top of page
Search
Writer's picturej rajamohan

Mulaipari - முளைப்பாரி என்ற குருத்தோலை

Updated: Jun 13

Mulaipari - முளைப்பாரி என்ற குருத்தோலை


முளைப்பாரி என்றால் முளைத்த குருத்து உடைய அரசன் என்று அர்த்தம் ஆகும். அதனால் தான் தெய்வம் குருத்தோலை ஞாயிறு உடைய தெய்வம் மற்றும் குருந்துனடய அய்யனார்  --   இளம்பாளை அய்யனார்   -  ஓலைகொண்ட அய்யனார் என்று அழைக்கப்படுகிறார்.


கிறிஸ்தவர்களுக்கு இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு தவக்காலம் விபூதிப் புதனுடன் ஆரம்பித்து 40நாட்கள் உபவாச நாட்களாக கடைப்பிடிக்கப்பட்டு இறுதி வாரம் பரிசுத்த வாரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த வாரத்தில் பெரிய வியாழன், புனித வெள்ளி, அல்லேலூயா சனி, உயிர்த்தெழுந்த ஞாயிறு எனத் தவக்காலத்தின் கடைசி வாரத்தில்  முக்கியமான தினங்கள் ஆகும். 


விபுதிப்புதனுடன் தவக்காலம் ஆரம்பிக்கிறது, அது சாம்பல் புதன் என்றும் ஆங்கிலத்தில்  Ash Wednesday என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தவக்காலம் இயேசு கிறிஸ்து கெத்செமனே தோட்டத்தில் ஆண்டவர் மரணதுக்கமும், வியாகுலமும் நிறைந்த ஆத்துமாவுடனே காணப்பட்டார். எனவே என்னோடே கூட  விழித்திருங்கள்  என்று  சீஷரிடம்  கேட்டுக்கொண்டார். அவர்கள் தூங்கியதைக் கண்ட இயேசு, என்னோடே கூட  ஒரு  மணிநேரமாவது  விழித்திருக்கக் கூடாதா? என அவர் அவர்களைக் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வில் இருந்து தவக்காலமாகிய 40 நாள் ஆரம்பிக்கிறது. இந்த தவக்காலம் உயிர்த்தெழுந்த ஞாயிற்றுடன் ( ஈஸ்டர் ) முடிவடைகிறது.


இந்த நிகழ்வை நமது தமிழ் நாட்டில் சிவராத்திரியில் இருந்து பங்குனி பொங்கல் வரை உள்ள காலங்கள் வரை கொண்டாடுகிறோம். அந்த நாட்களில் விரதம் இருப்பது, சிவராத்திரியில் இரவு முழுவதும் முழித்திருப்பது, முளைப்பாரி எடுப்பதும், மற்றும் கடைசி நாட்களில் பறவைக் காவடி எடுப்பதும் வழக்கம், பறவை காவடியைப் பார்க்கும் போது அது சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவைப் போலக் காட்சி\யளிக்கும். பங்குனி உத்திரத்தின் கடைசி நாளில் விருந்து வைத்துச் சாப்பிட்டு மகிழ்கிறோம். அந்த கடைசி நாள் உயிர்த்தெழுந்த நாளை நினைவு கூறுவதாகும்.


சிவராத்திரியில் இருந்து பங்குனி உத்தரம் வரை உள்ள காலமும் கிறிஸ்தவர்களின் தவக்காலமான சாம்பல் புதன் முதல் ஈஸ்டர் வரையுள்ள காலமும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் இருப்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதாவது மாசி மாதம் முதல் பங்குனி வரை உள்ள காலங்கள்.


இந்த குருத்தோலையைக் கொண்டு மகிமைப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்து குருந்துனடய அய்யனார்  --   இளம்பாளை அய்யனார்   -  ஓலைகொண்ட அய்யனார் என்று அழைக்கப்படுகிறார்.


குருந்து என்பது குருத்து ஆகும் (white tender leaf, tender shoots.பெருங்குருந்து, a large kind of குருந்து.) இயேசு கிறிஸ்து கழுதை மீது எருசலேம் தெருக்கள் வழியாக மக்கள் மத்தியில் சுற்றி தேவாலயத்துக்கு வந்தார்.


அந்த நிகழ்வை இன்றும் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறுவாக கடைப்பிடிக்கிறார்கள். இந்த நிகழ்வை இன்றும் அந்த குருத்தை முளைப்பாரியாகத் தூக்கிச் செல்கிறோம். 

இதைப்பற்றி அறிய அய்யனார் என்ற பக்கத்தைப் பார்க்கவும்


குருத்தோலை ஞாயிறு

குருத்தோலை ஞாயிறு --  விளக்கம்

இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில்  யூத சமூக மரபுப்படி ஆளுநர்கள், அரசர்கள், தலைமைக் குருக்கள் மட்டுமே கழுதை மேல் அமர்ந்து நகர் வலம் வருதல், கம்பள வரவேற்பு பெறுதல் ஆகிய உயர் பெருமை நிலையைப் பெற்றிருந்தனர். மக்களும் இம்மூவர்களுக்கு மட்டுமே ஒலிவ் மர குருத்து ஏந்தி மற்றும் மரக்கிளைகளைத் தரையில் விரித்து வரவேற்பு அளிப்பர். ஆனால்  தாவீதின் வம்ச வழியில் வந்த புனித மரியாளின் மகனான இயேசு கிறிஸ்துவை தங்களை மீட்க வந்த ராஜாவாகவும், மேசியாகாவும்,, மக்கள் கருதியதினால் இயேசு கிறிஸ்து எருசலேம் நகருக்குள் பிரவேசிக்கையில், அவரை  கழுதை மேல் அமரச் செய்து  தலைநகர்  எருசலேமில்  அரசரைப்  போல அழைத்துச் சென்றார்கள்.

 எருசலேம் மக்களும் அவருக்கு அரச மரியாதையுடன் ஒலிவ மர குருத்து ஏந்தி ஆடம்பரமான வரவேற்பு அளித்தனர். இயேசுகிறிஸ்து  கழுதை  மேல்  அமர்ந்து  ஒலிவ  மலையிலிருந்து  எருசலேமிற்குள் பிரவேசிக்கும்போது மக்கள் அணி அணியாகத் திரண்டு குருத்தோலைகளை கைகளில் ஏந்தி “தாவீதின் குமாரனுக்கு ஓசான்னா” என்று  முழங்கி  வெற்றி  ஆர்ப்பரிப்புடன் அவரை  வரவேற்றனர்.


palm sunday

இது அந்த கால அரசியல் சூழலில் சாதாரண செயல் அல்ல. ஏற்கனவே  தலைமைக்  குருக்கள்  இயேசுவைக் கைது செய்து கொலை செய்யத் தகுந்த காரணத்தைத் தேடிக் கொண்டு இருந்தனர். இந்நிலையில் அவர் மக்கள் ஆதரவுடன் எருசலேம் நகரில் நுழைந்ததை இவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இது இயேசுவின் மீதான தலைமைக் குருக்கள், பரிசேயர், அரசியல் தலைவர்களின் கோபத்தை மேலும் அதிகரித்தது.


இந்நிகழ்விற்குப் பின்னர் இயேசுவைக் கொலை செய்யும் முயற்சியை வேகப்படுத்தினர்.

இயேசு தான் பாடுகள் பட்டு கொடிய சிலுவை மரணம் அடைவதற்காகத் தான் எருசலேம் வருகிறோம் என்பதையும்,


மக்களுடன் தனது இறுதி பயணம் இது தான் என்பதையும் உணர்ந்திருந்தார். அதை தன்னுடைய சீசர்களுக்கு வெளிப்படுத்தியும் இருந்தார்.. இந்நிகழ்வு நடந்த அதே வாரத்தில், இயேசு கைது செய்யப்பட்டு, சிலுவையில் அறைந்து கொலை செய்யப்பட்டார்.

தவக்காலத்தின் இறுதி வாரம் பரிசுத்த வாரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த வாரத்தை ஆரம்பிக்கும் சிறப்பு நிகழ்வாக உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறு தினத்தைச் சிறப்பிக்கின்றனர்.


குருத்தோலை ஞாயிறு தினத்தன்று நம் ஆண்டவராகிய இயேசு கழுதை மேல் அமர்ந்து ஒலிவ மலையிலிருந்து எருசலேமிற்குள் பிரவேசிக்கும்போது மக்கள் அணி அணியாகத் திரண்டு குருத்தோலைகளை கைகளில் ஏந்தி “தாவீதின் குமாரனுக்கு ஓசான்னா” என்று முழங்கி வெற்றி ஆர்ப்பரிப்புடன் அவரை வரவேற்கின்றனர்.  அதனால் இயேசு கிறிஸ்து திருவீதிகொண்ட அய்யனார் என்று அழைக்கப்படுகிறார்..


37 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page