குறள் 39 - kural 39
அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம் புறத்த புகழும் இல
அறத்தான் வருவதே என்ற வார்த்தைக்கு அறவினையினால் வருவதே என அர்த்தம் விளக்கம் கொடுத்த அனைவராலும் எடுக்கப்பட்டுள்ளது. அறத்தான் யார் என்பதைப் பற்றி ஆராயப்படவில்லை, அதனால் இந்த குறளின் அர்த்தம் முழுமையாக மாறிவருகிறது, அறத்தான் என்பது அறம் செய்தவன் ஆகும் அதாவது தன்னையே தியாகபலியாகக் கொடுத்தவன் ஆகும்.
இந்த குறள் அறன் வலியுறுத்தல் என்ற தலைப்பின் கீழ் 39வது குறளாக வருகின்றது. அறன் வலியுறுத்தல் என்பது தன்னைத் தான் பலியாகச் சிலுவையில் ஒப்புக்கொடுத்த முதல்வனைப் பற்றிக் கூறும் அதிகாரம் ஆகும். மேலும் அறன் வலியுறுத்தல் என்பது உயிர்ப்பலியாகிய முதல்வனை வலியுறுத்தும் பகுதி, வேள்வி முதல்வன் அல்லது உயிர்ப்பலிக்குரியவன் ( one who sacrifice ) என அர்த்தம், அல்லது புனிதமான வேலையைச் செய்து முடித்தல் எனப்பொருள்படும். (Performing a sacred duty) இதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
அறத்தான் = அறம் செய்தவன் (சிலுவையில் இரட்சிப்பை ஏற்படுத்தியவர்)
வருவதே = உள்ளத்திற்குள் வருவதே
இன்பம் = ஆனந்தம் ஆகும் (பரலோக இன்பம் ஆகும்)
மற்றெல்லாம் = மற்ற உலகத்தின் காரியங்கள் எல்லாம்
புறத்த =இன்பம் போலிருந்து துன்பத்தில் சேர்ப்பவை.
புகழும் இல = உயர்வான வாழ்க்கை (பரலோக வாழ்க்கைக்கு) செல்ல உதவுவைகளும் அல்ல
விளக்கம்
சிலுவையில் அறமாகிய இரட்சிப்பை ஏற்படுத்தியவர் நமது உள்ளத்திற்குள் வருவதே ஆனந்தம் ஆகும் (பரலோக இன்பம் ஆகும்) மற்ற உலகத்தின் காரியங்கள் எல்லாம் இன்பம் போலிருந்து துன்பத்தில் சேர்ப்பவை.ஆகும். அப்படிப்பட்ட காரியங்கள் உயர்வான வாழ்க்கையைத் தராது அதாவது நமது ஆத்துமா பரலோக வாழ்க்கைக்கு செல்ல உதவுவைகள் அல்ல
பரிசுத்த வேதாகமம்
இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். வெளி .3:20

Comments