின் தலையை சிலுவை மரணத்தின் மூலமாக நசுக்கினார். அதையே விடை தொல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

 

பரிசுத்த வேதாகமம்

நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த ( சாத்தானின் ) கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;  துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார். கொலோ 2:14-15

 “காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப் பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார்” என்று கலாத்தியர் 4:5 காட்டுகிறது.

 

4) கொடிமேல் கூடும் குழகன், 

அவர் உயிர்த்து கொடி போல் உயர்ந்த இடமாகிய வானத்தின் மேல் அதாவது பரலோகம்  சென்று சேர்ந்த அழகான தெய்வம் ஆவார்

 

5) குடவாயில் தனில் நீடும்

குடைந்து எடுக்கப்பட்ட கல்லறை வாசலில் உயிர்த்தெழுந்து நிலைத்து நின்ற அதாவது உயிர்த்தெழுந்து கல்லறை வாசலில் நின்று சீசர்களுக்கும் சில ஸ்திரீகளுக்கும் காட்சி அளித்த தெய்வம் ஆவார்                                                                                               

 

பரிசுத்த வேதாகமம்

மரியாள் கல்லறையினருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்; அப்படி அழுதுகொண்டிருக்கையில் அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்து, இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளுடை தரித்தவர்களாய் இரண்டு தூதர்கள், தலைமாட்டில் ஒருவனும் கால்மாட்டில் ஒருவனுமாக, உட்கார்ந்திருக்கிறதைக் கண்டாள்.  அவர்கள் அவளை நோக்கி: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள்: என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள்.  இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள்; ..................... . அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.  யோவான் 20:11-16

 

6) பெருங்கோயில் நிலாயவனே.

உள்ளமாகிய பெரும் கோயிலில் வாசம் செய்து மனிதனை ஆளுபவனே என்பது ஆகும்

பரிசுத்த வேதாகமம்

உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோயில்களில் அவர் வாசம் பண்ணுகிறதில்லை. அப் 17:24   நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம். 1 கொரி 3:16:17

இதே விசயத்தைச் சைவ சித்தாந்தம், பத்தாம் திருமறை, ஏழாம் தந்திரம், திருமூலர் திருமந்திரம் 1823வது பாடலில் உள்ளமே தெய்வம் வாழும் பெரிய கோயில், நமது சதையினால் ஆன உடம்பு தெய்வம் வாழும் ஆலயம் என அழகாகக் குறிப்பிடுகிறது.

திருமந்திரம் கூறும் இல்வாழ்வான்

திருமந்திரம் #1823 நமது உள்ளமே பெரிய கோயில் எனக் குறிப்பிடுகிறது.

உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்,

வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்,

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கு


-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 அர்த்தம் தேட https://mydictionary.in

விடை  = ஒத்திருத்தல், அணுகுதல், (கண.) நெருங்கிய அளவீடு,

தொல்  = பழைய

அகம், பெயர்ச்சொல்.

·         மனம், உட்புறம், வீடு, கர்வம், அகந்தை, உயிர், உள்ளம், மனை, உள்ளம்

நீடும் =  நிலைத்திருக்கிற

மதி = சந்திரன், மாதம், ஒன்று என்னும் எண்ணைக் குறிக்கும் குழூஉக்குறி, இராசி, குபேரன். இடைகலை, காண்க: மதிநாள், மதிஞானம், கற்கடகராசி, இயற்கையறிவு, பகுத்தறிவு, வேதத்தின்படி நடத்தல், மதிப்பு, காசியபரின் மனைவி, அசோகமரம், அதிமதுரம், ஒருமுன்னிலை யசைச்சொல், ஒரு படர்க்கை யசைச்சொல், யானை

அதிமதுரம் ( ஒலிப்பு (உதவி·தகவல்)) (liquorice) ஒரு மருத்துவ மூலிகை. அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. பெயர்கள்[தொகு]

அதிமதுரத்துக்கு அதிங்கம், மதுகம், அட்டி ஆகிய வேறுபெயர்கள் உண்டு. இனிப்புச் சுவை அதிகம் இருப்பதால், ‘அதிமதுரம்’, ‘மது’கம் போன்ற பெயர்களும் உண்டு இதற்கு! ‘இனிப்பு வேர்’ என்பதைக் குறிக்கும் விதமாக, ‘லிகோரைஸ்’ (Liquorice) எனும் பெயர் இதன் வேருக்கு உண்டு.[2]

 

உரகம் = நாகமல்லிகை, மல்லிகை, பாம்பு, வெள்ளீயம், சிறுநாகப்பூ

வெள்வங்கம் (வெள்ளீயம்) கருவங்கம் (காரீயம்) 

வெள்வங்கம் veḷ-vaṅkam   n. prob. id. +வங்கம்¹. A kind of medicine; மருந்துவகை.(இராசவைத். 102, உரை.)

 

நீடு - (வி) நீளு, அதிகரி, 2. நீட்டு, 3. மிகு, பெருகு, 2. (பெ.அ) 1. நிலைத்திருக்கிற, 2. நெடிய, நீளமான, 3. (பெ) 1. நெடுங்காலம், 2.   ..........     ever lasting அல்லது நித்தியமாய் இருப்பவன்

சடை  = பின்னலாய் அமைந்த மயிர்முடி, பின்னிய கூந்தல், அடர்ந்த மயிர், வேர் விழுது இலாமிச்சை வெட்டிவேர் சடாமாஞ்சில் திருவாதிரைநாள் மிதுனராசி வேதமோதும் முறைகளுள் ஒன்று கற்றை ஆணியின் கொண்டை நெட்டி அடைப்பு

16 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page