Tiruchengode –கோடாயுதம்– விநாயகர்அகவல், குருவடிவாகிக்குவலயந், அவ்வையார், கொடுவினை, இருவினை, நான்முகன்,உபதேசம்,ஒளவையார்,தாமரை,திறம்,பரலோகம்,வாடா,மகிழ்ந்து,களித்து,செவி,அருளி.
Tiruchengode –கோடாயுதம்– விநாயகர்அகவல்
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)
விநாயகர் அகவல் என்றால் வினை தீர்த்த தெய்வத்தைப் பற்றி பாடும் ஒரு இசையாகும். வினை தீர்த்த தெய்வம் பிள்ளை தெய்வம் ஆகும். இது ஒரு காரணப்பெயர் ஆகும். அவ்வையார் விநாயகர் அகவலில் பிள்ளை தெய்வத்தை பாடும் போது கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே" என்று பாடுகிறார். ( அவ்வையாரின் விநாயகர் அகவலில் 20 வது வரியில் இருந்து 25 வது வரி வரை உள்ள அர்த்தம் )
கோடு என்பது மரம் ஆகும், கோடு ஆயுதம் கொண்டு எப்படி வினை தீர்க்க முடியும் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
ஒரு மனிதனின் வினை தீர்க்கப்பட வேண்டும் என்றால் தெய்வம் இந்த பூமியில் வந்து பிறந்து மனிதனுக்காக கோடு ஆயுதத்தில் தன் உயிரைப் பலியாகக் கொடுக்க வேண்டும். பிள்ளை தெய்வமாகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில் பிறந்ததை அவ்வையார் அழகாகக் குவலயந் தன்னில் திருவடி வைத்து என எழுதுகிறார். குவலயம் என்றால் உலகம் ஆகும், பலர் தாமரை என்று அர்த்தம் எடுக்கிறார்கள். அது மிகவும் தவறு பாடலின் முழு அர்த்தம் மாறிவிடும்.
கோடு ஆயுதம் என்பது மரத்தால் ஆன கழுமரமே ஆகும்.
சொற்பொருள்
குருவடி வாகிக் = மனிதக் குலத்தின் இருள் நீக்கி ஒளியை அவர்கள் வாழ்வில் ஏற்ற குருவாய் அதாவது கிறிஸ்துவாய் வந்த தெய்வம்
குவலயந் தன்னில் திருவடி வைத்து = அவர் இந்த உலகத்தில் மனித குமாரனாக வந்து பிறந்து தன்னுடைய திருப்பாதங்களை வைத்தவர் ஆவார்
திறமிது பொருளென = திறம் என்றால் வழியாகும், பொருள் என்றால் பரலோகம் ஆகும். அதாவது அவர் பரம்பொருள், பரலோகம் செல்ல வழியானவர் அல்லது வழி ஏற்படுத்திக் கொடுத்தவர் ஆவார்.
வாடா வகைதான் = அவர் அழியாத தன்மையுள்ளவர் அவர் ஆதியும், அந்தமும் ஆனவர்
மகிழ்ந்தெனக் கருளிக் = அவர் என் மேல் மகிழ்ந்து அல்லது களித்து எனக்கு வினையில் இருந்து விடுதலை அருளியவர் ஆவார்.
கோடா யுதத்தால் = மரத்தால் ஆன ஒரு ஆயுதத்தில் பலியாகி
கொடுவினை களைந்தே = என் வாழ்க்கையில் உள்ள கொடுமையான வினைகள் நீக்கியே
உவட்டா உபதேசம் = சலித்துப் போய் அழிந்து போகாத பரலோகத்துக்குரிய ஞான போதனை அருளி
புகட்டியென் செவியில் = என் செவியில் ஆகாரமாக கொடுத்தவர்.
விளக்கம்
மனிதக் குலத்தின் இருள் நீக்கி ஒளியை அவர்கள் வாழ்வில் ஏற்ற குருவாய் அதாவது கிறிஸ்துவாய் இந்த உலகத்தில் மனித குமாரனாக வந்து பிறந்து தன்னுடைய திருப்பாதங்களை வைத்தவர் ஆவார். அவர் பரம்பொருள் என்ற இடத்தை விட்டு பூமிக்கு வந்தவர், அவர் மனிதனுக்குப் பரலோகம் செல்ல வழியானவர். அதாவது நானே வழி எனக் கூறியவர் ஆவார். அவர் அழியாத தன்மையுள்ளவர் அவர் ஆதியும், அந்தமும் ஆனவர் அதாவது முந்தின நித்தியமும், பிந்தின நித்தியமும் உள்ளவர். அவர் என் மேல் ( மனிதக் குலத்தின் ) மகிழ்ந்து அல்லது களித்து அவர்கள் உள்ளத்தில் வந்து வாசம் பண்ணுபவர் ஆவார் எனக்கு வினையில் இருந்து விடுதலை அருளியவர் ஆவார். அவர் இந்த பூமிக்கு வந்து மரத்தால் ஆன சிலுவையாகிய ஆயுதத்தில் இரத்தம் சிந்திப் பலியாகி மனித குலத்தின் வாழ்க்கையில் உள்ள கொடுமையான வினைகள் மற்றும் பாவங்கள் நீக்கியே சலித்து போய் அழிந்து போகாத பரலோகத்துக்குரிய ஞான போதனை அருளி என் செவியில் ஆகாரமாகக் கொடுத்தவர் ஆவார்.

தெளிவான விளக்கம்
1) குருவடி வாகிக் குவலயந் தன்னில்
குரு என்ற வார்த்தை தெய்வத்துக்கு உரியது, அதுவும் மனிதக் குலத்தை அதன் பாவமாகிய இருளில் இருந்து பரலோகமாகிய வெளிசத்துக்குக் கொண்டு சென்றவர் ஆவார், குரு என்று மனிதர்களை அழைப்பது தவறு எனவே “குருவடி வாகிக் குவலயந் தன்னில்” என்ற வார்த்தையின் படி மனிதக் குலத்தின் இருள் நீக்கி ஒளியை அவர்கள் வாழ்வில் ஏற்ற குருவாய் அதாவது கிறிஸ்துவாய் வந்து இந்த உலகத்தில் மனித குமாரனாக பிறந்து தன்னுடைய திருப்பாதங்களை இந்த பூமியில் வைத்த தெய்வம் ஆவார்.
குரு யார் என்பதை அறிந்து கொள்ள குரு யார் என்ற பக்கத்தைப் பார்க்கவும். https://www.narrowpathlight.com/who-is-guru
பரிசுத்த வேதாகமம்
நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார். மத்தேயு 23:10
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். ஏசாயா 9:6
2) திருவடி வைத்துத் திறமிது பொருளென
இயேசு கிறிஸ்து இந்த பூமியில் தன்னுடைய திருப்பாதங்களை வைத்து உலா வந்தவர் ஆவார். அவர் நானே வழி எனக் கூறியவர், என் மூலமாக மட்டுமே நீங்கள் பரலோக வாழ்வை அடைய முடியும் என்று பரலோகத்திற்கு வழியானவர் அதையே திறமிது பொருளென கூறப்பட்டுள்ளது. அதனால் தான் அவரை நான்முகன் எனக் கூறுகிறோம்.
பரிசுத்த வேதாகமம் ---- அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் யோவான் 14:6
3) வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
அவர் அழியாத தன்மையுள்ளவர் அவர் ஆதியும், அந்தமும் ஆன தெய்வம் ஆவார். அவர் என் மேல் (மனிதர்கள் மேல் ) மகிழ்ந்து அல்லது களித்து வினையில் இருந்து விடுதலை அருளியவர் ஆவார்.
பரிசுத்த வேதாகமம்
இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார். வெளி 1:8
தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர்பிரியமாயிருக்கிறார். சங்கீதம் 147:11
என்மேல் அவர் பிரியமாயிருந்தபடியால், விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்னைத் தப்புவித்தார். 2 சாமுவேல் 22:20
4) கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
மரத்தால் ஆன ஒரு ஆயுதமாகிய சிலுவையில் இரத்தம் சிந்தி, மரித்துப் பலியாகி மனிதக் குலத்தின் வாழ்க்கையில் அல்லது உள்ளத்தில் உள்ள கொடுமையான வினைகள் நீக்கியவர் ஆவார். கொடுவினைகள் என்பது மன்னிக்க முடியாத குற்றங்கள் ஆகும், அதாவது இருவினைகள் மனித குலத்தை பின் தொடர்ந்து வரும் , 1) நாம் இந்த பூமியில் இருக்கும் போது செய்யும் செயல்கள் மூலமாக வரும் பாவம் ஆகும். 2) நம் மூதாதையர்கள் செய்த பாவ வினைகள் ஆகும். அந்த இருவினைகள் நீக்கியவர் ஆவார்.
பரிசுத்த வேதாகமம் அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார் எபேசியர் 2:1
நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள். 1 பேதுரு 2:24
5) உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்
அவர் அளித்த உபதேசம் மனித குல மீட்ப்புகு உரியது அது அன்பு நிறைந்தது, இயேசு கிறிஸ்து இந்த பூமியில் வந்த பிறகு தான் இந்த பூமி அன்பு என்ன என்று அறிந்து கொண்டது. நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று கூறினார் அப்படிச் சலித்து போகாத பேதனைகளைக் கொடுத்தவர் ஆவார். இந்த பூமியும் வானமும் அழிந்து போனாலும் அழிந்து போகாத பரலோகத்துக்குரிய ஞான போதனைகள் ஆகும். அந்த உபதேசம் எல்லாம் என் செவிக்கு ஆகாரமாகக் கொடுத்தவர்.
பரிசுத்த வேதாகமம்
உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று வேதவாக்கியம் சொல்லுகிற ராஜரீக பிரமாணத்தை நீங்கள் நிறைவேற்றினால் நன்மைசெய்வீர்கள். யாக்கோபு 2:8
வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை. லூக்கா 21:33
--------------------------------------------------------------------------------
திறம் இடு = வழி இதுவே
பொருள் =பரலோகம்
வாடா வகை = அழியாத தன்மை
மகிழ்ந்து = அமர்ந்து அல்லது களித்து
அருளி = அளித்து அல்லது கொடுத்து
உவட்டா = உவட்டாத = வெறுத்து போகாத
உபதேசம் = ஞான போதனை புகட்டி = ஆகரமாகக் கொடுத்து
Comentários