top of page
Search

Light in the Dark - இருளில் ஒளி

Writer: j rajamohanj rajamohan

Light in the Dark - இருளில் ஒளி

10.904 திருமூலர் அருளிய திருமந்திரம் பத்தாம் திருமுறை – பாடல் 2 https://www.sivaya.org/thirumurai_song.php?pathigam_no=10.904#link_1&lang=tamil

புகல்எளி தாகும் புவனங்கள் எட்டும்

அகல்ஒளி தாய்இருள் ஆசற வீசும்

பகல்ஒளி செய்ததும் அத்தா மரையில் (அத்தாம் + அரையில்)

இகல்ஒளி செய்தெம் பிரான் இருந்தானே.


சொற்பொருள்

 

புகல்எளி தாகும் = வெற்றி எளியதாகும்

புவனங்கள் எட்டும் = அந்த வெற்றியினால் பூலோகம் மற்றும் மேலோகம் எல்லாம் எட்டும் அதாவது கிடைக்கும்

அகல் ஒளிதாய்   = அகன்ற அல்லது பெரிய ஒளியாக வந்து இந்த உலகம் எல்லாம் பரவி

இருள் ஆசற வீசும் = அறியாமை, துன்பம், நீங்கக் குறையற வீசும் அதாவது நிறைவாக வீசிபகல்ஒளி செய்ததும் = பொழுது விடிந்து சூரிய ஒளி உண்டாகும் வேளையில்

அத்தா மரையில் (அத்தாம் + அரையில்) = அத்தாம் பெரிய மரத்தில் அதாவது மிகப் பெரிய மரத்தில்

இகல்ஒளி செய்து = வலிமையான பிரகாசமான வழி உண்டாக்கி

எம் பிரான் இருந்தானே. = நம்முடைய தெய்வம் உயிர்த்தெழுந்து இன்றும் உயிரோடு கூட நம்முடன் இருக்கிறாரே

 

விளக்கம்

முதல் பாடலில் சொல்லப்பட்டது போல நாம் இந்த உலகத்துக்கு ஒளியாய் வந்த தெய்வத்தை அறிந்து கொண்டால் நமக்கு வெற்றி எளியதாகும்  அந்த வெற்றியினால் பூலோகம் மற்றும் மேலோகம் எல்லாம் எட்டும் அதாவது கிடைக்கும்,

அந்த ஒளியான இறைவன் அகன்ற அல்லது பெரிய ஒளியாக வந்து இந்த உலகம் எல்லாம் பரவி நமது அறியாமை மற்றும் துன்பம், நீங்குவதற்காக ஒளியைக் குறையற வீசி அதாவது நிறைவாக வீசினார்.

பொழுது விடிந்து சூரிய ஒளி உண்டாகும் வேளையில் அத்தாம் பெரிய மரத்தில் அதாவது மிகப் பெரிய மரமாகிய சிலுவையில்  வலிமையான பிரகாசமான பரலோகத்திற்கான வழி உண்டாக்கி  நம்முடைய தெய்வம் உயிர்த்தெழுந்து இன்றும் உயிரோடு கூட நம்முடன் இருக்கிறாரே


light in the dark
இருளில் ஒளி

 

தெளிவான விளக்கம்

 

1) புகல்எளி தாகும் புவனங்கள் எட்டும்

முதல் பாடலில் சொல்லப்பட்டது போல, நாம் இந்த உலகத்துக்கு ஒளியாய் வந்த தெய்வமாகிய இயேசு கிறிஸ்துவை அறிந்து கொண்டால் நமக்கு வெற்றி எளியதாகும்  அந்த வெற்றியினால் பூலோகத்தை ஜெயித்து மேலோகத்தை எட்டிப் பிடிக்கமுடியும், ஒரு மனிதன் இந்தப் பூமியில் இருக்கும் காலம் வரை இந்தப் பூமியில் உள்ளவற்றை ஜெயிக்கவேண்டும், அப்படி ஜெயித்தால் மட்டுமே பரலோகம் அந்த மனிதனுக்குக் கிடைக்கும். அதையே புவனங்கள் எட்டும் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.  

முதல் பாடல் “ஒளியை அறியில் உருவும் ஒளியும்”  பார்க்கவும்

 

பரிசுத்த வேதாகமம்

[குமாரனாகிய] அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு (வெற்றி)  நமக்கு உண்டாயிருக்கிறது. அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். கொலோ 1:14-15

ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் (பரலோகத்தின்) மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது. வெளி 2:7


2) அகல்ஒளி தாய்இருள் ஆசற வீசும்

அந்த ஒளியான இறைவன் அகன்ற அல்லது பெரிய ஒளியாக வந்து இந்த உலகம் எல்லாம் பரவி நமது அறியாமை மற்றும் துன்பம், நீங்குவதற்காக ஒளியைக் குறையற வீசினார் அதாவது நிறைவாக வீசினார். அந்த ஒளி மனிதர்கள் மத்தியில் இருந்து இருளை அகற்றி பரலோக வாழ்வை ஏற்படுத்திக் கொடுத்தது.


பரிசுத்த வேதாகமம்

( இயேசுவுக்குள் ) அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை. உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.   யோவான் 1:4-5,9


3) பகல்ஒளி செய்ததும் அத்தா மரையில் (அத்தாம் + அரையில்) இகல்ஒளி செய்து

பொழுது விடிந்து சூரிய ஒளி உண்டாகும் வேளையில் அத்தாம் பெரிய மரத்தில் அதாவது மிகப் பெரிய மரமாகிய சிலுவையில் மரித்து அடக்கம் பண்ணப்பட்ட தெய்வம் உயிர்த்தெழுந்து,  வலிமையான பிரகாசமான பரலோகத்திற்கான வழி உண்டாக்கினார்


பரிசுத்த வேதாகமம்

வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிறபோது கல்லறையினிடத்தில் வந்து, கல்லறையின் வாசலிருக்கிற கல்லை நமக்காக எவன் புரட்டித்தள்ளுவான் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். அந்தக்கல் மிகவும் பெரிதாயிருந்தது; அவர்கள் ஏறிட்டுப்பார்க்கிறபோது, அது தள்ளப்பட்டிருக்கிறதைக் கண்டார்கள். அவர்கள் கல்லறைக்குள் பிரவேசித்து, வெள்ளையங்கி தரித்தவனாய் வலதுபக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபனைக்கண்டு பயந்தார்கள். அவன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார், அவர் இங்கேயில்லை; இதோ, அவரை வைத்த இடம்…. மாற்கு16:2-6

ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்த ஸ்தலத்தில் ( பரலோகத்தில்) பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், எபிரேயர் 10:19


4) எம் பிரான் இருந்தானே.

நம்முடைய தெய்வம் உயிர்த்தெழுந்து இன்றும் உயிரோடு கூட நம்முடன் இருக்கிறாரே. அப்படி நமக்குள் வாழும் தெய்வத்தைத் திருவள்ளுவர் இல்வாழ்வான் எனக் குறிப்பிடுகிறார். இல்வாழ்வான் பற்றி அறியப் பார்க்கவும்  

Light in the Dark-பரிசுத்த வேதாகமம்

………………….நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே. 2 கொரி 6:16

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

புகல் : புகுகை இருப்பிடம் துணை பற்றுக்கோடு தஞ்சம் உடம்பு தானியக்குதிர்  வழிவகை போக்கு சொல் விருப்பம் கொண்டாடுகை பாடும் முறை வெற்றி புகழ் புரையுள்ளது எட்டு eṭṭu   n. எட்டு-. Step; அடிவைப்பு.இரண்டு எட்டில் போய்விடுவேன். Colloq. அகல் : அகன்ற விரிந்த பெரிய பகல் pakal  s. Day, as distinguished from night, day time, பகற்காலம். 2. Mid-day, noon, மத்தியானம். (c.) 3. Light, radiance, splen dor, பிரகாசம். 4. The sun, சூரியன். [from Sa. B'haga. W. p. 61.]  அரை :பாதி இடம் இடை தொடையின் மேற்பாகம் வயிறு அல்குல் ஒரு மரம் மரத்தின் அடிப்பக்கம் தண்டு அரசியல் இகல் /Ikal/ பகை விரோதம் போர் வலிமை சிக்கல் புலவி அளவு

 
 
 

コメント


bottom of page