top of page
Search

Light and Spirit

Writer: j rajamohanj rajamohan

Updated: Aug 16, 2024

Light and Spirit-10.904 திருமூலர் அருளிய திருமந்திரம் பத்தாம் திருமுறை – பாடல் 1

ஒளியை அறியில் உருவும் ஒளியும்

ஒளியும் அருவம் அறியில் அருவாம்

ஒளியின் உருவம் அறியில் ஒளியே

ஒளியும் உருக உடன்இருந் தானே.


சொற்பொருள்

ஒளியை அறியில் உருவும் ஒளியும் = இருளை நீக்கும் ஒளியாய் இந்தப் பூமிக்கு உருவத்தில் வந்த மனிதக் குமாரனாகிய தெய்வத்தை அறியாவிட்டால் அவருடைய உருவம் நம் மனதில் நிலை கொள்வதில்லை அல்லது  நாம் அந்தத் தெய்வத்தை அறியாமல் வாழ்ந்து விடுவோம்.


ஒளியும் அருவம் அறியில் அருவாம்  = ( அருவம் என்பது உருவம் அற்ற தன்மையைக் குறிக்கிறது அதாவது ஆவியாய் இருக்கும் நிலையைக் குறிக்கிறது. )

நமது கண்களுக்கு மறைவாக இருக்கும் ஆவியானவர் தான் இறைவன், அப்படி ஆவியாய் இருக்கிற தெய்வத்தையும் அவர் இந்தப் பூமிக்கு ஒளியாய் வந்ததையும் அறியா விட்டால் அது நமக்குப் பாவமாகும். அருவாம் =  பாவமாகும்.  ( அருவு + ஆம் = அருவாம்,  அருவு என்பது அத்தியாகும், அத்தி என்பதைப் பாவம் என்று திருவுந்தியார் கூருகிறார் விளக்கம் கீழே )


ஒளியின் உருவம் அறியில் = ஒளியாய் இந்த பூமிக்கு உருவத்தில் வந்த மனித குமாரனாகிய தெய்வத்தை அறியாவிட்டால்


ஒளியே ஒளியும் = நம் மனதில் இருக்கும் தெய்வம் தந்த தீபமாகிய ஒளி மறைந்து போகும் அல்லது மங்கிப்போகும்


உருக உடன்இருந் தானே = அப்படிப்பட்ட தெய்வம் கிருபை, இரக்கம் நிறைந்தவராக நம் உள்ளத்தில் தங்கி வாசம் பண்ணி நம் உடன் இருந்தாரே.


விளக்கம்

இருளை நீக்கும் ஒளியாய் இந்தப் பூமிக்கு உருவத்தில் வந்த மனிதக் குமாரனாகிய தெய்வத்தை அறியாவிட்டால் அவருடைய உருவம் நம் மனதில் நிலை கொள்வதில்லை அல்லது  நாம் அந்தத் தெய்வத்தை அறியாமல் வாழ்ந்து விடுவோம். அதுபோல நமது கண்களுக்கு மறைவாக இருக்கும் ஆவியானவர் தான் இறைவன், அப்படி ஆவியாய் இருக்கிற  தெய்வத்தையும் அவர் இந்த பூமிக்கு ஒளியாய் வந்ததையும் அறியா விட்டால் அது நமக்குப் பாவமாகும். அதுபோல ஒளியாய் இந்தப் பூமிக்கு உருவத்தில் வந்த மனித குமாரனாகிய தெய்வத்தை அறியாவிட்டால்  நம் மனதில் இருக்கும் தெய்வம் தந்த தீபமாகிய ஒளி மறைந்து போகும் அல்லது மங்கிப்போகும். அப்படிப்பட்ட தெய்வம் கிருபை, இரக்கம் நிறைந்தவராக நம் உள்ளத்தில் தங்கி வாசம் பண்ணி, நம் உடன் இருந்தாரே என்பது  விளக்கம் ஆகும்.

அருவாம் என்ற வார்த்தைக்குப் பாவமாகும் என அர்த்தமாகும். ( அருவு + ஆம் = அருவாம்,  அருவு என்பது அத்தியாகும், அத்தி என்பதைப் பாவம் என்று திருவுந்தியார் கூருகிறார் விளக்கம் கீழே )


பரிசுத்த ஆவி
light and spirit

தெளிவான விளக்கம்

1) ஒளியை அறியில் உருவும் ஒளியும்

இருளை நீக்கும் ஒளியாய் இந்தப் பூமிக்கு உருவத்தில் வந்த மனிதக் குமாரனாகிய தெய்வத்தை அறியாவிட்டால் அவருடைய உருவம் நம் மனதில் நிலை கொள்வதில்லை அல்லது  நாம் அந்தத் தெய்வத்தை அறியாமல் வாழ்ந்து விடுவோம்.

இருளை நீக்கும் ஒளி

இந்த உலகத்திற்கு அதாவது ஜெகத்துக்கு ஒளியாய் வந்த ஒரே தெய்வத்தையே வணங்குவாயாக என்ற அர்த்தத்துடன் ஆரம்பிக்கும் கீழ்க்கண்ட அகத்தியர் அவர்களின் பாடல் இந்த உலகத்தில் மனிதக் குமாரனாகிய இயேசு கிறிஸ்து உலகத்துக்கு ஒளியாக வந்தார் என்று குறிப்பிடுகிறது.

 

அகத்தியர் ஞானம் 30ல் 23 வது பாடல்

 

வணங்குவாய் ஜெகஜோதி ஒருவனாகி

மானிலத்தை ஒரு நொடியில் வகுத்தே மண்ணில்

குணமான மனிதக்ரையும் படைத்த பின் 

குவலயத்திற்றானு தித்துக்குருவாய் வந்து

கனமான சமுசாரம் ஒன்றிலாமல்

சன்யாசி போலிருந்து தவத்தைக்காட்டி

அன்பான சித்தர்களை இருத்திப்போட்டு

அகண்டதலஞ்சென்றவரை யண்டுவாயே.

 

இந்த உலகத்துக்கு ஒளியாய் வந்து பிறந்த ஒரே தெய்வத்தை வணங்குவாயாக என்பது இந்த  வரியின் அர்த்தம், இந்த உலகத்துக்கு அதாவது உலக மக்களுக்கு ஒளியாய் வந்த தெய்வம் இயேசு கிறிஸ்து  ஆவார். அவர் மக்களை இரட்சிக்கவே இந்த உலகத்துக்கு வந்தார், இருளில் இருக்கும் ஜனங்கள் வெளிச்சத்தைக் கண்டார்கள் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. அவர் இந்தப் பூமியில் இருக்கும் போது இந்த உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றார்.

மேலும் விவரம் அரிய பார்க்கவும்


பரிசுத்த வேதாகமம்.

மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார். யோவான் 8:12

என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்  யோவான் 12;46.

இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. மத்தேயு 4:15-16


2) ஒளியும் அருவம் அறியில் அருவாம்

( அருவம் என்பது உருவம் அற்ற தன்மையைக் குறிக்கிறது அதாவது ஆவியாய் இருக்கும் நிலையைக் குறிக்கிறது. ) நமது கண்களுக்கு மறைவாக இருக்கும் ஆவியானவர் தான் இறைவன், அப்படி ஆவியாய் மறைந்து இருக்கிற தெய்வத்தையும் அவர் இந்த பூமிக்கு ஒளியாய் வந்ததையும் அறியா விட்டால் அது நமக்குப் பாவமாகும். பரிசுத்த வேதாகமம் கர்த்தரே ஆவியானவர் என்று கூறுகிறது


பரிசுத்த வேதாகமம்

கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு. நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச்  சாயலாகத்தானே  மகிமையின்மேல்  மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.  2 கொரி 3:17-18


அருவாம் =  பாவமாகும்.  ( அருவு + ஆம் = அருவாம்,  அருவு என்பது அத்தியாகும், அத்தி என்பதைப் பாவம் என்று திருவுந்தியார் கூருகிறார்  )

திருவுந்தியார்-உய்யவந்ததேவநாயனார் 41 வது  பாடலில்  பரலோகம்  சென்று  சேரக்கூடிய  முதல் மனிதனாகிய முதலுக்கே மோகக் கொடி படர்ந்து அத்தி பழுத்தது என்று வேகமாகச் சொல்லு. அப்பழம் உண்ணாதே என்று வேகமாகச் சொல்லு எனக் கூறுகிறார்.


முத்தி முதலுக்கே மோகக் கொடிபடர்ந்                                                    

தத்தி பழுத்ததென் றுந்தீபற                                                           

அப்பழ முண்ணாதே யுந்தீபற                                                       

 முதற் கொடிக்கே


முத்தி    =  பரலோக வாழ்க்கை அடைய வேண்டிய

முதலுக்கே  = முதலில் பிறந்த மனிதனாகிய ஆதாமுக்கே

மோகக் கொடி படர்ந்து  = ஆசை என்ற கொடி சுற்றுக் கொண்டது

அத்தி = பாவம்

பழுத்தது   = உருவானது

அப்பழம் உண்ணாதே என்று உந்தி பற


விளக்கம்

முதல் மனிதனாகிய் ஆதாம் பரலோகம் செல்வதற்காகப் படைக்கப்பட்டவன் அவன் தெய்வம் சாப்பிடக் கூடாது என்று கூறிய பழத்தின் மேல் ஆசைப்பட்டு அதாவது அந்தப் பழத்தின் மேல் மோகக் கொடி ( ஆசைக் கொடி ) படரவிட்டு  அந்தப் பழத்தைச்  சாப்பிட்ட படியால்  ஆதாம்  மற்றும்  இந்த பூமியில் பாவமாகிய அத்தி பழுத்தது (பாவம் உண்டானது) என்று கூறுகிறார்.


3) ஒளியின் உருவம் அறியில் ஒளியே ஒளியும்

ஒளியாய் இந்தப் பூமிக்கு உருவத்தில் வந்த மனித குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை அறியாவிட்டால் நம் மனதில் இருக்கும் தெய்வம் தந்த தீபமாகிய ஒளி மறைந்து போகும் அல்லது மங்கிப் போகும்.


பரிசுத்த வேதாகமம்

மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.  யோவான் 8:12 

ஒளியானது உலகத்திலே ( இயேசுவாக )  வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள்  பொல்லாதவைகளா யிருக்கிறபடியினால்  அவர்கள்  ஒளியைப்பார்க்கிலும்  இருளை  விரும்புகிறதே அந்த ஆக்கினைத் தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது பொல்லாங்கு  செய்கிற  எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில்  வராதிருக்கிறான். சத்தியத்தின்படி செய்கிறவனோ  தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச்  செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்  யோவான் 3:19-21


4) உருக உடன்இருந் தானே

அப்படிப்பட்ட தெய்வம் கிருபை, இரக்கம் நிறைந்தவராக நம் உள்ளத்தில் வாசம் பண்ணி நம் உடன் இருந்தாரே.


பரிசுத்த வேதாகமம்

அந்த வார்த்தை ( இயேசு ) மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.  யோவான் 1:14

Light and Spiritஅருவு : அத்தி -----   உருக Meaning in English இரக்கம் – Irakkam s. (இரங்கு) mercy, compassion, கிருபை; 2. pity, sympathy, உருக்கம்; 3. distress, grief, துக்கம்.

 

 
 
 

Comments


bottom of page