செங்கோல் குறள் 390: kural 390 -Sengkoal
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி
செங் என்பது இரத்தம் சிந்தப்பட்டதையே காண்பிக்கிறது, கோல் என்பது மரத்தால் ஆன ஒரு தடியாகும். செங்கோல் என்பது தெய்வம் இரத்தம் சிந்தி மரித்த சிலுவையாகிய மரத்தையே காட்டுகிறது. அதையே நாம் காவு தடி என அழைக்கிறோம். மேலும் திருவள்ளுவர் தனது 390 வது குறளில் செங்கோல் என்ற வார்த்தையை உபயோகப் படுத்தியுள்ளார், அந்த குறள் இறைமாட்சி என்ற அதிகாரத்தில் வருகிறது. இந்த அதிகாரம் இறைவனின் பெருமை கூறும் ஒரு அதிகாரம். இறைவனின் பெருமை கூறும் அதிகாரத்தில் செங்கோல் என்ற வார்த்தை வருகிறது எனவே அந்த வார்த்தை அரசனின் செங்கோலைப் பற்றிப் பேசவில்லை அது இறைவனின் செங்கோலாகிய சிலுவை மரத்தைப் பற்றியே பேசுகிறது. அந்த இறைவனின் செங்கோலை வைத்து ஒரு அரசன் அரசாள வேண்டும் என்பதே திருக்குறளின் வெளிப்பாடு ஆகும். குறள் 390: kural 390 கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி கொடை = தியாகம், பலியானது, giving away அளி = அருள் என்ற பரிசுத்த ஆவியை அளித்தல் செங்கோல் = இரத்தம் சிந்தப்பட்ட மரமாகிய சிலுவை குடியோம்பல் = மக்களைக் காப்பாற்றுதல் அல்லது மீட்டுக்கொள்ளுதல் நான்கும் உடையானாம் = நான்கு குணங்களும் உடையவர்தான் தெய்வம் வேந்தர்க் கொளி = அந்த தெய்வத்துக்கு மட்டுமே புகழ் (ஓம்புதல் = காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்;

விளக்கம்-----அநாதித் தீர்மானத்தின் படி அல்லது தெய்வானையின் படி இந்த உலகத்துக்கு வந்து 3. செங்கோலாகிய சிலுவையில் தன்னைத்தான் 1. கொடையாக அல்லது பலியாகக் கொடுத்து, இரத்தம் சிந்தி மரித்து பூமியில் உள்ள மக்களுக்கு ஒரு 4. இரட்சிப்பை அல்லது மீட்பைக் கொடுத்து, தான் உயிர்த்தெழுந்து பரலோகம் சென்று பரிசுத்த ஆவியாகிய தெய்வத்தின் 2. அருளை இந்த பூமிக்குக் கொடுத்து இருக்கக் கூடிய நான்கு குணங்கள் உடையவராகிய தெய்வத்துக்கு மட்டுமே புகழ் உண்டாகும்.
Comments