top of page
Search

மஹாபாரதம் அல்லது அகண்ட பாரதம் - MahaBharat

Writer's picture: j rajamohanj rajamohan

Updated: Dec 31, 2023

மஹாபாரதம் அல்லது அகண்ட பாரதம் - MahaBharat

”இதிகாசங்கள், பார் ,ரதம், ஜெகஜோதி, மஹாபாரதத்தின் கதைச் சுருக்கம், ராமாயணம், பகவத்கீதை, Bhagavat Gita, Puranas, Ramayana"

மஹாபாரதம் என்றால் அகண்ட இடமான பரலோகத்திற்கு நம்மைக் கொண்டு செல்லும் ஒரு ஊர்தியாகும்


mahabharat
புஷ்பக விமானம்

மஹா என்றால் பெரிய அல்லது அகண்ட என அர்த்தம் ஆகும். பாரதம் என்பது பார் + ரதம் ஆகும். பார் என்றால் உலகம் ஆகும். ரதம் என்பது ஒரு ஊர்தியைக் காண்பிக்கிறது. அகண்ட பார் ரதம் என்றால் பரலோகம் சென்று சேர்க்கக் கூடிய ஒரு ஊர்தியாகும். அகண்ட எனக் குறிப்பிடும் போது ஒரு அகண்ட அல்லது பெரிய இடத்தைக் காண்பிக்கிறது. அகண்ட என்ற வார்த்தை பூமியில் உள்ள நிலபரப்பைக் குறிக்கவில்லை அது பரலோகத்தைக் காண்பிக்கிறது. அகத்தியர் பரலோகத்தை அகண்டதலம் என குறிப்பிடுகிறார்.

அகத்தியர் தனது அகத்தியர் ஞானத்தில் அகண்ட தலம் சென்றவரை அண்டுவாயே எனப் பரலோகம் சென்ற தெய்வத்தைக் குறிப்பிடுகிறார்.

அகத்தியர் ஞானம் 30 ல் 23 வது பாடல்

வணங்குவாய் ஜெகஜோதி ஒருவனாகி மானிலத்தை ஒரு நொடியில் வகுத்தே மண்ணில் குணமான மனிதரையும் படைத்த பின் குவலயத்திற்றானு தித்துக்குருவாய் வந்து கனமான சமுசாரம் ஒன்றிலாமல் சன்யாசி போலிருந்து தவத்தைக்காட்டி அன்பான சித்தர்களை இருத்திப்போட்டு அகண்டதலஞ்சென்றவரை யண்டுவாயே.

எனவே அகண்ட என்ற வார்த்தை பூமியில் உள்ள நிலப்பரப்பைக் குறிக்கவில்லை. மேலும் மஹாபாரதம் ஒரு இதிகாசம் ஆகும். இதிகாசம் என்றால் உவமை ( example ) என அர்த்தம்

மஹாபாரதத்தின் கதை ஒரு உவமையாகச் சொல்லப்பட்ட கதை ஆகும். அந்த கதையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு அதன் படி வாழ்ந்தால் ஒரு மனிதனுடைய ஆத்துமா பரலோகம் செல்லும். எனவே தான் மஹாபாரதம் என்றால் பரலோகம் சென்று சேர்க்கக் கூடிய ஒரு ஊர்தி எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதிகாசங்கள்

இதிகாசம் என்ற வார்த்தை ஒரு சமஸ்கிருத வார்த்தை அதன் அர்த்தத்தைப் பார்க்கும் போது அது ஐதிகப்பிரமானம் அல்லது உவமை அல்லது செவிவழிச் செய்தி அல்லது ஒரு உதாரணம் ஆகும் ( Examble, Illustration or parable )

உவமை (parable) என்பது ஒரு வாக்கியத்தில் வரும் ஒரு விசயத்தை மறைமுகமாக விளக்குதலுக்கு உதவுகிறது. ஒரு சிறப்பிக்கப்படும் பொருளை விளக்குவதற்காகவோ அழகுபடுத்துவதற்காகவோ பயன்படுத்துவர்.

இதிகாசங்கள் என்பவைகள் ஒரு தெய்வத்தைப் பற்றி நேரடியாக கூறுபவைகள் அல்ல. இந்த உவமைகளில் வரும் நிகழ்வுகள் நடந்தவைகளும் அல்ல, அதில் கூறப்பட்ட பெயர்கள் கடவுளின் பெயர்களும் அல்ல. ஒரு மனிதன் பரலோக ராஜ்யம் செல்ல தன் ஐம்புலங்களையும், ஆத்துமாவையும், சாத்தானிடம் இருந்து பாதுகாத்து இந்த பூமியில் வாழவேண்டும். அப்படி வாழும் போது ஏற்படும் சோதனைகள் மற்றும் துன்பங்கள் பற்றிக் கூறுவது தான் இந்த இதிகாசங்கள். இதிகாசங்களுக்குள் மறைந்திருக்கும் உண்மைகளை நாம் ஆராய்ந்து பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

Back to Vedas by NimathiNilayam - Blog by Mishra Pushkar

இந்த back to vedas என்ற கட்டுரை ஒரு சமஸ்கிருத அறிஞரால் எழுதப்பட்டது. அதில் அவர் வேதத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம், ஒன்று சுருதி மற்றொன்று ஸ்மிருதி ஆகும் சுருதி என்பது வெளிப்படுத்தப்பட்டவைகள் ஆகும், ஸ்மிருதி என்பது உவமைகள் ஆகும் எனக் குறிப்பிடுகிறார். அந்த உவமைகளில் மஹாபாரதம், ராமாயணம் மற்றும் பகவத்கீதை ஆகியவை அடங்கும் என எழுதுகிறார். அதே போல இந்த இதிஹாசங்களும் புராணங்களும் வேதங்களின் நெறிமுறைகளை விளக்குவதற்கு பிற்காலத்தில் எழுதப்பட்டவைகள் எனவும் எழுதுகிறார்.

அவருடைய கட்டுரையைக் கீழ் கண்ட வலைத்தளத்தில் பார்க்கலாம்.

நாம் அப்படிப்பட்ட இதிகாசங்களைப் படிக்கும் போது அதற்குள் மறைந்திருக்கும் தெய்வத்தையும் அதில் கூறப்பட்டுள்ள ஆத்தும மீட்பைப் பற்றியும் ஆராய்ந்து பார்க்கவேண்டும். இதிகாசங்கள் எல்லாம் ஒரு ஆத்துமா எப்படி கடவுளிடம் சென்று சேரவேண்டும் என்பதைத் தான் பேசுகின்றன.

VEDAS:

Veda means, sacred scriptural knowledge. This knowledge was obtained through dedication, devotion and meditation, by several hundred Sages for years.These scriptures are divided into two parts. One in Shruti (which is revealed) and the other one is Smruti (which is believed). Shruti contains Vedas (which gives light or knowledge); Smruti contains Ithihasas (parables like Maha Bharat, Ramayana and Bhagavat Gita) and Puranas. These Ithihasas and Puranas were written at latter date to explain the morals of these Vedas

மஹாபாரதத்தின் கதைச் சுருக்கம்

நமது நாட்டில் ஒரு ஆண் ஐந்து பெண்களைத் திருமணம் செய்து கொண்டதாக கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் ஒரு பெண் ஐந்து ஆண்களோடு வாழ்வதாக இருக்க முடியாது. அப்படி என்றால் இந்த கதை கூறும் நெறிமுறை என்ன என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்

ஐந்து ஆண்கள் என்பது நம் உடலில் உள்ள ஐந்து புலன்கள் அல்லது ஐந்து பொறிகளாகும். ஒரு பெண் என்பது ஆத்துமாவைக் குறிக்கிறது. நம் உள்ளத்தில் பாவங்களைக் கொண்டுவந்து நமது ஆத்துமாவின் பரிசுத்தத்தை அல்லது மானத்தைக் கெடுப்பது சாத்தான் அல்லது துஷ்டனுடைய வேலையாகும். எனவே தான் ஐந்து ராஜாக்கள் என்கிற ஐம்பொறிகள் சூதாட்டம் என்கின்ற பாவ விளையாட்டில் தோற்றபோது அவர்களது மனைவியாகிய ஆத்துமா அடமானமாக வைக்கப்பட்டு, சேலை உருவப்பட்டது. அந்த நிகழ்வு ஆத்துமா மானத்தை இழந்து போவது அல்லது பரிசுத்தத்தை இழந்து போவது ஆகும். அந்த நேரத்தில் தெய்வம் அந்த ஆத்துமா தன்னுடைய பரிசுத்தத்தை இழந்து போகாமல் இருப்பதற்காகச் சேலையை தொடர்ச்சியாக கொடுப்பதாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.

கடைசியில் அந்த ஆத்துமாவாகிய பெண்ணின் மீட்பிற்காகவும், மனிதனின் ஐம் புலங்களின் மீட்பிற்காகவும் கன்னியின் வயிற்றில் பிறந்த ( மனித குமாரனை ) ஒருவரைப் பலியாகக் கொடுக்கப்பட வேண்டியதாய் இருந்தது. அவருடைய இரத்தம் பூமியில் சிந்தப்பட்ட பின்பு அந்த ஆத்துமாவை மானபங்கம் செய்ய நினைத்த சாத்தான் அழிக்கப்பட்டான்.

இந்த உவமையை புரிந்து கொள்வது என்பது சற்று கடினமான காரியம் ஆகும், ஆழ்ந்து சிந்தித்துப்பார்த்தால் புரியும்.


ஒரு மனிதனுடைய உள்ளம் தெய்வத்தின் ஆலயம் ஆகும், எனவே அவனுடைய ஐம்புலங்களும் ஆத்துமாவும் பரிசுத்தமாக இருக்க வேண்டும். ஆத்துமாவை தெய்வத்துடன் சேர விடாமல் தடுக்கக் கூடிய பாவங்களைத் தடுக்க கன்னியின் மூலமாகப் பிறந்த மனித குமாரனுடைய இரத்தம் சிந்தப்பட வேண்டியது. அந்த இரத்தத்தின் மூலமாக மட்டுமே சாத்தானை ஜெயிக்க முடியும்

.

திருமந்திரம் #1823 நமது உள்ளமே பெரிய கோயில் எனக் குறிப்பிடுகிறது.

உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம், வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல், தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கு


மேலும் அறிந்துகொள்ள குறள்-33 ஒல்லும் வகையான் என்ற பக்கத்தைப் பார்க்கவும் (GO)

29 views0 comments

Recent Posts

See All

Commenti


bottom of page